Friday, October 21, 2011

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம் -பொடுகு

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம் -பொடுகு
எனக்கு வயது 25. தலையில் அரிப்பும், பொடுகும், முடிகொட்டுவதாகவும் இருக்கிறது. தலை வறண்டு, வெடித்து, செம்பட்டை முடிகளால் அவதிப்படுகிறேன். இதற்கு ஆயுர்வேத மருந்து உள்ளதா? ஜி.லதா, சிதம்பரம்.
தலையிலுள்ள தோல் பகுதிக்கு எண்ணெய் பதமிடுவது மிகவும் அவசியம். அப்படிப் பதமிடுவதால் தலை முடிக்கும் அது பயன் தருகிறது. நீங்கள் காலையில் குளிப்பதற்கு சுமார் 3/4 மணி - 1 மணி நேரம் முன்பாக, ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய தூர்வாதி கேர (தேங்காய் எண்ணெய்) தைலத்தை பஞ்சில் முக்கி எடுத்து, தலைமுடியை நன்றாகப் பிரித்துவிட்டு, மயிர்க் கால்களில் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு, மருதாணி இலை, எள், அதிமதுரம், நெல்லிக்காய் இவற்றைப் பால் விட்டு
அரைத்துப் பால்விட்டுத் தளர்த்தி சிறிது சுட வைத்து, எண்ணெய் தடவிய தலையில் சிறிது நேரம் அப்பி ஊற வைத்துக் குளிக்க நல்லது. அதுபோலவே, கரிசலாங்கண்ணி இலையையும், நெல்லிக்காய்களையும், அதி மதுரத்தையும் அரைத்துப் பூசிக் குளிக்கலாம். இப்படிச் செய்வதால், தலைமுடியிலும், தோலிலும் எப்போதும் எண்ணெய்ப் பசை இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். உங்களுடைய கடிதத்தில் ஷாம்பு உபயோகிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சீயக்காய்த் தூள் மட்டுமே உபயோகிப்பதாகவும் எழுதியுள்ளீர்கள். இருந்தாலும் சீயக்காய் தூளிலுள்ள வறட்சியைக் குறைக்க நெல்லிக்காய் வற்றல், வெந்தயம், காய்ந்த எலுமிச்சம் பழத்தோல் முதலியவற்றுடன் சேர்த்து அரைத்து, சாதம் வடித்த கஞ்சியில் இவற்றைக் குழைத்துத் தேய்த்துக் கொள்வதும் நல்லதே.
உடல் சூட்டால், தலையில் பொடுகும், அரிப்பும் ஏற்படலாம். குடலில் மலப் பொருட்கள் தங்கத் தங்க, உடலில் அழற்சியும் சூடும் அதிகமாகும். அதனால், அதை வெளியேற்ற ஆயுர்வேத மூலிகை லேகிய மருந்தாகிய திரிவிருத் லேகியத்தைச் சுமார் 10-15 கிராம், காலையில் குடித்த கஞ்சி, செரிமானம் ஆன நிலையில், மதிய உணவுக்கு முன் நக்கிச் சாப்பிடவும். நீர்ப்பேதியாகி, குடலிலுள்ள மலமும் அழுக்கும் நீங்குவதால், உடற்சூடு நன்றாகக் குறைந்துவிடும். மாதம் ஒருமுறை இப்படிச் செய்து கொள்ளலாம்.
நீங்கள் மனதையும் அமைதியுடன் வைத்திருக்கப் பழக வேண்டும். மனதில் எழும் கோபதாபங்களால் உடல் சூடு அதிகரித்து தோலில் வறட்சி ஏற்படும். மனத்தின் அமைதிக்கான நற்பண்புகள் உங்கள் உபாதையைக் குறைக்க உதவும். இரவில் படுக்கும் முன் உள்ளங்கால்களுக்குத் தேங்காய் எண்ணெய்த் தடவி கொள்வதன் மூலமாகவும் உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளலாம்.
தலைக்கு விட்டுக் குளிக்கும் தண்ணீரும் சுத்தமானதாக இருத்தல் நலம். குளோரின், ப்ளீச்சிங் பவுடர் போட்ட தண்ணீரைத் தலையில் விட்டுக் குளித்தால், வறட்சி ஏற்பட்டு, பொடுகு ஏற்படலாம். தண்ணீரை ஒரு பாத்திரத்திலூற்றி, இரவு முழுவதும் ஆடாமல் வைத்திருந்து, மறுநாள் காலை துணியால் வடிகட்டி, தலை குளிக்கப் பயன்படுத்தவும்.
உள் மருந்தாக, நாரசிம்ஹ ரசாயனம் எனும் லேகிய மருந்தைக் காலை, மாலை 6 மணிக்கு, வெறும் வயிற்றில் சுமார் 5 - 10 கிராம் நக்கிச் சாப்பிடவும். தொடர்ந்து 3 - 6 மாதங்கள் வரை சாப்பிடலாம்.

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
நன்றி : தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அரிப்பும் தடிப்பும் நீங்க...!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அரிப்பும் தடிப்பும் நீங்க...!

என் வயது 49. வாயுவையும் பித்தத்தையும் அதிகரிக்கும்
பொருட்களைச் சாப்பிட்டால் எனக்கு உடல் அரிப்பும் தடிப்பும் தொடங்கிவிடுகிறது. ஆனால் நான் அரிப்புக்குக் காரணம் கபம் என்று படித்தேன்.
இந்த கப, பித்த, வாயுவின் சீற்றங்களைக் குறைத்து
என் உடல் ஆரோக்கியம் மேம்பட வழிகள் எவை?
ஷாகிதா, சென்னை.
மருந்தளிப்பது இருவகையாகும். ஒன்று சோதனம் -
மருந்து கொடுத்து உடலுக்குள்ளிருந்து சீற்றமுற்ற வாத பித்த கப தோஷங்களை வெளியில் வரச் செய்வது. இரண்டாவது சமனம் - உடலுக்குள்ளேயே சீற்றமுற்ற தோஷங்களைத் தணித்து நிறுத்தல்.
வாத தோஷத்திற்கான சிறந்த சோதனமுறை வஸ்தியும், சிறந்த சமனமுறை தைலமுமாகும். வஸ்தி என்றால் ஒரு குழாய் போன்ற கருவியினால் ஆசன வாய் வழியாகத் தைலம், மூலிகைக் கஷாயம்
போன்றவற்றைச் செலுத்தி, குடலைக் கழுவுவதற்கான முயற்சியாகும். நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக உடலெங்கும் தேய்த்து 1/2 - 1 மணி நேரம் ஊறி வெதுவெதுப்பான தண்ணீரில், காலையில் குளிப்பதும் அல்லது விளக்கெண்ணெயை வெதுவெதுப்பான பாலுடன் சாப்பிட்டு, குடலிலுள்ள வாயுவின் சீற்றத்தை இதமாக அடக்குவது போன்றவை சோதன - சமன முறைகளில் சிறந்தது.
பித்த தோஷத்திற்கான சிறந்த சோதன முறை விரேசனமாகும். பித்தத்தைப் பேதி மூலம் வெளியேற்றும் முறை. உடல் வலுவில்லாமல், தோஷமும் குறைவாக இருந்தால், பித்தத்தின் சீற்றத்துக்குச் சமனம் எனும் அணுகுமுறையே சிறந்தது. திக்தககிருதம், தாடிமாதிகிருதம், விதார்யாதிகிருதம் போன்ற நெய் மருந்துகளால் இது சாத்தியமாகும்.
கப, தோஷ சீற்றத்துக்குச் சிறந்த சோதனம் "வமனம்' எனப்படும் வாந்தி செய்வித்தலாகும். வாந்தி ஆகும்போது, இளகிய கபமும் வெளியேறிவிட்டால், உடல் உட்புற உறுப்புகள் சுத்தமாகும். ஆனால் வாந்தி சிகிச்சை செய்து கொள்ள முடியாத வலுவற்ற உடல் நிலைகளில், தேன் மருந்தாக அதாவது சமனம் எனும் அருமருந்தாகப் பயன் தரக்கூடும். கபத்தைக் குறைக்கும் சூரண மருந்துகளுடன் தேன் சேர்த்துக் கொடுத்தால், கபத்தின் சீற்றமானது விரைவில் மட்டுப்படும்.
தோஷங்களாகிய வாத, பித்த, கபங்களைச் சம
நிலையில் நிறுத்த உணவு, உறக்கம், உடலுறவு இவை மூன்றும் முறைப்படி யுக்தியாக அமையப் பெற உடல் நிலைத்து நிற்கும். ஒரு வீடானது தூண்களால் தாங்கப் பெறுவதுபோல் இவை மூன்றும் உடலைத் தாங்குகின்றன. உடலுறவு நடுவயதில் மட்டும் உதவும். மற்ற இரண்டும் வாழ்நாள் முழுவதும் தாங்கும் தூண்கள்.
"கபம் வினா கண்டூ:' அதாவது கபமில்லாமல் அரிப்பில்லை என்ற சித்தாந்தத்தை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். அதனால் திரிதோஷங்களாகிய வாத, பித்த, கபங்களின் சமநிலையை அடைய, முன் குறிப்பிட்ட சோதன - சமன முறைகளை நீங்கள் ஆயுர்வேத மருத்துவமனையில் எடுத்துக் கொள்ளவும்.
"ஹரித்ராகண்டம்' எனும் ஆயுர்வேத மூலிகைப் பொடி மருந்தை காலை, மதியம், இரவு 1 ஸ்பூன் (5 கிராம்) உணவுக்கு முன்பு தொடர்ந்து சாப்பிட்டு வர, உங்களுடைய அரிப்பும் தடிப்பும் குறைய, அதிக வாய்ப்பிருக்கிறது.
கருங்காலிக்கட்டைத் தண்ணீரைக் குடிப்பதும் நலமே. சுமார் 15 கிராம் கருங்காலிக் கட்டை, 1 லிட்டர் தண்ணீருடன் வேக வைத்து, 1/2 லிட்டராகக் குறுக்கி, ஒருநாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகி வரவும்.

நன்றி : தினமணி கதிர்

Sunday, October 9, 2011

இயற்கை உணவு-NATURAL FOOD HABIT

இயற்கை உணவு-NATURAL FOOD HABIT
ஸ்பேஸ் லா(வெளி விதி)
வெளி விதி என்ன சொல்கிறதென்றால் மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த
இயற்கை உணவு மிகுதியாக கிடைக்கிறதோ அதை உண்டு வந்தாலே போதும்.
வெளிநாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை. வேறு எந்த
ஜீவராசிகளும் உணவை இறக்குமதி செய்து உண்பதில்லை. அவைகள் அவை வசிக்கும்
பகுதியில் என்ன உணவு கிடைக்கிறதோ அதையே உண்டு வாழ்கின்றன. எதில் புரதச்
சத்து, மாவுச் சத்து, கொழுப்பு, விட்டமின்கள், உப்புகள் இருக்கிறது என
பார்த்து உண்பதுல்லை. ஆனால் அவை தங்களின் வாழ்நாளை ஆரோக்கியமாகவே
கழிக்கிறது. இந்தியாவில் மிகவும் எளிதாக கிடைக்கும் தேங்காய், பேரிச்சை,
வாழைப்பழம் இவற்றிலேயே வேண்டிய சத்துக்கள் அனைத்து உள்ளன. இவை வருடம்
முழுவதும் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும். மேலும் அந்தந்த
சீசனில் கிடைக்கும் பழங்களையும் உண்ணலாம். (மாம்பழம், சப்போட்டா,
தர்பூஸ் போன்றவை). விலை அதிகமான பழங்களை வாங்க இயலாதவர்கள் தேங்காய்ப்
பால், காய்கறிகளின் ஜுஸ்கள், கீரை(புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை,
பாலாக்கு) ஜுஸ்கள் பருகலாம். டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்,
புரதச்சத்து கொண்ட உணவுகள், ஆரோக்கிய பானங்கள் தேவையில்லை. இயற்கை உணவு
உண்டால் போதிய பலம் கிடைக்குமா என்ற சந்தேகம் கொண்டவர்கள் வெறும் இலை
தழைகளை மட்டுமே உண்டு வாழும் யானையையும் அது கொண்டுள்ள அபார வலிமையையும்
நினைத் துப் பார்க்கவேண்டும். யானை வேற்று ஜீவராசிகளின் பாலையும்
அருந்துவதில்லை. முட்டையையும் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதில்லை.

சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு
குறைக்க வேண்டியது மாற்று உணவு
(1) சர்க்கரை வெல்லம், கரும்பு சர்க்கரை கருப்பட்டி
(2) பொடி உப்பு கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு கரையும் கொழுப்பு
கொண்ட எண்ணெய் கொண்ட எண்ணெய்
(4) மிளகாய் மிளகு
(5) புளி எலுமிச்சை
(6) கடுகு சீரகம்
(7) காபி,டீ லெமன் டீ, ப்ளாக் டீ,
சுக்கு
காப்பி, வரக்காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி அவல், சிகப்பரிசி

இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம் தவிர) சமைத்த உணவை
தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும். இவை இயற்கை உணவு அல்ல.
இவற்றினால் சிறிது தீமை குறைவு.
சாறு உண்ணா நோன்பு (ஜுஸ்பாஸ்டிங்)

வெறும் நீர் அருந்தி உண்ணா நோன்பு இருக்க முடியாத பட்சத்தில் சாறு
உண்ணா நோன்பு இருக்கலாம். இதில் பழச்சாறுகள் மட்டுமே அருந்த வேண்டும்.

நன்மைகள்:
(1) உணவு திரவ வடிவில் இருப்பதால் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஆற்றல்
மிகவும் குறைவு. எனவே உடலின் ஆற்றல் முழுவதும் கழிவுகள்
வெளியேற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.
(2)உடல் எளிதாக ஆற்றலை கிரஹித்துக் கொள்ளும்.
(3)சாறுள்ள பழங்களின் ஜுஸ்கள் (திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி,
மாதுளம் பழம் போன்றவை) அதிகமான க்ளுக்கோஸ் சத் துக்களை கொண்டுள்ளதால்
உடல் நிலை பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உதவுகிறது.
(4) மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இதை ஜீரணிக்க எளிதாக உணருவர்.
சாறு உண்ணாநோன்பின் போது கவனிக்க வேண்டியவை
(1) திரவ வடிவில் இருப்பதால் நார்ச்சத்து கிடைப்பதில்லை.
(2) மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி இருப்பவர்களுக்கு இது உகந்தது
அல்ல. அவர்கள் இயற்கை உணவை உள்ளது உள்ள படியே (நார்ச்சத்துடன்) உண்ண
வேண்டும்.
(3) சாறுண்ணா நோன்பின் போது மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் ஒரு நாளைக்கு
ஒரு முறை எனிமா எடுத்துக் கொள்ளலாம்.
இயற்கை உணவும் இரத்தத்தின்தன்மையும்

இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது. இயற்கை உணவும் காரத்தன்மை
உடையது. எனவே இயற்கை உணவு எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன்
செய்யும். ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது.
எனவே அது இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும். ஆனால் உடலோ மீண்டும்
இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும். அந்த போராட்டத் தில் உடல்
தோல்வியடையும் போது நாம் நோய்வாய்ப்படுகிறோம்.

அக்கு பிரஷர்(ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி?)

இது நோய்கள் நீங்க கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் கொடுக்கும்
ஒரு முறையாகும். (இது அக்குபங்சர் கிடையாது. இதற்கு ஊசியோ முறையான
படிப்போ தேவையில்லை), ஆனால் அக்குபிரஷர் மட்டுமே நோய்களை குணமாக்க
போதுமானதல்ல. இயற்கை உணவு உண்பதே நோய் குணமாக அஸ்திவாரமாகும்.
இயற்கை உணவும் உண்டு அக்கு பிரஷரையும் செய்து வந்தால் நோய் விரைவில்
குணமடையும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலிருந்து வ ரும் நரம்புகளும்
உள்ளங்காலில் மற்றும் உள்ளங்கையில் முடிவடைகிறது என்ற் உண்மையை கொண்டு
அக்குபிரஷர் செயல்படுகிறது. பாதிக்கப்ப ட்ட பாகத்திற்குரிய பாயிண்டில்
நாம் நம் கைகளில் மற்றும் கால்களில் அழுத்தம் கொடுத்தால் ஒரு சிறிய
மின்காந்த அலை எழும்பி பாதிக்கப்பட்ட உறுப்பை சென்று அடைகிறது. இதனால்
பாதிக்கப்பட்ட பகுதி குணமடைய ஆரம்பிக்கிறது.
வலியுள்ள இடத்தில் அழுத்த வேண்டும் என்பது அக்குபிரஷரின் விதியாகும்.
பாதிக்கப்பட்ட பாகத்திற்குரிய பாயிண்டில் நாம் அழுத்தம் கொடுக்கும்
பொழுது நோயின் தன்மைக்கேற்ப வலி தெரியும். (இந்த வலி கொடுக்கப்படும்
அழுத்தத்தை விட வித்தியாசமாக இருக்கும்.) வலி அதிகமாக இ ருந்தால் அந்த
உறுப்பு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அதற்கு
பயப்படத்தேவையில்லை. இயற்கை உணவு உண்டு அக்கு பிரஷரும் சரியாக செய்து
வந்தால் நோயிலிருந்து விரைவில் விடுபடலாம்.

நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவையாவன:
(1)பிட்யுட்டரி
(2)பீனியல்
(3)அட்ரீனல்
` (4) பான்கிரியாஸ்
(5) நாபிச் சக்கரம்
(6) தைராய்டு
(7) பாலியல் சுரப்பிகள் ஆகும்.

இவை ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவை சரியாக செயல்பட்டால் ஒருவர் அன்பு, தைரியம், கருணை, வைராக்கியம்,
பொறுமை, எளிமை, பொது நலம், சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பர்.
இவை சரியாக செயல் படாவி ட்டால் அதிக காமம், கோபம், பிடிவாதம்,
அமைதியின்மை, சிடுசிடுப்பு, ஆடம்பர பொருட்கள் மேல் மோகம், கோழைத்தனம்,
அதிக ஆசை, சுயநலம், சோம்பேறித்தனம், சோர்வு, தற்கொலை எண்ணம், திருடும்
எண்ணம், கொடூரம், பயம் போன்றவற்றுடன் காணப்படுவர். எனவே மனரீதியான
பிரச்னை உள்ளவர்கள் இயற்கை உணவு, தியானம் மற்றும் அக்குபிரஷர்(முக்கியமாக
நாளமில்லா சுரப்பிகளில் எந்த சுரபி குறைபாடுடன் இ ருக்கிறது என
கண்டுபிடித்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்) செய்து வந்தால்
வியக்கத்தக்க மாறுதல்களை காணலாம். குற்றவாளிகளை கூட இந்த சிகிச்சை
முறையால் திருத்தி விட முடியும்.

நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில்
விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம். மேலும்
சீப்பு, துணிகிளிப், ரப்பர் பாண்டு, மரக்குச்சி, துணி துவைக்கும் பிரஷ்
கூட பயன்படுத்தலாம். இவைகளை கொண்டு நாம் டிவி பார்க்கும் பொழுதும்,
கணினியில் வேலை செய்யும் பொழுதும், புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட
நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர் கொடுக்கலாம். நாளமில்லா
சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க
வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 'நம் நலம் நம் கையில்’ என்ற தேவேந்திர வோரா
அவர்கள் எழுதிய புத்தகம் உதவும். இந்த புத்தகம் நமது பாரத பிரதமராக
இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் பாராட்டப்பட்ட புத்தகமாகும். அவர் 90
வயது வரை வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த புத்தகம் மேலும்
ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.
பல்வேறு நோய்களுக்கு (கேன்சர், மூளைப் புற்று, எய்ட்ஸ், நீரிழிவு, இரத்த
அழுத்தம் உட்பட) அழுத்தம் கொடுக்க வேண்டிய பாயிண்டுகள் புத்தக த்தின்
பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து நாமே நமக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டிய பாயிண்டுகளை கண்டுபிடிக்கலாம்.

கெட்டப் பழக்கங்களான புகை, புகையிலை, குடிப்பழக்கம், போதை மருந்து
போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டிய பாயிண்டு களும் இந்த புத்தகத்தில்
தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. நமக்கு நாமே டாக்டராகிவிடலாம். நமக்குரிய
சிகிச்சையை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

உண்ணா நோன்பு

ஸ்பெயின் பொன்மொழி: 100 வைத்தியர்களை அழைப்பதை விட ஒரு வேளை உணவை இழப்பது மேலானது.
ஸ்காட்லாந்து பொன்மொழி:தனக்கு நோய் உண்டாகும் வரை உண்ணும் ஒருவன் நோய்
குணமாகும் வரை உண்ணாமலிருக்க வேண்டும்.
உண்ணா நோன்பு ஒரு உயரிய மருந்தாகும். அது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு
தருகிறது. பஞ்சத்தால் பட்டினியால் மரணம் அடைபவர்களை விட பெருந்தீனீ
உண்டு மரணம் அடைபவர்களே அதிகம். விலங்குகள் கூட உடல் நிலை
சரியில்லையென்றால் உண்ணாவிரதம் இருக்கும். மனிதன் மட்டுமே உடல் நிலை
சரியில்லாத போதும் உண்டு உடலை சீரழிக்கிறான்.

உண்ணா விரதம் இருப்பது எப்படி?
தாகம் எடுக்கும் போது தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். இயலாதவர்கள்
பழரசங்கள் அருந்தலாம். சிறிது உடல்நிலை தேறிய பிறகு சாறுள்ள பழங்கள்
(திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி, ஆரஞ்சு) போன்ற பழங்களையும்
பிறகு சதையுள்ள (ஆப்பிள், பப்பாளி) முதலிய பழங்களையும் உண்ணலாம். உடல்
நிலை சீரான பிறகு கொட்டை பருப்புகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உண்ணவிரதம் இருக்கும் போது ஓய்வெடுப்பது அவசியம். காற்றோட்டமுள்ள
இடங்களில் ஓய்வெடுப்பது நல்லது. நம் ஆற்றலை உறிஞ்சும் வேலைகளான டிவி
பார்ப்பது, அதிகம் பேசுவது, இசை கேட்பது, அதிக தொலைவு நடப்பது போன்றவை
கூடாது. வாழ்க வளமுடன்