Sunday, September 16, 2012

மனைவி நல வேட்பு நாள்

'மனைவி நல வேட்பு நாள்' மற்றும் 'வேதாத்திரி மகரிஷி 102வது ஜெயந்தி விழா' சிறப்பு கொண்டாட்டங்கள்
25 ஆகஸ்டு 2012
சிங்கப்பூரைச் சார்ந்த அனைத்து எளியமுறை குண்டலினி யோகா மன்றங்களும் இணைந்து 'மனைவி நல வேட்பு நாள்' மற்றும் 'வேதாத்திரி மகரிஷி 102-வது ஜெயந்தி விழா' சிறப்பு நிகழ்ச்சிகளை ஸ்ரீ ருத்தர காளியம்மன் கோவிலில், 25அம் ஆகஸ்டு 2012 அன்று சிறப்பாக நடத்தின. திரு பரமசிவம் அவர்கள் இறை வணக்கமும், குரு வணக்கமும் பாட விழா இனிதே தொடங்கியது. விழாவிற்கு வந்த அனைத்து பொது மக்களையும் திரு பிரபாகரன் அவர்கள் வரவேற்று 'உலக அமைதி வேள்வியின்' அவசியத்தை விளக்கினார். அனைத்து அறக்கட்டளைகளையும் பிரதிநிதிக்கும் வகையில் ஒன்பது உறுப்பினர்கள் மேடைக்கு வந்து 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்று உலக அமைதி வேள்வியை சிறப்பாக நடத்தினர். விழாவிற்கு வந்திருந்த அனைவரும் அவற்றைத் தொடர்ந்து கூறி 'உலக அமைதி வேள்வியைச் சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து 'குடும்ப அமைதி' என்னும் நாடகத்தை எளிய முறைக் குண்டலினி யோகாவின் அடிப்படையில் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.

தொடர்ந்து, உலக சமுதாய சேவா சங்கத்தின் சிங்கப்பூர் மற்றும் மலேசிய ஒருங்கிணைப்பாளர் திரு சேர்மா செல்வராஜ் அவர்கள், 'உலக அமைதி வேள்வி' மற்றும் 'மனைவி நல வேட்பு நாள் விழா' பற்றிய சிறப்பான தகவல்களை அளித்து சிறப்புரை ஆற்றினார். மனித உறவுகளிலேயே 'கணவன்-மனைவி' உறவு தான் மிகவும் புனிதமானது என்றும் ஆனால் தற்காலத்தில் ஒருவருக்கொருவர் மற்றவரை துன்புறுத்தும் வகையில் கொடுக்கப்பட்ட அனுமதிச்சீட்டாகவே திருமணத்தைக் கருதுகின்றனர் என்றும் குறிப்பிட்டார். அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் நல்கிய 'உலக சமாதானம்' மலருவதற்கு தனி மனித அமைதியே அடிப்படை என்று அவர் கூறியதை திறம்பட விளக்கினார். தனி மனித அமைதியே, குடும்ப அமைதியாக மலர அடிப்படையாகும். குடும்ப அமைதியே, சமுதாய அமைதியாக மலர்ந்து பின்னர் உலக அமைதியும் ஏற்படும் என்பதையும் விளக்கினார். தனி மனித அமைதி ஏற்பட தன்னை அறிவது மிகவும் அவசியமாகும். தன்னை அறிந்தால் மட்டும் போதாது. அந்த அறிவினில் ஒருவர் மற்றவரை புரிந்து உணர்ந்து மதித்து திட்டமிட்டு வாழ்வது அதற்கு அவசியம். அந்த நிலையில் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற பண்புகளை வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்வதன் மூலம் குடும்ப அமைதியை எளிதில் அனைவரும் பெற்று மகிழலாம்.
ஒருவர் மற்றவரை துன்புறுத்தி வாழ்வதை விட, மற்றவரை மறந்தும் மன்னித்தும் வாழ்வதன் மூலம், வாழ்வில் தொடர்ந்து மகிழ்ச்சியைக் காணலாம். வாழ்க்கைத் துணைவரின் அன்பை இழந்து ஒரு நாள் கூட வாழ்க்கையில் வீணடிக்கக் கூடாது என்று வேதாத்திரி மகரிஷி அறிவுறுத்துகிறார் என்பதையும் விளக்கினார்.

அவருடைய சிறப்புரைக்குப் பின்னர், தம்பதியினர் அனைவரும் ஒருவருக் கொருவர் எதிரில் அமர்ந்து கொண்டு தத்தம் வாழ்க்கையில் குடும்ப அமைதியைப் பேண உறுதி பூண்டனர். ஒவ்வொரு கணவரும் தம் மனைவிக்கு மலரைக் கொடுத்து 'என்றென்றும் வாழ்நாளில், இந்த மலரைப் போல் வாழ்வில் மென்மையாக நடந்து கொள்வேன்' என்று உறுதி அளித்தனர். மனைவியர் தம் கணவருக்கு ஒரு கனியைக் கொடுத்து 'என்றென்றும் வாழ்நாளில், இந்தக் கனியைப் போல் இனிமையாக நடந்து கொள்வேன்' என்று உறுதி அளித்தனர்.
சில அன்பர்கள் நிகழ்ச்சியைப் பற்றிய தங்கள் இனிய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு மனவளக்கலை மன்றங்களுக்கு இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
இறுதியாக, திரு அதிகாரிப் பிள்ளை அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொது மக்கள், சிறப்பு விருந்தினர், தன்னார்வத் தொண்டர்கள் என அனைவருக்கும் நன்றி நவில, விழாவிற்கு வந்த அனைவரும் சிங்கப்புரிலுள்ள மனவளக்கலை மன்றங்களின் முகவரிகளையும் செயல்படும் நேரங்களையும் குறித்துக் கொண்டு மனமகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினர்.

Wednesday, September 12, 2012

சாப்பிடும் விதம் சரிதானா?

சாப்பிடும் விதம் சரிதானா?


சாப்பிடுவது, அன்றாடம் வேளை தவறாத வேலை. ஆனால் நாம் சாப்பிடும் விதம் சரிதானா என என்றாவது யோசித்திருக்கிறோமா?
சாப்பிடும்போது செய்ய வேண்டிய விஷயங்களை மறக்கக் கூடாது.
சிலர் மிக வேகமாகச் சாப்பிடுவார்கள், சிலர் மிக மெதுவாகச் சாப்பிடுவார்கள். எப்படிச் சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாகக் கடிக்கப்பட்டு, மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு அதன்பின்தான் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். உணவை அப்படி அப்படியே விழுங்கக் கூடாது.
சிலர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவர், சிலரோ ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவர். அதுவும் தவறு, இதுவும் தவறு.
பொதுவாக சைவ உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவைச் சாப்பிட சிறிது நேரமாகத்தான் செய்யும். குறைந்தது 10 நிமிடங்களும், அதிகபட்சமாக பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்கு ஒதுக்குவது நல்லது.
நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதில் வாயில் உள்ள உமிழ்நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ் நீர்ச் சுரப்பிகள் உள்ளன. அவை, பரோடிட் சுரப்பி, சப்மேன்டிபுலார் சுரப்பி, சப்லிங்குவல் சுரப்பி எனப்படு கின்றன.
உணவைப் பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்ந்íர் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ்நீரில் மியூக்கஸ், புரோட்டீன், தாது உப்புகள் மற்றும் அமிலேஸ் என்ற என்சைம் ஆகியவை இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்துதான் செரிமானத்துக்கு உதவுகின்றன.
நாக்கில் உள்ள சுவை நரம்புகள், நாக்கில் வந்து தொடும் உணவானது இனிப்பா, புளிப்பா, உப்பா, துவர்ப்பா என்பதைக் கண்டுபிடித்து அதற்கு தேவையான சரியான என்சைம்களை சுரக்கச் செய்கின்றன.
* வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்றவற்றைத் தொடர்ந்து உபயோகிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உமிழ்நீர்ச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால்தான் இப்பழக்கம் உள்ளவர்களுக்கு உமிழ்நீர் சரிவரச் சுரக்காமல் அடிக்கடி தொண்டை காய்ந்து போய்விடுகிறது. அதேபோல பற்களை நன்கு பராமரிக்காவிட்டாலும் உணவை முழுமையாக அரைத்து விழுங்க முடியாது.
சாப்பிடுங்கள், நன்றாகச் சாப்பிடுங்கள். ஆனால் அடிப்படையான விஷயங்களை மறக்காதீர்கள். உணவு ஜீரணம் ஆகும் வேலை வாயிலேயே தொடங்கிவிடுகிறது என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்க

Sunday, September 9, 2012

உடல் நல்லா ஸ்ட்ராங்கா இருக்க, எந்த உணவுகளை சாப்பிடலாம்!!!

இன்றைய அவசர காலத்தில், நிறைய பேர் எதையும் சரியாக உண்ண முடியாத நிலையில் உள்ளனர். அவ்வாறு இருப்பதால், அவர்களது உடல் நலம் பலமிழந்து ஆரோக்கியமற்றதாக உள்ளது. ஆகவே அவ்வாறு இருப்பவர்கள், சாதாரண நேரத்தில் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதை விட, ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழலாம். அதற்கு அவர்கள் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
உடலில் தினமும் சேர்க்க வேண்டிய உணவுகள்1/6

1. முட்டை

முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. மேலும் கோலைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் இருப்பதால், மார்பகப் புற்றுநோய் மற்றும் கண் நோய் என்று எதுவும் வராமல் தடுக்கலாம். ஆகவே அத்தகைய முட்டை தினமும் ஒன்று சாப்பிட்டால், உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கூந்தலும் நன்கு வளரும்

2. பால்

அனைத்து வீடுகளிலும் சிறுவர்களாக இருக்கும் போது, அனைத்து அம்மாக்களும் தினமும் 2 டம்ளர் பாலையாவது குடிக்க கொடுப்பார்கள். ஏனெனில் பாலில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கொப்புக்கள் குறைவாக உள்ள பாலைக் குடித்தால், அதிலும் ஆண்கள் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பாலை தினமும் காலையிலும், இரவில் படுக்கும் முன்னும் குடித்து வந்தால், உடல் நன்கு தெம்பாக இருக்கும்.

3. சாலமன்

சாலமன் என்னும் மீன் இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அதில் அளவுக்கு அதிகமாக வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 உள்ளது. மேலும் இதில் உள்ள ஃபேட்டி ஆசிட், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை நன்கு ஆரோக்கியப்படுத்துவதோடு, சருமம் மென்மையாகவும், உடல் எடையை குறைக்கவும் செய்யும். அதுமட்டுமல்லாமல், மூளை வளர்ச்சியை அதிகரிக்கும். அதிலும் இந்த மீனை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். இந்த மீனில் கலோரியும் குறைவு.

4. பீன்ஸ்

அனைத்து பயிர் வகைகளை விட, இந்த பீன்ஸில் அதிகமான அளவு நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. ஆகவே இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால், உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். மேலும் பீன்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய், நீரிழிவு, ஹைப்பர் டென்சன் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் டயட் மேற்கொள்பவர்கள், வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு ஏற்ற அனைத்து ஊட்டசத்துக்களும் கிடைத்துவிடும்.

5. ஓட்ஸ்

இதய நோய் மற்றும் டைப்-2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்லது. மேலும் டயட்டில் இருப்போரும் சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, உடலை நன்கு பிட்டாக வைக்கும். அதிலும் இந்த ஓட்ஸ் உடன், தயிர், நட்ஸ் மற்றும் பழங்கள் சேர்த்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

6. ஆலிவ் ஆயில்

எண்ணெய்களிலேயே அதிகமான அளவு நன்மையை வைத்திருப்பது என்று சொன்னால், அது ஆலிவ் ஆயில் தான். இந்த ஆயில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஏனெனில் அதில் மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இதனால் புற்றுநோய் மற்றும் அல்சீமியர் போன்ற நோய்கள் வருவதை தடுக்கிறது. ஆகவே இந்த எண்ணெயை பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டால், உடல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும்.
எனவே, மேற்கூறிய அனைத்து உணவுகளையும் தினமும் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, அழகாக பொலிவோடு இருக்கும்.

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.

ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.
இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.
உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.
உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.
நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்கலாம்.
உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.
மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.
பேராசையை தவிர்க்கும்.
உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.
கண்பார்வை அதிகரிக்கும்.
அமைதியான மன நிலையை கொடுக்கும்.
மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.
மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.
போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.
ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.
சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.
புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.
எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.
லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.
ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.
எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.
நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.
நண்பர்கள் வட்டம் பெருகும்.
தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.
சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.
கிடைத்தை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.
மன அழுத்தம், மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.
சமூக அக்கறை அதிகரிக்கும்.
எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.
தூக்கம் வராமல் கஷ்ட படுபவர்கள் படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.
தூக்கத்தில் கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து நிம்மதியாக தூங்க முடியும்.
மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.
மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
தற்காப்பை உருவாக்கும்.
வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.
இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.
ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.
இதய நோய்களை கட்டுபடுத்தும்.
உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
ஆஸ்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
தீய பழக்கங்களை ஒழிக்கும்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கற்பனை திறன் அதிகரிக்கும்.
மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும். thanks vandemadaram.


Tuesday, September 4, 2012

குருவின் உதவி

குருவின் உதவி

வாழ்க வளமுடன்.

தாயென்றும் தந்தையென்றும் தனிப்பெரும் காப்பாக அமைந்து நம்மை காத்துக்கொண்டிருக்கும் குருவின் பாதங்களில் சிரம் வைத்து வணங்குகிறேன்.

நமது பிறப்பால் நமக்கு அமைந்திருக்கும் எல்லாமும் நம் பெற்றோர்களால் நம்மை வந்தடைகிறது... இதிலே நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது பெற்றோரின் அனைத்து பதிவுகளும் நம்மைத் தொடர்கிறது...

ஆனால் குரு என்ற தொடர்பு மட்டும் தான் இந்த பிறப்புச்சுழலில் இருந்து நம்மை திருப்பி இறையிடம் கொண்டு செல்லுகிறது. குருவின் உதவி என்பது நாம் கணக்கிட முடியா ஆழ்ந்த நிலையிலே நம்மைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. சரணடைதல் என்பது தான் இந்த பிறப்பிலே உள்ள பயனை அடைய வழியாக இருக்கிறது...

நாம் நிறைய செயல்கள் செய்வோம்.... நல்லது கெட்டது என்று பிரித்துக்கொண்டே போகலாம். ஆனால் நாம் வெகு இயல்பாகவே சில தவறுகள் செய்வோம்... அது நமக்கு தவறாகத் தெரியாது... ஆனால் இந்த தவறுகள் நிச்சயமாக சூழ்நிலைகளாலும், முன் வினைகளால் நமக்கு வந்து கொண்டிருக்கும்....

இதெல்லாம் ஒரு புறம் இருக்கும்....இருக்கட்டும். இப்போது குருவிடம் சரணடைகிறோம்.... அப்போது, நாம் இது வரை செய்து கொண்டிருந்த செயல்களில் இருந்து நம்மை விலக்கி, இறையின் பக்கம் ஆழமாகச்செல்வோம்... இறை அனுபவம் என்பது கூட சாத்தியப்படும்... அப்படி எனில், வினைப்பயன் என்ன ஆனது என்றால் அது இந்த உடலுக்கு என்று என்னென்ன செய்யவேண்டுமோ அது செய்து கொண்டே இருக்கலாம், ஆனால் குருவிடம் சரணடைதல் என்ற பந்தமானது, நம்மை அந்த சுழலில் சிக்கா வண்ணம் திருப்பி விட்டுக்கொண்டே இருக்கும்....

ஜாதகம் ஏதோ சொல்லும்... ஆனால் குருவின் ஆற்றலானது நம்மை அந்த கிரக நிலைகளில் இருந்தும் நம்மை தாங்கிக்கொள்ளும்... கிரக அமைப்புகள் என்னென்னவோ சொல்லும், ஆனால் அவைகள் அப்படியே இருக்க, சொல்லப்பட்ட கடினமான நிகழ்கள் எல்லாம் வெகு எளிதாக மாற்றி எளிதாக்கப்பட்டு விடும். அது தான் குருவிடம் கொள்ளும் பந்தத்தின் பயன்.

குருவிடம் கொள்ளப்படும் பந்தத்தின் ஆழம் தான், நாம் தியானத்தின் உச்சக்கட்ட பயனைக் கொள்ளும் வாய்ப்பின் அளவு...

நமது பழக்கங்கள் எல்லாம் நமக்கு பெற்றோரினால் வந்து அமைந்து இருக்கும்... மாறாமல் இருக்கும்.Let it be.... ஆனால் குருவிடம் கொண்டுள்ள பந்தம் தரும் பதிவு அந்த பழைய பதிவுகளை எல்லாம் தொடாமலேயே நம்மை தூக்கி இறை நிலையிலே நிறுத்தி பிறவிப்பயனை அடைய உதவும்....

இதைத்தான் நமது கவிதையாக எழுதினார்...

தந்தை தாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து
தழைத்தொரு உடலாகி உலகில் வந்தேன்
அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ
அளித்த பதிவுகள் எல்லாம் என் சொத்தாச்சு.

இந்த அரும்பிறவியில் முன்வினையறுத்து
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்கு
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்...

இந்தக்கவியின் மூன்றாவது வரியிலே, அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ.... என்று எழுதி இருக்கிறார் அல்லவா... மற்றோ என்ற ஒரு வார்த்தையிலே எத்தனையோ விதமான வினைகளும் அடக்கம்.

அப்படி இருக்கிற வினைகள் எல்லாம் நம்மால் தீர்த்துக்கொண்டால் தான் நாம் தூய்மை பெற முடியும் என்ற ஒரு எண்ணம் இருப்பின், நாம் இந்த பிறப்பிலே தியானமே செய்ய முடியாது...

குருவின் உதவி என்ற ஆற்றல் என்பது எல்லாவற்றையும் மாற்றி விடும் வல்லமை கொண்டது என்பதால், குருவை அண்டி தியானத்திலே ஆழ்ந்து செல்ல வேண்டியது தான் வழி.

மனதின் ஆழம் வரை மட்டும் தானே இந்த பதிவுகள் வேலை செய்ய முடியும்... மனதை தாண்டி இருக்கிற குருவின் ஆற்றலிடம் இந்த வினைகள் என்ன செய்து விடும்? புலன் உயர்வை கடந்து விரிந்து இருக்கிற குருவிடம் இந்த வினைகள் புஸ்வானமாகிப்போகும்! குருவிடம் அந்த வினைகளின் தொகுப்பான மனதை விட்டு விட்டு தவத்தை ஆரம்பிப்போம்... வினைகளின் தூய்மை என்பது நாம் செய்யும் நற்செயலினால் வரும் என்பார்கள். தியானத்தை விட நற்செயல் எதுவும் இல்லை.

வினைப்பதிவுகள் எல்லாம் அப்படியே குருவின் காலடியில் விட்டு விட்டு, நிமிர்ந்து குருவின் கையை பிடித்துக்கொண்டு எழுச்சியுடன் செய்வோம் தவத்தை...

குருவே தான் இருப்பு நிலை.... என்று ஆழ்ந்து செல்லவேண்டும். குருவின் ஆற்றலை கண்டால் தாங்க மாட்டோம்... புலன் அறிவிலே நின்று கொண்டு அந்த அபரிமிதமான ஆற்றலிடம் நீர்த்துப் போய் விடவேண்டாம்.

குரு, இருப்பு, நான் என்ற மூன்று நிலைகள் தனித்தனியாக இயங்காமல், குருவின் மூலம் இருப்பை உணர்ந்து நான் என்ற முனைப்பைக் கரைத்து ஆற்றல் வெளியோடு கலந்து விடல் தான் நாம் செய்ய வேண்டியது.

வினைப்பதிவுகள் எல்லாம் குருவிடம் சரணடைந்த சீடனின் பக்கமே செல்லாது ஓடும்.

வாழ்க வளமுடன்

BY Sundararajan.R


Sunday, September 2, 2012

நீண்ட ஆயுளோடு வாழ ஆயில் புல்லிங் செய்யுங்க...

நீண்ட ஆயுளோடு வாழ ஆயில் புல்லிங் செய்யுங்க...

நல்லெண்ணெய்யைக் கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது ‘ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன.

இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், பல் துலக்கியதும் சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்கவும். முதலில் வாய்
முழுவதும் வழு வழுவென்று எண்ணெய்யின் தன்மை இருக்கும்.

பின்னர் நீரினால் வாயையும், பற்களையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் இதனை நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். மூன்று முறையும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

ஆயில் புல்லிங் எதற்கெல்லாம் நல்லது?

மூட்டு வலி, முழங்கால் வலி, இருமல் மற்றும் சளி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு, குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை
உடனடியாக குணப்படுத்துகிறது.

மேலும் தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. அதிலும் ஒற்றைத் தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை.

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்துவதாக மருத்துவர்களில் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Saturday, September 1, 2012

நெல்லிக்கனி பற்றிய தகவல் !!!!

நெல்லிக்கனி பற்றிய தகவல் !!!!


நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். நெல்லி ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான நண்பன் எனலாம். இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும்.

நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.
நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.


நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:

நீர்=82%
புரதம்=0.5%
கொழுப்பு=0.1%
மாவுப்பொருள்=14%
நார்ச்சத்து=3.5%
கால்சியம்=50 யூனிட்
பாஸ்பரஸ்=20 யூனிட்
இரும்பு=1.2 யூனிட்
வைட்டமின் C=600 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும்.

நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.
பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.
குறிப்பு:

நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.
மருத்துவக் குணங்கள்:

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை பதித்தவர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

ஒரு நெல்லிக்கனியில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.


ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.