Wednesday, September 26, 2012

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்-1

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன. 4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

Sunday, September 23, 2012

சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா ?

சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா ? ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல. சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் , வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது. சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது முதலில் எளிதாக ஜீரணமாவது இந்தப் பழம்தான். இதனால் உணவுகள் முழுவதும் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் வயிற்றிலுள்ள ஜீரணமாக பயன்படும் அமிலங்களுடன் கலந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுள்ள உணவு கெட்டுப்போகும். எனவேதான் சாப்பாட்டிற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும்போது அதனுடைய பலன் அதிகம் நம்மை சேருகிறது. அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும். சிறு துரும்பும் பல் குத்த உதவுவதுபோல இந்த சின்ன விஷயங்களிலும் நாம் கவனம் எடுக்கும்போது நமது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நீண்ட ஆயுட்காலத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். பழங்கள் நமது உடல்நலத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நோய்வாய்ப் படும் காலங்களில் பழமே மிகவும் பிரதான உணவாக இருக்கிறது. மருத்துவர்கள் இக்காலங்களில் பரிந்துரை செய்வது பழங்கள் தான். குறிப்பு: பதிவில் குறிப்பிட்டுள்ள பழம் வாழைப்பழம். நாம் அன்றாட விருந்துகளில் பயன்படுத்தும் பழமாகையால், குறிப்பாக விருந்தில் வாழைப்பழம் வைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளதாலும் சாப்பிட்ட பிறகே பலரும் பழத்தை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதைத் தவிர்க்கவே இப்பதிவு.. பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம். நன்றி.! நன்றி: தங்கம்பழனி

Wednesday, September 19, 2012

ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது! மாராடைப்பு நிச்சயம்!!

ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது! மாராடைப்பு நிச்சயம்!!

ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கோபத்துடனே இருப்பார்கள். சிடு சிடு முகமும், சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோபத்தினால் பள்ளி மாணவர்களுக்கும் கூட இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நோயை தடுக்க சினத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

ரத்தக்குழாய் சுருக்கம்

சிறு குழந்தைகளோ, இளைஞர்களோ இன்றைய இளம் தலைமுறையினருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது.

கோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்லலாம். அடிக்கடி கோபப்படுவதால் ரத்த அழுத்தம் 160-80 என எகிறுகிறது.

கோபப்படும் நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. அதுவே, உடலின் ரத்தக்குழாயை சுருக்கி விடுகிறது. உடலில் ரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக ரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது. அதிக கோபம் வரும்போது, அதிகமான அளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால், மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போய் திடீர் மரணங்கள் சம்பவிக்கின்றன.

அமெரிக்காவில் இருதய நலன்துறை தலைவரும் மியாமி மில்லர் ஸ்கூல் நரம்பியல் துறை தலைவருமான ரால்க் சாக்கோ, மனிதர்களின் கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது, இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம் என்று கூறியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு இதயநோய்

இன்றைக்கு பள்ளிமாணவர்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கு ஏற்படும் கோபத்தினால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் பள்ளி மாணவர்களை தாக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கோவையில் ஒரு பள்ளியில் 1,500 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 8 பேருக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மாணவர்களிடையே கோபம் ஏற்படுவதை தவிர்க்க அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகளை அளிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இருதயம் நன்றாக இருந்தால்தான் ஒரு மனிதன் நன்றாக இருக்கமுடியும். எனவே கோபத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தாலே மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா?

இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா?

கோவை கே.ஜி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் சி.பாலசுப்ரமணியம், தினகரன் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்:

மாரடைப்பை வெல்ல முடியுமா?

மாரடைப்பு என்றும் மணி அடித்துக்கொண்டு வராது. இந்நோய் பலரது உயிரையும் பறித்துள்ள விநோத நோய். தள்ளிவைப்பு, அசட்டை ஆகியவை மாரடைப்பைவிட கொடிய நோய். முழு உடல் பரிசோதனையின்போது மாரடைப்பு அறிகுறி தெரியவந்தால், மாரடைப்பை நாம் வென்றுவிடலாம்.

நடக்கும்போது அதிகம் மூச்சு வாங்குவது எதனால்...?

ஹார்ட் அட்டாக் என்பது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது. இருதய தசைகளின் செயல்பாடு குறைவதால் இருதயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தின் அளவு குறைந்து, சரியாக ரத்தம் வெளியேறாத நிலையில் ஏற்படும் பாதிப்பே ஹார்ட் ஃபெயிலியர். சம தளத்தில் நடக்கும்போது மூச்சு வாங்கினால் ஹார்ட் ஃபெயிலியர் உள்ளது என்று அர்த்தம். உடனடியாக இருதய நோய் நிபுணரை சந்திப்பது நல்லது.

அதிக கோபம் ஆபத்தை விளைவிக்குமா?
அதிக கோபம் வரும்போது அதிகளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடும். உச்சக்கட்டமாக உயிரும் போய்விடும்.

சாதாரண நெஞ்சு வலிக்கு முதலுதவி மட்டும் போதுமா?
நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனே வீட்டுக்கு அருகில் உள்ள டாக்டரை பார்த்து உடனடி சிகிச்சை எடுப்பது நல்லது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தரமான இருதய நோய் நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும். நாளை பார்க்கலாம்... காலையில் செல்லலாம்... என தள்ளிப்போடக்கூடாது. இது காலனை வரவழைக்கும். மாரடைப்பு யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காது.

இதயநோய் ஏற்பட பற்களும் ஒரு காரணம் என்கிறார்களே. எப்படி?

பற்களில் பாக்டீரியாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் விடுகிறவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது. வயிற்றில் குடல் புண்ணை உருவாக்கும் ஹெலிக்கோ பேக்டர் பைலோரே என்ற நுண்ணுயிரி மாரடைப்பை உருவாக்குகிறது என தற்போது தெரியவந்துள்ளது.

உணவில் பயன்படுத்த உகந்த எண்ணெய் எது?
கொழுப்பு வியாதிக்கு முக்கிய காரணமாக இருப்பது சாப்பாட்டில் நாம் பயன்படுத்தும் எண்ணெய்தான். உணவில் நாம் பயன்படுத்தும் மூன்று விதமான எண்ணெயில் கரையும் கொழுப்பு, கரையாத கொழுப்பு என இருவித கொழுப்பு உருவாகிறது. தாவர வகைகளில் இருந்து தயாரிக்கும் எண்ணெய் சிறந்தது. விலங்குகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உகந்தது அல்ல.

அத்லெடிக் ஹார்ட் என்றால் என்ன?

விளையாட்டு வீரர்களுக்கு இருதயத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதுதான், அத்லெடிக் ஹார்ட் என்று சொல்லப்படுகிறது.

உணவில் வெள்ளை பொருட்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்களே, அது என்ன?

சர்க்கரை, உப்பு, மாவு என்ற மூன்று வெள்ளை பொருட்கள்தான் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன. அந்த வெள்ளை விஷயங்களை ஒதுக்கிவிட வேண்டும். இந்த வெள்ளை பொருட்களை ஒதுக்கிவிட்டு, மனதை எப்போதும் வெள்ளையாய் வைத்திருக்க வேண்டும். தினம் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நோய் நம்மை அண்டாது.

இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா? மாரடைப்புக்கு கொழுப்பு தான் காரணம் என்கிறார்களே?

மாரடைப்புக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனித மனம் ஏ, பி என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஏ பிரிவை சேர்ந்தவர்கள் சுறு சுறுப்புடன் எப்போதும் டென்ஷன் உடனேயே இருப்பார்கள். இலக்கை நிர்ணயித்து அதை அடைவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். இந்த மனம் பெற்றவருக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது.

பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!

பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!!

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.

பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.

சித்தர்களின் அறிவியலின்படி மானிடர் அனைவருள்ளேயும் விநாயகம் எனும் கட்டற்ற, முதன்மையான சக்தி ஒன்றுண்டு. இதை ஒருவர் உள்நோக்கி (தியானித்து) தட்டி எழுப்ப வல்லவராயின் அவர் தன்னை(பிள்ளை) யார் என்று அறியும் இறைநிலையை அடைகிறார். தானாகிய பிள்ளையை யார் என்று அறிந்த சித்தர்கள் அனைவரும் பிள்ளையார்களே. நாமனைவரும் பிள்ளையாராகும்(தன்னையறியும் / சிவநிலை / இறைநிலை யடையும்) வாய்ப்பு அரிய பிறப்பான மானிடர் அனைவருக்கும் இயற்கையாவே உண்டு.

தனது குற்றங்களையும் பாவங்களையும் இறைவனிடம் ஒப்புக் கொடுத்து மன்னிப்புப் பெறும் ஒரு உபாசனையாக தோப்புக்கரணம் இருந்துவந்துள்ளது. வினைகளை வேரறுக்கும்; கடவுளான விநாயக வழிபாட்டில் தோப்புக்கரணம் முக்கிய இடம் வகித்துவருகிறது. பாடசாலைகளிலும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் குற்றங்களுக்கு வழங்கப்படும் ஒரு தண்டனையாகவும் தோப்புக் கரணம் கொள்ளப்பட்டுவந்திருக்கிறது. இந்த வகையில் கீழைத்தேய மக்களுக்கு இத் தோப்புக்கரணம் நன்கு அறிமுகமிக்க ஒன்றாகும்.

செய்யும் முறை

பாதங்களை ஒருங்கு குவித்தபடி நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.

மேலைத்தேய மருத்தவ ஆராய்ச்சிகளும் சிபார்சுகளும்
லொஸ் ஏஞ்சலைச் சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் றொபின்ஸ் (Dr.Eric Robins) தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுவதாக கூறுகிறார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளை எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல புள்ளிகளைப் பெற்றதாகக் காட்டுகிறார்.
யேல் பல்கலைக்கழக (University of Yale) நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் ( Dr.Eugenius Aug) அங் இடது கையால் வலத காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்.
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விடயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

காணொளி: பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.
http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

Monday, September 17, 2012

கைரேகை மச்சம்

கைரேகை மச்சம்
கோள்கள் இடம் மாறும்போது அவைகளிலிருந்து வரும் காந்த அலைகளுக்கேற்றவாறு மனித உடலில் தோல் மற்றும் கைகளில சில இரசாயன மாற்றங்கள் உண் டாகும். அவைகளைத்தான் மச்சம் என் றும் கைரேகை என்றும் கூறுகின்றனர். கிரகங்களால் இன்னென்ன அழுத்தம் இருக்குமேயானால் இன்னென்ன இடத்தில் மச்சம் வரும் என் றும் அவைகள் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருப்பதால் அந்த கிரகங்களிலிருந்து வரும் அலைகளின்
வேறுபாட்டினால் கைரேகையும் மாறிக் கொண்டே வரும் என்றும் முன்னோர்கள் கண்டனர். அதைக் கொண்டுதான் அவர்கள் பலனைச் சொல்வார்கள். ஆனால் அவ்வளவும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இயற்கையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் நுண்மையாக கணிக்க முடியாது. ஜோதிடர்களால் கூறப்படும் ஹேஷ்யங்கள் ஓரளவுக்குத்தான் சரியாக இருக்கும்.

ஒரு கைரேகைக்காரன் நான் கேட்காமலேயே என்னிடம் வந்து எனது கைரேயையைப் பார்த்துவிட்டு எனது ஆயுள் 58 வயது வரை தான் என்று கூறினான். எதை வைத்துக் கொண்டு 58 வயது என்று சொல்கின்றாய் என்று கேட்டபோது, கைரேகையின் குறுக்கே ஒரு கோடு இருக்கிறது அதனால்தான் அப்படி சொன்னேன் என்றான். எனது பணியினை நல்ல முறையில் செய்து முடிக்க எனது ஆயுளை இன்னும் கொஞ்சம் காலம் நீடிக்க ஒரு வழி சொல் என கேட்டேன். அதற்கு கைரேகைக்காரன் அதெல்லாம் செய்ய முடியாதுங்க இப்போது இருப்பதைத்தான் கணக்கு போட்டு சொல்ல முடியும் நீங்களாகவே தான் உங்களது செயல்களால் உங்களது ஆயுட்காலத்தை மாற்றிக் கொள்ள முடியும் அது பற்றிய விளக்கமும் உங்களுக்குத் தெரியும் என்றான்.

தவத்தினாலோ அல்லது நாமே உணர்ந்த ஒரு தன்னையினாலோ நம்முடைய ஆயுட்காலத்தை நாமே மாற்றிக் கொள்ளலாம். நாம் ஏற்கனவே செய்த செயல்களின் விளைவாக இன்றைய நிலை என்கின்றபோது, இன்று முதல் நாம் செய்கின்ற செயல்களின் விளைவாக நமது எதிர்காலம் அமையும் என்பதை உணர வேண்டும். நாமே உருவாக்கிக் கொள்ளக்கூடிய ஒன்றுக்காக, கைரேகைக்காரனையோ, கிளி ஜோசியனையோ நம்பிப் பணத்தையும், பொழுதையும் விரயமாக்குவதை தவிர்ப்பதோடு நம்முடைய மனத்தையும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியம் வேண்டியதில்லை
by Vethathiriyam for World Peace on Monday, September 17, 2012 at 6:55pm •