Thursday, June 21, 2012

இயற்கை

வேதாத்திரிய சிந்தனைகள் : - " இயற்கை "

இயற்கையின் ஆதிநிலை பிரம்மம் ஆகும்
எண்ணும் இரசிக்கும் நிலையில் இதே அறிவாம்
இயற்கையினை ஈசன், உலகம், உயிர்கள்
எனப் பிரித்துப் பேசிடினும் பொருத்தமேதான்
இயற்க்கையின் உச்ச நிலையாக உள்ள
எண்ணத்தைப் பண்படுத்தி நுணுகி ஆராய்ந்தால்
இயற்கை அறிவு இரண்டும் ஒன்றாய்க் காணும்
இதுவே தன்னிலை விளக்கம் அறிந்து சொன்னேன்.-மகரிஷி

இந்தப் பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்துமே
இறைநிலையின் தன்மாற்றமே. இவை அனைத்துமே
இயற்கை என அழைக்கப்படுகிறது. இயற்கையின் மூலம்
சுத்தவேளிஎனும் இறைநிலையே. இயற்கையை இரசிப்பது,
நினைத்துப் பார்ப்பதும் அறிவாக விளங்கும் இறைநிலையே.
இயற்கையின் இறுதித் தன்மாற்றமாகிய மனித மனத்தைக்
கொண்டு ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இயற்கை, அறிவு
இரண்டும் ஒன்றே என்று தெளிவாகப் புலனாகும்.
இந்நிலையே தன்னையறிதல் எனும் சுய ஆராய்ச்சியாகும்.
பார்ப்பது, பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் அனைத்தும்
ஒன்றே. அனைத்தும் இயற்கை எனும் இறைநிலையின்
எழ்ச்சி நிலையே ஆகும். வாழ்க வளமுடன்.

No comments: