Thursday, February 10, 2011

அலட்சியப்படுத்துங்கள்

அலட்சியப்படுத்துங்கள்

கடந்த கால மகிழ்ச்சியற்ற விஷயங்களை அலட்சியப்படுத்துகின்ற மனோபாவத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு விட்டால், தேவையற்ற மனக்கஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். கடந்த காலத்தை நீங்கள் எத்தனை முறை நினைவுபடுத்திக் கொண்டாலும் அதை நீங்கள் மாற்றப் போவதில்லை. ஆகவே எதற்காக கடந்த காலத்தின் மகிழ்ச்சியற்ற நினைவுகளுக்காக நீங்கள் இப்போது கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்?

மாற்ற முடியாததை அலட்சியப்படுத்துங்கள், மறந்து விடுங்கள்.

‘சொல்லுவது சுலபம்; செயல்படுத்துவது கஷ்டம்’ என்று நீங்கள் சொல்லாம். நீங்கள் உணர்ச்சிவசப்படுகிற மனிதராக இருந்தால், சில விஷயங்களில் உங்களுடைய உணர்ச்சி மரத்துப் போகட்டும். மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன சொன்னாலும் துடைத்து எறிந்து விடுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். பயிற்சி செய்தால் சரியாகிவிடும்.

நம்முடைய உணர்ச்சிகள் அனைத்தும் பயிற்சிகளுக்குக் கட்டுப்பட்டவை.

“ஒரு மனிதன் நிகழ்ந்துவிட்ட சம்பவத்தால் புண்படுவதைவிட, சம்பவத்தைப்பற்றி தான் கொள்ளுகின்ற அபிப்பிராயத்திலேயே புண்படுகிறான்”. மற்றவர்கள் உங்களைப் புண்படுத்துவதற்காகப் பேசினால், உங்களை அவமானப்படுத்துவதற்காகப் பேசினால் அவர் நோக்கம் நிறைவேற எதற்காக நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்?

உணர்ச்சிகள் மரத்துப் போகும் போது பாதிப்புகளும் குறைந்து விடுகின்றன.

No comments: