Tuesday, August 30, 2011

அறிவின் முழுமை, வேதாத்திரியின் பெருமை.

அறிவின் முழுமை, வேதாத்திரியின் பெருமை. I.

ஆதியிலே இருந்தது, சுத்த வெளி; அது மெய்.
அதிலே அறிவு, ஆற்றல், இருப்பு, காலம் அடங்கும்.
இதன் வெளிப்பாடு தான், பிரபஞ்சம் அனைத்தும்.
இதன் தெளிவு இறையியல்.

சுத்த வெளி தன்னிறுக்கத்தால் எதிர்மறை விசையாகி,
சுத்தும் வெளியானது. அவை தான் துகள்கள்.
துகள்களின் வேக வேறுபாடுகள் மூலகங்கள் ஆயின.
இதை அறிவது தான் இயற்பியல்.

இயற்பியல் மூலகங்கள் ஒன்றுக்கொன்று
இணைந்து, கூடி, தரம் மாறி
பல கோடி பொருட்கள் ஆயின.
மூலகங்களின் மாற்றங்களை உண்ர்த்துவது தான் வேதியல்.
II.

இயற்பியல் வேதியலின் கூட்டுத்துளி தான் உயிர்.
இது தனித்து தன் இயக்கமாக மாற்றம் பெற்றது.
உயிர் உணர் கருவிகள் பிரபஞ்ச தொடர் நிலையம்.
இதை அறிவது தான் உயிரியல்.

உணர் கருவிகளின் உன்னத பரிணாமம் தான் மனம்.
மனதின் அலை மாற்றங்களே, குண மாற்றங்களாயின.
மனமறிய மனத்தின் மாண்பை அறிந்தோம்
இந்த அறிவு தான் உளவியல்.

உயிர்களின் இனப்பெருக்கம் கூடி வாழும் நிலையேற்படுத்தியது.
மனிதரில் இது ஒழுக்கத்தை வலியுறுத்தியது.
இதுவே அறநெறியாக மலர்ந்தது.
இதை அறிவது தான் சமூகவியல்.
III.

சமூகவியல் தந்தது அன்பு, கருணை, தொண்டு உள்ளம்.
இது விரிந்து விரிந்து மூலத்தை ஆராய உணர்ந்தது சுத்த வெளி மெய்ப்பொருள்.
ஆதியே மீண்டும் இங்கு அந்தம் ஆனது.
இதை உணர்வது தான் இறையியல்.

புறப்பட்ட இடம் சேரும் நிலை வீடு.
வீடு பெற நில் - அறிந்தோர் வாக்கு.
அகத்திலே தொடங்கிய வாழ்க்கை புறத்திலே பயணம் செய்து
மீண்டும் அகத்திலேயே முடிகிறது.
அது தான் அறிவின் முழுமை, வேதாத்திரியின் பெருமை.
-Vethathiridasan Madhavan

Sunday, August 14, 2011

சிந்தனை விருந்து பூர்ணப் பொருள்

சிந்தனை விருந்து பூர்ணப் பொருள்

பிரபஞ்சத்தில் காணும் எந்தப் பொருளும் அணுக்களின் கூட்டமே.சக்தி என்றாலும்,வேகம் என்றாலும் ஒன்றே.வேகம் என்பது
பிறக்கும் இடம் அணுவேயாகும்.அணுவில் ஒரு வேகம் இருக்கின்றதென்றால் அது ஒரு குறைநிலையாக இருந்து நிறைவான ஒன்றை
நாடி எழுகிறது என்பதுதான் பொருள்.குறை என்பது நிறைவான சிந்தனை விருந்து
பூர்ணப் பொருள்
ஒன்றைஇணை வைத்தும்,ஆதாரமாகவும் கொண்டுஇருக்கும் ஒரு மாறுபட்டநிலை.ஆகவே அணு என்ற ஒரு குறை நிலைக்கு மூலமும் முடிவுமாக இருப்பது ஒரே பூரணப்பொருள்தான் என்று விளங்குகிறது.
அணுவைக் கடந்த ஒரு பொருளோ, அணுநிலையைக் கடந்த ஒரு நிலையோ உண்டு எனில் அது வெட்டவெளியைத் தவிர வேறோன்ரும்மில்லை. ஆகவே,வெட்டவெளி என்ற தத்துவமை அனைத்திற்கும் ஆதாரமாகவும்,மூல சக்தியாகவும் உள்ளசர்வ வல்லமையும் உடைய ஒரு உறுதிபொருள் என்றும் அதுவேஆதியாகவும்,அனாதியகவும் உள்ள பூரணப்பொருள் எனவும் திடமாகக் கூறுகிறேன்.
இயற்கையில் ஆதி நிலை என்றும் சிவம் என்றும் தெய்வம் என்று பேசப்படுகிறது இதுவே.
ஒரு மனிதன் விந்து நாதத் தொடர்பைப் பின் நோக்கி ஆராய்ந்து கொண்டே போனால் அது பல்லாயிரம் ஜிவராசிகளைக் கடந்து
கடைசியாக அணுவிலேதான் போய் முடிவு பெறும்.அணுவின் மூலமோ மேலே விளக்கிய வெட்டவெளிதான் என்றும் தெரிந்துவிடும்.
அங்கிருந்து முன்நோக்கிப் பார்த்தல் பிரபஞ்சமாக விரிந்துள்ள அனைத்துமே ஒரே மூலத்தை அடிப்படயாகக் கொண்டே இயங்கிக்
கொண்டிருக்கு உண்மை அறிவுக்கு அகக்காட்சியாகும். வாழ்க வளமுடன்" -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
by Arulnithi Ramasamy Pal Pandian