அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே
அழகென்ற சொல்லுக்கு குருவே
அறிவு சுடராக வந்த ஓர் குருவே
அறுகுணம் வென்ற நீ குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
ஆண்டியாய் நின்ற ஓர் குருவே
உன்னை அண்டினோர் இன்பமே குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே
ஞானப்பழம் நீ தந்த ஓர் குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே
அழகென்ற சொல்லுக்கு குருவே
அன்பர் மனதிலே குடிகொண்ட குருவே
அன்பர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ குருவே
மனித சக்திக்கு எட்டாத தத்துவம் விளங்கவைத்த குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
அன்பிற்கு எல்லையோ குருவே
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே குருவே

கண்கண்ட தெய்வமே குருவே
கண்கண்ட தெய்வமே குருவே
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
ப்ரணவப்பொருள் கண்ட ஓர் குருவே
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே
அழகென்ற சொல்லுக்கு குருவே - அருள்நிதி
Tuesday, April 26, 2011
Monday, April 25, 2011
திருமந்திரம்
திருமந்திரம்
உடம்பைமுன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோயில்கொண்டேன் என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே - திருமூலர்
உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தவர்க்குச் சீவன் சிவலிங்கம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
கள்ளப்புலன் ஐந்தும் காளாமணி விளக்கே - திருமூலர்
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமூலர்

Saturday, April 23, 2011
புத்தர் கூறிய கதை
புத்தர் கூறிய கதை
1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில் 1969 ஆம் ஆண்டு யோக ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆசிரமம் ஒன்றை நிறுவி யோக வழி முறைகளைக் கற்றுக் கொடுக்கும் அவர் பல்வேறு புத்தகங்கள் எழுதி உள்ளார். அவர் எழுதிய சிறு கதைகள் மனதை சிந்திக்க வைப்பவை )
ஒரு முறை புத்தருடைய சீடர்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அவர்களுடைய அறியாமையை விலக்கி, அஹிம்சா வழியை போதிக்க எண்ணிய புத்தபிரான் அவர்களுக்கு கீழ் கண்ட கதையைக் கூறினார்.
முன்னொரு காலத்தில் பனாரஸ் என்ற ( வாரணாசி) பகுதியில் கௌசலா என்ற பகுதியை திர்கதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஆனால் பக்கத்து நாட்டு அரசனான பிரும்மதத்தா என்ற மன்னன் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்தபடி கௌசலா நாட்டையும் கைப்பற்றிய பின் அந்த அரசனையும், அரசியையும் கொன்று விட்டால் பிறகு வேறு எவரும் தலை தூக்க முடியாது என எண்ணியதால் அவர்களைத் தேடத் துவங்கினான். ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் தப்பி ஓடி மாறு வேடத்தில் தங்கி இருந்து தமது நண்பனான ஒரு குயவன் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது ஒரு குழந்தையும் பிறந்து பெரியவனாகியது. ஆனாலும் பிரும்மதத்தா அவர்களை கொன்று விட வேண்டும் என்ற கவலையில் அவர்களை தேடிக் கொண்டு இருந்தான்.
ஒரு நாள் திர்கதியின் மகன் திர்காயு வெளியில் சென்று இருந்த பொழுது மாறு வேடத்தில் இருந்த மன்னனை அடையாளம் கண்டு கொண்ட முடி வெட்டுபவன் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களை அரசனிடம் காட்டிக் கொடுத்துவிட அவர்களை கைது செய்த அரசன் அவர்களை மக்கள் முன் சிரச்சேதம் செய்து கொல்ல ஏற்பாடு செய்தான். அந்த கொடுமை நடக்க இருந்த இடத்தில் கூடி இருந்த மக்கள் மத்தியில் திர்காயுவும் இருந்தான். மரணம் அடைய இருந்த திர்கதியோ எங்கே தன்னுடைய மகன் கோபப்பட்டு கூட்டத்தில் இருந்து வந்து சண்டையிடத் துவங்கி விடுவானோ, அப்படி வந்தால் அவனையும் அல்லவா மன்னன் கொண்று விடுவான் என பயந்து, உரத்த குரலில் கூவினான் ‘ மகனே, நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே, வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது, அஹிம்சையே சிறந்த வழி’ அதைக் கேட்ட மன்னன் அதன் அர்த்தம் தெரியாமல் குழம்பினான். ஆனால் அவன் புரிந்து கொண்டான் கூட்டத்தில் திர்கதியின் மகனும் உள்ளான். ஆகவே திர்கதியையும், அவன் மனைவியையும் கொன்ற பின் திர்காயுவைத் தேடினான், அவன் கிடைக்கவில்லை. திர்காயுவின் மனதில் ஆத்திரம் நிறைந்து இருந்தது. தன் பெற்றோரைக் கொன்ற மன்னனை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருந்தான்.
திர்காயு யானைகளை அடக்குவதில் சிறந்து இருந்ததினால் அவனுக்கு அரண்மணையில் யானைக் கொட்டத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய சாதூர்யத்தை பலமுறை கண்ட மன்னன் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனை தன் காவல் பணியில் வைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு திர்காயு யார் என்பது தெரியாது. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற பொழுது அவர்கள் இருவரைத் தவிற மற்றவர்கள் எங்கோ போய் விட்டனர். களைப்படைந்த மன்னனை ஒரு மர நிழலில் தன் தொடை மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உறங்குமாறும், அதன் பின் கிளம்பிப் போகலாம் எனவும் திர்காயு கூற மன்னனும் உறங்கத் துவங்கினான். தான் எதிர் பார்த்து வந்த தருமணம் வந்து விட்டது என எண்ணிய திர்காயு மன்னனைக் கொல்ல வாளை கையில் எடுத்த பொழுது, தன் தந்தை கூறிய அறிவுறை மனதில் தோன்ற தனது முடிவை மாற்றிக் கொண்டு வாளை உறையில் வைக்க, திடுக்கிட்டு எழுந்த மன்னன் கூறினான் ‘எனக்கு பயமாக உள்ளது. என்னைக் கொல்ல எவனோ என் அருகில் வாளை எடுத்துக் கொண்டு வந்ததைப் போல இருந்தது.’ .அதற்கு திர்காயு பதிலளித்தான் ‘ அது நான்தான்’. மன்னன் கதறினான், கெஞ்சினான் ‘ ஐயோ என்னைக் கொன்று விடாதே, விட்டுவிடு’. திர்காயு அமைதியாகக் கூறினான் ‘உன்னை நான் விட்டு விடுகின்றேன். என்னையும் நீ கொல்ல மாட்டேன் என வாக்குறுதி கொடு’. உடனேயே மன்னனும் வாக்குறுதி அளிக்க தான் யார் என்பதை வெளிப்படுத்தினான் திர்காயு.
அதன் பின் சற்று நேரம் கழித்து மன்னன் திர்காயுவிடம் அவனுடைய தந்தை தான் மரணம் அடையும் முன் கூறிய ‘ நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே,’ என்ன கூறினாரே அதன் பொருள் என்ன என்பதை விளக்குமாறு கேட்க திர்காயு கூறினான் ‘நீண்ட தூரம் பார்க்காதே என்றால் உன் வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருக்காதே என்று பொருள், குறைந்த தூரத்தையும் பார்க்காதே என்றால் அவசரப்பட்டு இப்போது எதுவும் செய்து விடாதே என்ற அர்த்தம். அன்று அவசரப்பட்டு நான் ஓடி வந்து உங்களை கொன்று இருந்தால் மக்கள் என்னைக் கொன்று இருப்பார்கள். அதன் பின் என் ஆட்கள் என்னைக் கொன்றவர்களை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டும் தொடர் கதையாகி இருக்கும். இப்போது நாம் இருவரும் ஆத்திரத்தை விட்டுவிட்டு அஹிம்சையை பின் பற்றினால் அனைவருக்கும் நல்லது அல்லவா, என்று கூற விரோதிகள் இருவரும் இணைந்தனர்.
இந்த கதையைக் கூறிய புத்தர் தம் சீடர்களுக்கு வெறுப்பை வளர்த்துக் கொள்வது ஒருவருக்கொருவர் அழிய அவரவர்களே காரணமாகி விடுவதினால், ஆத்திரத்தை அடக்கி, அமைதியாக எதற்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.
by Vethathiriyam for World Peace

Thursday, April 21, 2011
SKY friends - e-mails
jaya lakshmi , sitabala94@yahoo.in, Karthik Narayanan , priasundar , KANIMOZHI K , Yogeshwar Vajravelu , "gulali.murthy" , Nathiya VC , yamuna A , shivaranjani sivanesan , பெருஞ்சித்திரன் ╰» ρєяυη¢нιтнιяαη , "Thulasi Raman. R" , தமிழ் அருவி , Kals S , Revathy krishnan , umanathanma , Vinothkumar Vethathiri , sarevati@rediffmail.com, "prakash ." , RAMesh Kumar S , Rajasekar , "Dr V Gopinath B.A.M.S.," , "gowthaman.rv" , "PADMANABAN K.A." , Venkataraman R , Sri nivasan , Sarvajit KR , Divya Loganathan , Arun T , Sasi Kumar , Shivakumar வாழ்க வளமுடன் , anuja nair , MageshRaman Venkatesan , "Jo.Su.RAM KUDANTHAI" , utshiva , Jothimani T , ★ Thanigai vel★ , boopathy rajagopal , Vasanth Kumar , shalini shalini , bhagya bala , nandhakumar9 , parthaa sarathi வாழ்க வளமுடன் , "oshonithi.. ..." , UMARAMANAN S , Sundararajan R , bpr783 , Narmadha Kathir , kavitha s
முழுமை நல வாழ்விற்கு எளிய முறை யோகப் பயிற்சிகள்
வாழ்க வளமுடன் குருவே துணை வாழ்க வையகம்
வேதாத்திரி மகரிஷின்
முழுமை நல வாழ்விற்கு எளிய முறை யோகப் பயிற்சிகள்
1 . எளிய முறை உடற் பயிற்சி
நோய்கள் குணமாக
நோய்கள் வராமல் தடுக்க
உடல் வலுப்பெற
2 . எளிய முறை யோகாசன்கள்
உடலுக்கு அழகான வடிவத்தை பெற
இளமை காத்து வயோகிதத்தை தள்ளி போட
சர்க்கரை, இதய நோய்களுக்கு சிறப்பு ஆசான்கள் பெற
3 . எளிய முறை மூச்சுப் பயிற்சிகள்
மூளை செல்கள் புத்துணர்ச்சி பெற
நரம்பு மண்டலம் உறுதிப் படுத்த
மூச்சு தொந்தரவு நோய்கள் நீங்க
4 . எளிய முறை காயகல்பப் பயிற்சி
ஞாபக சக்தி அதிகரிக்க
அறிவு கூர்மை கிட்ட
ஒழுக்க உணர்வு மேலூங்க
5 . எளிய முறை தியானப் பயிற்சிகள்
மன அமைதி பெற
மன ஓர்மை நிலை கிட்ட
ஆன்மீக மேம்பாடு அடைய
கோடை விடுமுறையை பயனுள்ளதாக்குங்கள்
தகுதி :
14 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும்
பயிற்சி காலம் :
தினசரி 1 மணி நேரம்
பெண்களுக்கு :
பெண் ஆசிரியர்களால் தனி வகுப்பு நடத்தப்படும்.
இலவச அறிமுக வகுப்பு :
1 -5 -2011 - மாலை 6.00௦௦ மணி
பயிற்சி நடை பெரும் இடங்கள் :
துணை பேராசிரியர் பூங்குழலி
பெண்கள் தவ மையம்
M -283 , புதிய வீட்டு வசதி வாரியம் - முதல் தொகுதி
மகளிர் காவல் நிலையம் பின்புறம்
கிருஷ்ணகிரி
984148902 .
மேலும் தகவல் பெற
மனவளக்களை மன்ற அறக்கட்டளை
64 /35 , இரண்டாவது குறுக்கு தெரு,
கோ - ஆப்பாரடிவ் காலனி
கிருஷ்ணகிரி
9843690051
தினசரி பயிற்சிகள்
காலை 6 .30 - 7 .30
தியானம், உடற் பயிற்சி
மாலை 6 .30 - 7 .30
கூட்டு தியானம்
சிந்தனை விருந்து நடைபெறும்

Wednesday, April 20, 2011
சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
ஆறாம் திருமுறை
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே
( 4080 )
ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத279 அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே
( 4081 )
அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்வத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே
( 4082 )
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே
( 4083 )
அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே
( 4084 )
அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே
( 4085 )
அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே
( 4086 )
அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே
( 4087 )
அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே
( 4088 )
அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே
( 4089 )
அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே

Sunday, April 17, 2011
ஆய்வுக் கூடத்தில் வளர்கிறது சிறுநீரகம்!
ஆய்வுக் கூடத்தில் வளர்கிறது சிறுநீரகம்!
-ஆச்சர்ய மருத்துவம்
சிறுநீரகக் கோளாறுகளில் தவிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 'மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை வைத்து, செயற்கை முறையில் சிறுநீரகத்தை வளர்த்தெடுக்க முடியும்’ என்று இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் கண்டறிந்து உள்ளனர். இப்போது, தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு இருப்பதுபோன்று அரை செ.மீ. நீளத்துக்கு சிறுநீரகத்தை வளர்த்து உள்ளனர். இதை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அளவுக்கு வளர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
'இந்தியாவில் ஆண்டுதோறும் 90,000 பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 10,000 பேர் இருக்கின்றனர். இவர்களில் 22.5 சதவிகிதம் நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுகின்றனர். சுமார் 2.5 சதவிகிதம் நபர்களுக்குத்தான் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடக்கிறது. சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுக்கப் பலர் முன் வந்தாலும், அதில் 25 சதவிகிதம் பேரின் சிறுநீரகங்கள்தான் தானமாகப் பெறத் தகுதியுடையதாக உள்ளன!’ என்று நேஷனல் கிட்னி ஃபவுண்டேஷன் இந்தியா தகவல் தெரிவிக்கிறது.
தானமாகப் பெறும் சிறுநீரகத்தை உடல் ஏற்றுக்கொள்வதிலும் பிரச்னை உள்ளது. உடலுக்கு சம்பந்தம் இல்லாத பொருள் என்று பெரும்பாலான நேரங்களில் தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகத்தை நிராகரித்துவிடுகிறது. இந்தக் குறைபாடு புதிய ஸ்டெம்செல் தொழில்நுட்பம் காரணமாக நீக்கப்படுகிறது. அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்லில் இருந்தே சிறுநீரகம் வளர்க்கப்படுவதால், உடலால் நிராகரிக்கப்படும் பிரச்னை இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஜெமி டேவிஸ் கூறுகையில். ''உடல் உறுப்பு செயற்கையாக உருவாக்குவதை அறிவியல் உலகின் கற்பனை என்று முன்னர் சொல்வார்கள், ஆனால், அது இப்போது சாத்தியமாகிவிட்டது. தாயின் கருவறையில் உருவாவதுபோன்றே, சிக்கலான சிறுநீரகத்தை உருவாக்குவதில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். தாயின் கருவறையில் குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீரில் உள்ள ஸ்டெம் செல் மற்றும் விலங்கின் திசுக்களைப் பயன்படுத்தி, சிறுநீரகத்தை உருவாக்கி, வளர்த்து வருகிறோம். இந்த ஆராய்ச்சி முழுமையாக முடிவடைந்து, மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்ற அளவுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஆனால், இதற்கு அதிகச் செலவாகும் என்று கருத வேண்டாம். சிறுநீரக நோயாளி ஒருவர் ஆயுள் முழுக்க டயாலிசிஸ் செய்துகொண்டே இருப்பதைக் காட்டிலும் செலவு குறைவாகத்தான் இருக்கும்!'' என்றார்.
இந்தியாவில் இதன் சாத்தியம் குறித்து லைஃப் செல் இன்டர்நேஷனல் முதன்மை விஞ்ஞானி டாக்டர் அஜித்குமார் கூறுகையில், ''ஸ்டெம் செல் மூலம் சிறுநீரகம் போன்று பல்வேறு உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாக நடந்து வருகின்றன. மனித சமுதாயத்தின் எதிர்கால நம்பிக்கையாக, இந்தத் தொழில்நுட்பம் விளங்கும். ஸ்டெம் செல் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்லுக்கே முக்கியத்துவம் இருந்தது. தற்போது, தொப்புள்கொடி, பனிக்குட நீர் என்று முன்னேற்றம் கண்டுள்ளது.
இங்கிலாந்தில், கருநீர் என்று சொல்லப்படும் பனிக்குட நீரில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம்
செல் மற்றும் விலங்குகளின் திசுவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லைக்கொண்டு, சிறுநீரகத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். இதுவே, மனிதனின் தொப்புள்கொடி திசு மற்றும் பனிக்குட நீர் இரண்டையும் சேர்த்துச் செய்யும்போது, ரிசல்ட் இன்னும் நன்றாக இருக்கும். இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, உறுப்பு கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் காத்துக்கிடக்கின்றனர். இந்த புதிய தொழில்நுட்பம் வெளிநாட்டில் அறிமுகமான உடனேயே, இங்கேயும் வந்துவிடும். இந்திய அரசும் இதற்கு ஆதரவு அளிக்கும். எப்படி தொலைத் தொடர்புத் துறைக்கு டிராய், பங்குச் சந்தைக்கு செபி உள்ளதோ, அதே போன்று ஸ்டெம் செல் ஆராய்ச்சியை ஒழுங்குபடுத்த ஓர் அமைப்பை மத்திய அரசு உருவாக்க உள்ளது. இதன் பிறகு, இந்தியாவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மேலும் மேம்படும். சிறுநீரகம் வளர்த்து எடுக்கும் தொழில்நுட்பம், நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக டிசெல்லுலாரைசேஷன் என்று புதிய முறை வந்துவிடும் என்றே நாங்கள் கருதுகிறோம். டிசெல்லுலாரைசேஷன் என்பது இதய நோயாளிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும். இந்த முறையில், நோயாளியின் பழுதுபட்ட இதயத்தில் உள்ள செல்லை செயல் இழக்கச் செய்துவிட்டு, அவரது எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம் செல் எடுத்து, இதயத்தில் செலுத்தி செயல்படவைக்க முடியும். அவர் உடலில் ஸ்டெம் செல் கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கு பொருந்தக்கூடிய நன்கொடையாளரிடம் இருந்து ஸ்டெம் செல் எடுத்தும் செயல்படுத்த முடியும். இதனால், நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் குறைவு!'' என்றார்.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் போதிய அளவு உடல் உறுப்புகள் தானமாகக் கிடைக்காததால், பல நாட்டு மருத்துவ விஞ்ஞானிகளும் உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டனர். அமெரிக்காவில் மனித இதயத்தை உருவாக்கும் முயற்சியிலும், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணின் கருவிழியை உருவாக்கும் முயற்சியிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்!
- பா.பிரவீன்குமார்
நன்றி--விகடன்

Subscribe to:
Posts (Atom)