Friday, January 13, 2017

சங்கு முத்திரை



சங்கு முத்திரை
ம் கைகளைச் சேர்த்து இந்த முத்திரையை வைத்தால், அதன் தோற்றம்சங்குபோலவே தெரியும். உடலில், சங்கு என்பது தொண்டை பகுதியை குறிக்கும். தொண்டை, தொண்டை சார்ந்த உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க வல்லது சங்கு முத்திரை.
எப்படிச் செய்வது?
இடது கை கட்டைவிரலை வலது உள்ளங்கையில் வைத்து, வலது கையின் நான்கு விரல்களால் அழுத்தமாக மூடவும். வலது கை கட்டைவிரலின் நுனியை, இடது கை நடுவிரலால் தொட வேண்டும். மற்ற இடது கை விரல்களும் கட்டை விரலைத் தொட்டிருக்க வேண்டும்.
இந்த முத்திரையை சப்பணம் இட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர்ந்து செய்யலாம். அல்லது, நாற்காலியில் அமர்ந்து, பாதங்கள் இரண்டும் தரையில் பதியும்படி செய்ய வேண்டும். நெஞ்சுக்கு நேராக இந்த முத்திரையை வைத்துச் செய்ய வேண்டும்.
தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்; அல்லது, ஒரு நாளைக்கு மூன்று முறை எனப் பிரித்து 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
https://i2.wp.com/img.vikatan.com/doctor/2016/09/mzuwmd/images/p66b.jpg
பலன்கள்
பசியைத் தூண்டும். சுவாச மண்டலத்தைச் சீராக்கும்.
புகை, தூசி மற்றும் இதர காரணங்களால் சுவாசப் பாதையில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் தூசுக்களை அகற்ற உதவும்.
ஆஸ்துமா, தொண்டையில் சதை வளர்தல் (Tonsillitis) , அடிக்கடி தொண்டையில் புண்கள் மற்றும் அழற்சி ஏற்படுவது ஆகிய பிரச்னைகள் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்து வரநல்ல பலன் கிடைக்கும்.
சங்கு முத்திரை 72,000 நாடி, நரம்புகளைச் சுத்தப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. பின்னணி பாடுகிறவர்கள், கச்சேரி செய்பவர்களின் குரல் வளம் மேம்பட இம்முத்திரை பலனளிக்கும்.
ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள் போன்று குரலை மையப்படுத்திச் செய்யும் பணிகளில் இருப்போருக்குத் தொண்டை அழற்சி ஏற்படாமல் இந்த சங்கு முத்திரை பாதுகாக்கும்.
தைராய்டு தொந்தரவுகள் இருப்பவர் சங்கு முத்திரையைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
பேசுவதில் தடுமாற்றம், கோளாறு உள்ளவர்களும், குரல் தடித்தல், திக்கிப் பேசுதல், பக்கவாதத்துக்குப் பிறகு குரல் வராமல் தவிப்போர்களும் சங்கு முத்திரை செய்திட, நல்ல பலனை விரைவில் எதிர்பார்க்கலாம்.
மனதை அமைதிப்படுத்தி, ஒருநிலைப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் சங்கு முத்திரை பயன்படும்.