Monday, August 13, 2012

முளைக் கட்டிய தானியம்

முளைக் கட்டிய தானியம் ..பகுதி -II

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும், தியாமின், நியாசின் போன்ற வைட்டமின்களும் இவற்றில் அதிகம் காணப்படுகிறது.

100 கிராம் பயறில் 24.5 கிராம் புரதம், 140 மிகி. கால்சியம், 30 மி.கி. பாஸ்பரஸ், 8.3 மி.கி. இரும்புச்சத்து, 0.5மி.கி. தயாமின், 0.3மி.கி. ரிபோபிளேவின், 2.0மி.கி. நியாசின் போன்றவை உள்ளது.

சராசரியாக பயறு வகைகளில் 345 கிலோ எரி சக்தியும் உள்ளன.

பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ அமிலங்களும், சல்பர் குறைவாகவும் லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றது. ஆனால், தானியங்கள் லைசின் குறைவாக கொண்டவை. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையை தவிர்த்திடும்.

பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் அதிகமாக வைட்டமின்கள் காணப்படுகின்றன.

இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. முளைக் கட்டிய கொண்டைக் கடலையில் ஐசோ பிளோவின் பையோ கேனின் ஏ எனும் ஹார்மோன் அதிகமாக காணப்படுகின்றது. இந்த ஹார்மோன் ஒரு சிறப்பான குணத்தைக் கொண்டது. அதனால் இந்த ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பு கொலஸ்ட்ரால் சத்தை குறைக்க வல்லது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் இரத்த நாளங்களில் உட்புறம் படிந்துள்ள கொழுப்பை உருக்கி வெளியேறும். மேலும் கொழுப்பு இரத்த நாளங்களில் படியாத வகையில் உதவிடும்.

ஜீரண சக்தி குறைவு மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் பயறு வகைகளை குறைத்து உட்கொள்வது அவசியம்.

No comments: