Wednesday, February 16, 2011

பாதுகாப்பு படைவீரர்களுக்கு மனவளக்கலை பயிற்சி..1

பாதுகாப்பு படைவீரர்களுக்கு மனவளக்கலை பயிற்சி..1
பொள்ளாச்சி:"வட மாநிலங்களில், மலை பிரதேசத்திலுள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு வேதாத்திரியின் மனவளக்கலை யோகா குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது' என, ஆழியாறில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் நான்காவது மருத்துவர் கருத்தரங்கு நேற்று துவங்கியது. உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தம் வரவேற்றார். கோவை மருத்துவ கல்லூரி டீன் விமலா தலைமை வகித்தார்.புதுடில்லி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் (டி.ஆர்.டி.ஓ.,) இணை இயக்குனர் ராமசந்திரன் பேசியதாவது:பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மூலம் மன வளக்கலை யோகா குறித்து ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. இந்த யோகா மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது, யோகாவின் பயன் ஆகியவை குறித்து ஆராயப்படுகிறது.மனவளக்கலை என்பது மனித உணர்வுகளை புரிந்து கொள்ளகூடிய ஒரு எளிய வழிமுறையாகும். நோயாளிகளின் பிரச்னைகளை மருந்துகளின் மூலம் நிவர்த்தி செய்வதைவிட, மனரீதியாக தீர்க்க வேண்டும். அப்போதுதான், நோயாளிகளுக்கு எளிதாக சிகிச்சையளிக்க முடியும். உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களிடம் எளிதாக மருத்துவ சிகிச்சைகளை கொண்டு செல்லலாம்.மனதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையை கொண்டு செல்வது கடினம். மனவளக்கலை மூலமாக நோயாளிகளுக்கு கட்டாயமாக மன அமைதியை ஏற்படுத்த முடியும்.போர் பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தும் போது ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனவே, டி.ஆர்.டி.ஓ., மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மனவளக்கலை யோகா புகுத்தப்படுகிறது. வடப்பகுதியில், மலை சார்ந்த இடங்களில் அதிக பனி பொழிவுக்கு நடுவில், பாதுகாப்பு படையினர் பணியாற்றி வரும் சூழல் உள்ளது.மற்ற பகுதிகளை போன்று மலை பிரதேசங்களில், கால நிலை இருக்காது. இதனால், உடலில் வலிமை இழக்கும் வாய்ப்புள்ளது. மனவளக்கலை யோகா கற்று அதை பயன்படுத்துவதன் மூலம் மலை பிரதேசத்திலும், சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டாலும் இயல்பாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை, குண்டலினி யோகா ஆகியவற்றை விஞ்ஞான பூர்வமாக அனைத்து மருத்துவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். யோகா மூலமாக அனாவசியப் பிரச்னைகளை தவிர்ப்பதுடன் நோய்கள் உண்டாகாமலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க முடியும். இது குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.இவ்வாறு, இணை இயக்குனர் ராமசந்திரன் பேசினார்..

Tuesday, February 15, 2011

பாதுகாப்பு படைவீரர்களுக்கு மனவளக்கலை பயிற்சி

பாதுகாப்பு படைவீரர்களுக்கு மனவளக்கலை பயிற்சி..1
பொள்ளாச்சி:"வட மாநிலங்களில், மலை பிரதேசத்திலுள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு வேதாத்திரியின் மனவளக்கலை யோகா குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது' என, ஆழியாறில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் நான்காவது மருத்துவர் கருத்தரங்கு நேற்று துவங்கியது. உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தம் வரவேற்றார். கோவை மருத்துவ கல்லூரி டீன் விமலா தலைமை வகித்தார்.புதுடில்லி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் (டி.ஆர்.டி.ஓ.,) இணை இயக்குனர் ராமசந்திரன் பேசியதாவது:பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மூலம் மன வளக்கலை யோகா குறித்து ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. இந்த யோகா மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது, யோகாவின் பயன் ஆகியவை குறித்து ஆராயப்படுகிறது.மனவளக்கலை என்பது மனித உணர்வுகளை புரிந்து கொள்ளகூடிய ஒரு எளிய வழிமுறையாகும். நோயாளிகளின் பிரச்னைகளை மருந்துகளின் மூலம் நிவர்த்தி செய்வதைவிட, மனரீதியாக தீர்க்க வேண்டும். அப்போதுதான், நோயாளிகளுக்கு எளிதாக சிகிச்சையளிக்க முடியும். உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களிடம் எளிதாக மருத்துவ சிகிச்சைகளை கொண்டு செல்லலாம்.மனதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையை கொண்டு செல்வது கடினம். மனவளக்கலை மூலமாக நோயாளிகளுக்கு கட்டாயமாக மன அமைதியை ஏற்படுத்த முடியும்.போர் பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தும் போது ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனவே, டி.ஆர்.டி.ஓ., மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மனவளக்கலை யோகா புகுத்தப்படுகிறது. வடப்பகுதியில், மலை சார்ந்த இடங்களில் அதிக பனி பொழிவுக்கு நடுவில், பாதுகாப்பு படையினர் பணியாற்றி வரும் சூழல் உள்ளது.மற்ற பகுதிகளை போன்று மலை பிரதேசங்களில், கால நிலை இருக்காது. இதனால், உடலில் வலிமை இழக்கும் வாய்ப்புள்ளது. மனவளக்கலை யோகா கற்று அதை பயன்படுத்துவதன் மூலம் மலை பிரதேசத்திலும், சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டாலும் இயல்பாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை, குண்டலினி யோகா ஆகியவற்றை விஞ்ஞான பூர்வமாக அனைத்து மருத்துவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். யோகா மூலமாக அனாவசியப் பிரச்னைகளை தவிர்ப்பதுடன் நோய்கள் உண்டாகாமலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க முடியும். இது குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.இவ்வாறு, இணை இயக்குனர் ராமசந்திரன் பேசினார்.. Feb 13 (3 days ago) sriram
தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் கருத்தரங்கில் மனவளக்கலை யோகா மூலமாக உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்து விவாதிக்கப்படுகிறது. கருத்தரங்கில், நாட்டின் பல்வேறு பகுதியை சேர்ந்த டாக்டர்கள் பங்கேற்றனர்.உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் சின்னசாமி நன்றி கூறினார்.

Thursday, February 10, 2011

அலட்சியப்படுத்துங்கள்

அலட்சியப்படுத்துங்கள்

கடந்த கால மகிழ்ச்சியற்ற விஷயங்களை அலட்சியப்படுத்துகின்ற மனோபாவத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு விட்டால், தேவையற்ற மனக்கஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். கடந்த காலத்தை நீங்கள் எத்தனை முறை நினைவுபடுத்திக் கொண்டாலும் அதை நீங்கள் மாற்றப் போவதில்லை. ஆகவே எதற்காக கடந்த காலத்தின் மகிழ்ச்சியற்ற நினைவுகளுக்காக நீங்கள் இப்போது கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்?

மாற்ற முடியாததை அலட்சியப்படுத்துங்கள், மறந்து விடுங்கள்.

‘சொல்லுவது சுலபம்; செயல்படுத்துவது கஷ்டம்’ என்று நீங்கள் சொல்லாம். நீங்கள் உணர்ச்சிவசப்படுகிற மனிதராக இருந்தால், சில விஷயங்களில் உங்களுடைய உணர்ச்சி மரத்துப் போகட்டும். மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன சொன்னாலும் துடைத்து எறிந்து விடுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். பயிற்சி செய்தால் சரியாகிவிடும்.

நம்முடைய உணர்ச்சிகள் அனைத்தும் பயிற்சிகளுக்குக் கட்டுப்பட்டவை.

“ஒரு மனிதன் நிகழ்ந்துவிட்ட சம்பவத்தால் புண்படுவதைவிட, சம்பவத்தைப்பற்றி தான் கொள்ளுகின்ற அபிப்பிராயத்திலேயே புண்படுகிறான்”. மற்றவர்கள் உங்களைப் புண்படுத்துவதற்காகப் பேசினால், உங்களை அவமானப்படுத்துவதற்காகப் பேசினால் அவர் நோக்கம் நிறைவேற எதற்காக நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்?

உணர்ச்சிகள் மரத்துப் போகும் போது பாதிப்புகளும் குறைந்து விடுகின்றன.

Wednesday, February 9, 2011

ஆணவம்




ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள், கங்கை நதிக்கரையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரைத் தேடி யோகி ஒருவர் வந்து சேர்ந்தார். ஆணவம் மிகுந்தவர் அந்த யோகி. பரமஹம்சரிடம், “என்னைப் போல் கங்கை நீரின் மேல் நடந்து உங்களால் கரையைக் கடக்க முடியுமா?” என்று கேட்டார்.

“நீர் மேல் நடக்கும் யோகத்தை எவ்வளவு காலம் பயின்றீர்கள்?” என்று வினவினார் பரமஹம்சர். “இமயத்தில் 18 ஆண்டுகள் நோன்பிருந்து, கடும் யோகாசனம் பயின்று, இந்த ஸித்தி கைவரப் பெற்றேன். உங்களால் நீரில் நடக்க இயலுமா?” என்று பெருமிதத்துடன் கேட்டார் யோகி.

அவரைப் பார்த்து புன்னகைத்தார் பரமஹம்சர். “அப்பனே, அந்த அளவுக்கு நான் முட்டாள் இல்லை. கங்கையின் அக்கரைக்கு செல்ல விரும்பினால் படகுக்காரனிடம் இரண்டு பைசா கொடுத்தால் போதும். அவன், என்னை அக்கரையில் கொண்டுபோய் விடுவான். 18 ஆண்டுகளை வீணாக்கி நீ சம்பாதித் யோக சக்தி, இரண்டு பைசாவுக்குத்தான் சமம். வேண்டாத இ்ந்த விளையாட்டில் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை!” என்றார்.

நாம் எந்தச் செயலை செய்தாலும் அதில் சிரத்தையுடன் மனதை செலுத்தி, முழுமையான அர்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். ‘எப்போதெல்லாம் மனம் நிலையற்று அலைகிறதோ அப்போது மனதை ஆத்மாவின் வசத்தில் நிலைநிறுத்த வேண்டும்’ என்கிறார் கீதையில் வழிகாட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

Sunday, February 6, 2011

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிராத்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் அபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, அபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “அபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம். “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்களை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!

இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது அபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

Thursday, February 3, 2011

ஊனம் தடையில்லை

ஊனம் தடையில்லை

நமது உடலில் இருக்கின்ற குறைகள் நமது சாதனைகளுக்கு முட்டுக்கட்டைகள் கிடையாது. சாதிக்கத் துடிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த ஊனமே ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளன. உதாரணமாக, இந்த உலகில் ஏதாவது ஒரு குறையுடன் பிறந்து தங்களின் சாதனைகளுக்கு என்றும் ‘சாவில்லை’ என்று நிலைநாட்டியவர்கள் ஏராளம். உதாரணமாக,

* சாண்டோ எனபவர் பலகீனமான நோயாளியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். சாண்டோ எவரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அவர் விரும்பியது பலம்! மன உறுதியுடன் தேகப் பயிற்சி செய்து உடல் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அவர் காலத்தில் ‘மிகவும் பலசாலி’ என்ற பெயரையும் பெற்றார்.
* உடல் ஊனமுற்ற பலகீனமான உடலை உடைய ஜார்ஜ் ஜோவெட் என்கிற சிறுவன் தன்னுடைய நிலையை எண்ணி ஒரு போதும் வருந்தவில்லை. மற்றவர்கள் தனக்காக வருத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. தன்னுடைய மனதையும், உடலையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொண்டான். என்ன நடந்தது? அடுத்து பத்து ஆண்டுகளில் ‘செயலுக்கு ஏற்ற விளைவு’ என்ற இயற்கைவிதி செயல்பட்டது. உலகத்தின் ‘மிகச்சிறந்த பலசாலி’ என்கிற பெயரைப் பெற்றார்.
* ஆனெட் கெல்லர்மேன் – உடல் ஊனமுற்ற நோயாளிப் பெண். முழுஉடலை அவள் விரும்பினாள். பயிற்சி, சிகிச்சை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு மனஉறுதியுடன் முழுமையான உடலை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். உலகத்தில் உள்ள முழுமையான உடலைப் பெற்ற ஒருத்தியாக தேர்வு செய்யப்பட்டாள். நீரில் ‘டைவ்’ செய்கின்ற உலகச் சாம்பியன் பட்டத்தையும் அவள் வென்றாள்.
* பீதோவன் சாகாவரம் பெற்ற ராகங்களை செவிடாக இருந்த நிலையில் தான் உருவாக்கினார்.
* கவிஞர் மில்டன் – ‘சொர்க்கம் இழுக்கப்படல்’ என்கிற காவியத்தை பார்வையற்ற நிலையில் தான் எழுதி முடித்தார்.
* ஃபிராங்க்ளின் ரூஸ் வெஸ்ட் – இளம்பிள்ளை வாதத்தால் கால் ஊனமுற்ற நிலையிலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.
* ராபர்ட் லூயி ஸ் ஸ்டீபென்சன் - ஒரு மணி நேரம் கூட இருமலில் இருந்தும், நெஞ்சு வலியில் இருந்தும் விடுபட்டது இல்லை. அந்த நிலையிலும் ‘புதையல் தீவு’ போன்ற அருமையான கதைகளை எழுதி படைத்தார்.
* எடிசன் தன்னுடைய பரிசோதனைகளில் காட்டியதைப் போல, நாமும் தொடர்ந்து முயற்சியில் உறுதியினைக் காட்டுவோம். பல தோல்விகளுக்குப் பிறகுதான் சரியானது என்ற தீர்வைக் கண்டுபிடிக்க முடிகிறது.

இவர்கள் யாவரும் குறைபாடுகள் உடையவர்கள் அல்ல. தங்களின் குறைபாடுகளை ஈடுசெய்ய மிக உயர்ந்த கோட்ப்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள். அதை தங்களின் வாழ்க்கையில் பிரதிபலித்திடவும் செய்தனர்.

“முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை”.

Wednesday, February 2, 2011

piravi

கண்ணதாசனின் பாடல் வரிகளில் சில….



உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும் – நிலை

உயரும் போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்!

ஆசை கோபம் களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனிதவடிவில் தெய்வம்!!



மானிடப் பிறவி: அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனின் கூண், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது. இப்படியொரு மானிடப் பிறவியைய் பெறுவதற்கு என்ன தவம் செய்திடல் வேண்டும். இந்த அரியதொரு மானிட பிறவியில் பிறந்து பிறவிப் பயனை அடைவதற்குள், தினம் தினம் நமது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள், வேதனைகள், சோதனைகள். இறுதியல் சாதனைகள்! ஒரு பிறவியைய் எடுத்து அதில் ஒரு வாழ்க்கையைய் வாழ்வதில் நாம் இவ்வளவு சோதனைகளை சாதனைகாளக மாற்றுகிறோம். இப்படிப்பட்டதொரு வாழ்க்ககையைய் வாழ்கின்ற நம் மத்தியல் ஒரு பிறவியல் பலமுறை வாழ்ந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் அனைவரும் ‘மனித வடிவில் தெய்வமானவர்கள்’ என்றே கூறலாம்!!



* சர் கிறிஸ்டோஃபர் ரென் 17ம் நூற்றாண்டிலவ் வாழ்ந்தவர். இவர் இந்த 17ம் நூற்றாண்டில் இரண்டு முறை வாழ்ந்திருக்கின்றார்.

முதல் வாழ்க்கை – குழந்தைப் பருவ வளர்ச்சி, நல்ல கல்வி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வான் இயல் பேராசிரியர் வேலை. முதல் வாழ்க்கை நாற்பத்தெட்டு ஆண்டுகள் நீடித்தது. பிறகு புதிய மாறுபட்ட வாழ்க்கை வாழ்வது என தீர்மானித்தார். வானிவியல் நிபுணராக இருந்து தூரத்திலிருந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, வான் உலகத்தையே பூமிக்குக் கொண்டுவந்து அழகான தேவாலயங்களை நிர்மாணிப்பது என முடிவெடுத்தார்.



இரண்டாவது வாழ்க்கை – அடுத்த நாற்பத்தெட்டு ஆண்டுகளில், ஐம்பத்து மூன்று தேவாலயங்களை நிர்மாணிப்பதில் செலவிட்டார். அந்த தேவாலயங்கள் அவருடைய பெருமையின் நினைவுச் சின்னங்களாக கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் போல் “நான் நிரந்தமானவன் அழிவதில்லை! எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!” இன்றும் நிலைத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று தான் லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல். அந்த மிகப்பெரிய தேவாலயம் இன்றைக்கும் அவருடைய புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.



* டாக்டர் ஆல்பார்ட் ஸ்வைட்ஸர் – தத்துவ சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்கிற நிலையில் பல அறிவு விளக்க நூல்களை எழுதியிருக்கிறார். இது இவரது முதல் நிறைவான வாழ்க்கையின் அடையாளம்!!!

பிறகு மதத்துறையில் ஒரு புதிய வாழ்க்கையினை தேடினார். மத சம்பந்தப்பட்ட தத்துவங்களை பயின்று டாக்டர் பட்டம் பெற்றார். மத போதகராகி இரண்டாவது புதிய வாழ்க்கையினை தொடங்கினார். பிறகு, சங்கீதத்தை போதித்தார். அதைப் பயின்றார். சங்கீதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். உலகப் புகழ் பெற்ற ‘சங்கீத மேதை’ என்கிற சிறப்புக்கும் உரியவரானார். சங்கீதத் துறையிலும் சிறப்பினைப் பெற்ற இவர் தனது மூன்றாவது வாழ்க்கையுடன் நிறுத்தவில்லை.



ஆப்பிரிக்க காடுகளில் வாழும் நாகரிகமற்ற மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். மருத்துவத்துறை பற்றியும் அறுவை சிகிச்சை பற்றியும் பயிலலானார். நான்காவது முறையாக, மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். சங்கீத மேதை என்கிற புகழை உதறி எறிந்து விட்டு நான்காவது வாழ்க்கையினைத் தொடங்கினார். ஆப்பிரிக்காவில் உள்ள லம்போர்னியாவில் உள்ள காடுகளில் நான்காவது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. மலைப்பாம்புகள், கொரிலாக்கள், முதலைகள், காட்டுமிராண்டிகள் வசிக்கின்ற ராட்சஸ காடுகளை அழித்து அங்கு வசிக்கின்ற மக்களுக்கு மருத்துவவசதி செய்ய மருத்துவமனை ஒன்றையும் கட்டினார். தனது நான்காவது வாழ்க்கையினை அந்த காட்டிலேயே அமைத்துக் கொண்டு தெய்வீக மயமானார்.



“நிகழ்காலத்திலேயே சிக்கித் தடுமாறுகிறீர்கள் என்று பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது ஒரு அறிவுப் பூர்வமான வாசகம்”. பலரும் ஒரே ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். அதையும் வெற்றியாக்கிக் கொள்வதில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.



“வாழ்க்கை ஒரு சுகமான அனுபவமே!

வாழக் கற்றுக் கொள்வோம்.

நமது இப்போதைய வாழ்க்கையிலேயே சிக்கித் தடுமாறாமல் இருப்பதற்கான

வாழ்க்கையைய் வாழக் கற்றுக் கொள்வோம்.”!!

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,