Friday, July 6, 2012

ருத்ராக்ஷம்

ருத்ராக்ஷம் அணிவோம் .... வாருங்கள்....

"இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத்திரம். சனியை இரண்டு பக்கத்திலும் வைக்கலாம். செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்றும் சைவக் கிரகங்கள், சைவக் கடவுள்கள் ஆகும். செவ்வாய் – முருகன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள். அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள்..."

சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத்திரம். சனியை இரண்டு பக்கத்திலும் வைக்கலாம்.
செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்றும் சைவக் கிரகங்கள், சைவக் கடவுள்கள் ஆகும். செவ்வாய் – முருகன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள்.

இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள். அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக் கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை. ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன.

பல்வேறு நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன.
ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.

அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லாம் வந்தாலே பலர் தானே ருத்ராட்சத்தை விரும்பி அணிவதைப் பார்த்திருக்கிறேன். ஏழரை சனி, அஷ்டமத்து சனி வந்தால் பழமையானவற்றை விரும்புவார்கள். ருத்ராட்சம், யானை தந்தம், யானை முடி மோதிரம் போன்றவற்றை அணிவார்கள்.

மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக அல்லது அந்தப் பொருளின் மீதுள்ள ஒரு நம்பிக்கையினால் அவ்வாறு செய்வார்கள்.

சனி தசை நடக்கும்போது தன்னம்பிக்கையை விட மற்ற பொருட்களின் மீதுதான் நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதனால் நமக்கு நன்மை அளிக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள்.
சனி ராசி உள்ளவர்களும் ருத்ராட்சத்தை விரும்பி அணிவார்கள். மகரம், கும்ப ராசிக்காரர்கள் ருத்ராட்சத்தை விரும்புவார்கள். ருத்ராட்சத்தை அணியலாம். அதனால் நல்ல பலன்கள்தான் கிட்டும்.

புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.

ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

இளநீரை வெறும் வயித்துல குடிக்காதீங்க..!!!

இளநீரை வெறும் வயித்துல குடிக்காதீங்க..!!!

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இளநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்ற வழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் அப்படி சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட நினைப்பது 100% தவறு. சொன்ன ஆச்சரியப்படுவீங்க, இளநீரை சாப்பிட்டால்கூட ஃபுட் பாய்ஸன் ஆகுமாம். மேலும் உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையும் அதிகம் இருக்கிறது. அது எப்படியென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

உதாரணமாக ஒரு சூடான மண் பாத்திரத்தில் தண்ணீரை விடும் போது, உடனே அது வெடித்து விரிசல் விடும் அல்லவா... அது போல தான் நம் வயிறும் அந்த தன்மையை உடையது. இரவில் தூங்கி காலையில் எழும் போது வயிறு சற்று சூடாக, எரிச்சலாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். அப்படி இருக்கும் போது அதிக குளிர்ச்சியை உடைய இளநீரை குடிக்கும் போது, சில நேரங்களில் உடலில் உள்ள இரத்த நாளங்கள் வெடிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

மேலும் இளநீரில் குளுக்கோஸ், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. அதை குடிக்கும் போது அவற்றை செரிமானப்படுத்த கிட்னி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சில சமயங்களில் அந்த கிட்னியால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடும், அதனாலும் உடலுக்கு பாதிப்புகள் வரலாம்.

வெறும் வயிற்றில் இளநீரை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் ஆவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே உணவு இடைவேளையில் இளநீரை சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது.

அதேப்போல் இளநீரை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். அதை விட்டு பாத்திரங்களில், பாட்டில்பளில் ஸ்டாக் வைத்து சாப்பிடுவதெல்லாம் மிகவும் ஆபத்தானது. மேலும் கடைகளில் இருந்து இளநீரை வாங்கும் போது, இளநீரானது நன்கு ஃப்ரஷ்ஷாக இருந்தால் மட்டும் வாங்கி சாப்பிட வேண்டும்.

இளநீரானது பறித்து வாரக்கணக்கில், மாதக்கணக்கில் இருந்த மாதிரி காய்ந்து போய் தோன்றினால், அதை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். இல்லாவிட்டால் அதனாலும் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும். இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது தான். ஆனால் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
இளநீரை வெறும் வயித்துல குடிக்காதீங்க..!!!

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இளநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்ற வழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் அப்படி சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட நினைப்பது 100% தவறு. சொன்ன ஆச்சரியப்படுவீங்க, இளநீரை சாப்பிட்டால்கூட ஃபுட் பாய்ஸன் ஆகுமாம். மேலும் உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையும் அதிகம் இருக்கிறது. அது எப்படியென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

உதாரணமாக ஒரு சூடான மண் பாத்திரத்தில் தண்ணீரை விடும் போது, உடனே அது வெடித்து விரிசல் விடும் அல்லவா... அது போல தான் நம் வயிறும் அந்த தன்மையை உடையது. இரவில் தூங்கி காலையில் எழும் போது வயிறு சற்று சூடாக, எரிச்சலாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். அப்படி இருக்கும் போது அதிக குளிர்ச்சியை உடைய இளநீரை குடிக்கும் போது, சில நேரங்களில் உடலில் உள்ள இரத்த நாளங்கள் வெடிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

மேலும் இளநீரில் குளுக்கோஸ், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. அதை குடிக்கும் போது அவற்றை செரிமானப்படுத்த கிட்னி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சில சமயங்களில் அந்த கிட்னியால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடும், அதனாலும் உடலுக்கு பாதிப்புகள் வரலாம்.

வெறும் வயிற்றில் இளநீரை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் ஆவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே உணவு இடைவேளையில் இளநீரை சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது.

அதேப்போல் இளநீரை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். அதை விட்டு பாத்திரங்களில், பாட்டில்பளில் ஸ்டாக் வைத்து சாப்பிடுவதெல்லாம் மிகவும் ஆபத்தானது. மேலும் கடைகளில் இருந்து இளநீரை வாங்கும் போது, இளநீரானது நன்கு ஃப்ரஷ்ஷாக இருந்தால் மட்டும் வாங்கி சாப்பிட வேண்டும்.

இளநீரானது பறித்து வாரக்கணக்கில், மாதக்கணக்கில் இருந்த மாதிரி காய்ந்து போய் தோன்றினால், அதை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். இல்லாவிட்டால் அதனாலும் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும். இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது தான். ஆனால் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.

Thursday, July 5, 2012

அறிவை வளர்க்க எளிய வழிகள்…

அறிவை வளர்க்க எளிய வழிகள்…

இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர். அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள். உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது. அறிவை வளர்க்க சில டிப்ஸ்….

1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.

2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர். ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை. மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும். ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக ‘ஜாக்கிங்’ செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.

3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர். மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.

4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும். மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.

5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும். உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம். இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

Wednesday, July 4, 2012

16 செல்வங்கள்

16 செல்வங்கள்


பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள்.
இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும்.
1. வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி,
2. நீண்ட ஆயுள்,
3. நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள்,
4. வாழ்க்கைக்கு தேவையான செல்வம்,
5. உழைப்புக்கு தேவையான ஊதியம்,
6. நோயற்ற வாழ்க்கை,
7. எதற்கும் கலங்காத மனவலிமை,
8. அன்புள்ள கணவன் மனைவி,
9. அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள்,
10. மேன்மேலும் வளரக்கூடிய புகழ்,
11. மாறாத வார்த்தை,
12. தடங்கலில்லாத வாழ்க்கை,
13. வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல்,
14. திறமையான குடும்ப நிர்வாகம்,
15. நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு,
16. பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.
இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

ஆன்மிக சிந்தனைகள் »விவேகானந்தர்

ஆன்மிக சிந்தனைகள் »விவேகானந்தர்

கடவுளுக்கு அர்ப்பணியுங்கள்

* ஆன்மிக உயர்வு பெற வேண்டுமானால் மனதில் குறுகிய எண்ணங்களுக்கு இடம் தராதீர்கள்.

* தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விடும் துணிவு பக்திக்கு மிக அவசியம்.

* எப்போதெல்லாம் சுயநலம் நமக்குள் எழுகிறதோ அப்போதெல்லாம் மன ஆற்றல் அனைத்தும் நாலாபுறமும் சிதறுகிறது.

* எப்போதும் உழைத்துக் கொண்டே இருங்கள். ஆனால், செயலால் ஏற்படும் விளைவு மனதில் பதிவுகளை உண்டாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* புலன்கள் என்னும் குதிரைகளை மனம் என்னும் கடிவாளத்தால் இழுத்துப் பிடியுங்கள்.

* அறியாமை நம்மிடம் இருக்கும் வரை நம்மை விட்டுத் துன்பங்கள் விலகாது. இதற்கு ஒரே தீர்வு நாம் ஆன்மிக வலிமை மிக்க தூய்மையானவர்களாக மாறுவது தான்.

* நாய்க்கு சோறு இடுவதாக இருந்தாலும் அதற்குள் இருக்கும் கடவுளுக்குத் தான் நீங்கள் சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.

- விவேகானந்தர்

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.