Tuesday, August 30, 2011

அறிவின் முழுமை, வேதாத்திரியின் பெருமை.

அறிவின் முழுமை, வேதாத்திரியின் பெருமை. I.

ஆதியிலே இருந்தது, சுத்த வெளி; அது மெய்.
அதிலே அறிவு, ஆற்றல், இருப்பு, காலம் அடங்கும்.
இதன் வெளிப்பாடு தான், பிரபஞ்சம் அனைத்தும்.
இதன் தெளிவு இறையியல்.

சுத்த வெளி தன்னிறுக்கத்தால் எதிர்மறை விசையாகி,
சுத்தும் வெளியானது. அவை தான் துகள்கள்.
துகள்களின் வேக வேறுபாடுகள் மூலகங்கள் ஆயின.
இதை அறிவது தான் இயற்பியல்.

இயற்பியல் மூலகங்கள் ஒன்றுக்கொன்று
இணைந்து, கூடி, தரம் மாறி
பல கோடி பொருட்கள் ஆயின.
மூலகங்களின் மாற்றங்களை உண்ர்த்துவது தான் வேதியல்.
II.

இயற்பியல் வேதியலின் கூட்டுத்துளி தான் உயிர்.
இது தனித்து தன் இயக்கமாக மாற்றம் பெற்றது.
உயிர் உணர் கருவிகள் பிரபஞ்ச தொடர் நிலையம்.
இதை அறிவது தான் உயிரியல்.

உணர் கருவிகளின் உன்னத பரிணாமம் தான் மனம்.
மனதின் அலை மாற்றங்களே, குண மாற்றங்களாயின.
மனமறிய மனத்தின் மாண்பை அறிந்தோம்
இந்த அறிவு தான் உளவியல்.

உயிர்களின் இனப்பெருக்கம் கூடி வாழும் நிலையேற்படுத்தியது.
மனிதரில் இது ஒழுக்கத்தை வலியுறுத்தியது.
இதுவே அறநெறியாக மலர்ந்தது.
இதை அறிவது தான் சமூகவியல்.
III.

சமூகவியல் தந்தது அன்பு, கருணை, தொண்டு உள்ளம்.
இது விரிந்து விரிந்து மூலத்தை ஆராய உணர்ந்தது சுத்த வெளி மெய்ப்பொருள்.
ஆதியே மீண்டும் இங்கு அந்தம் ஆனது.
இதை உணர்வது தான் இறையியல்.

புறப்பட்ட இடம் சேரும் நிலை வீடு.
வீடு பெற நில் - அறிந்தோர் வாக்கு.
அகத்திலே தொடங்கிய வாழ்க்கை புறத்திலே பயணம் செய்து
மீண்டும் அகத்திலேயே முடிகிறது.
அது தான் அறிவின் முழுமை, வேதாத்திரியின் பெருமை.
-Vethathiridasan Madhavan

No comments: