Saturday, July 23, 2011

சைவமா? அசைவமா?-ஒரு கருத்தாய்வு

சைவமா? அசைவமா?-ஒரு கருத்தாய்வு
எந்த உயிரையும் உட்கொள்ளாத உயிரினம் சைவம் என மனிதர்களால் கூறப்படுகிறது. ஆனால், மனிதர்களில் சைவம் உண்டா என இனி அலசுவோம்.


பூமியில் இருக்கும் உயிரினங்களை இருவகைப்படுத்தலாம்.

1.இடம்பெயரா உயிரினங்கள். 2.இடம்பெயரும் உயிரினங்கள்



இடம் பெயரா உயிரினங்கள் என்பது மரம் ,செடி, கொடி போன்ற உயிரினங்கள்.

இடம் பெயரும் உயிரினங்கள் என்பது மனிதன்,வீட்டு விலங்குகள்,காட்டு விலங்குகள்,பறவைகள்,மீன்கள் இன்னும் பல.



இடம்பெயரா உயிரினங்கள் நேரடியாக தனக்கு தேவையான உணவை பூமியிலிருந்தும்(நீர் மற்றும் தாதுக்கள்), சூரியனிடமிருந்தும் (வெப்பம்,ஸ்டார்ச்) எடுத்துக்கொள்கிறது.(இவைகள்தான் சைவம்,ஏனென்றால் இவைகள்தான் பஞ்சபூதங்களிலிருந்து நேரடியாக உணவை எந்த உயிரையும் கொல்லாமல் எடுத்துக்கொள்பவை.)

சில வகை மரம்,செடிகள் சிறு பூச்சிகளையும் விலங்குகளையும் பிடித்து அவற்றின் உடலில் உள்ள நீர்ச்சத்துக்களை உறிஞ்சக்கூடியவையும் உண்டு.(இவை அசைவ தாவரங்கள்)

அநேகமாக,சைவமா அசைவமா என சர்ச்சை பண்ணும் உரிமை மரம்,செடி,கொடிகளுக்கு மட்டும்தான் இருக்கமுடியும்



இடம்பெயரும் உயிரினங்கள், மற்ற இடம்பெயரும் உயிரினங்களையும் இடம் பெயரா உயிரினங்களையும் தின்று வாழ்கின்றன.



மொத்தத்தில், இந்த பூமியில் வாழும் அனைத்து இடம்பெயரும் உயிரினமும் மற்றொரு உயிரைத்தின்றே வாழ்கின்றன. பஞ்சபூதங்களிடமிருந்து நேரடியாக உணவைப்பெறும் மனிதர் யாரேனும் இருந்தால் அவர்தான் சைவம்.அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. ஆக, எந்த மனிதனும் சைவம் இல்லை.



(பின்குறிப்பு; ஆகவே,உயிரினத்தை வைத்து சைவமா அசைவமா என நாம் பேசுவதில் அர்த்தமில்லை. இனி,உண்ணும் வழக்கத்தை மட்டும் வைத்து பார்த்தால் தாவரங்களை உண்பவர்களை தாவர உண்ணிகள் எனவும் இரத்தம் வெளியேறி துடிதுடித்து சாகும் உயிரினங்களை உண்பவர்கள் மாமிச உண்ணிகள் எனவும் கூறிப்பழகுவோம்.)

by Kumar Ilang

வாழ்க வளமுடன்
குருவே துணை

No comments: