Wednesday, September 19, 2012

பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.

பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.

சித்தர்களின் அறிவியலின்படி மானிடர் அனைவருள்ளேயும் விநாயகம் எனும் கட்டற்ற, முதன்மையான சக்தி ஒன்றுண்டு. இதை ஒருவர் உள்நோக்கி (தியானித்து) தட்டி எழுப்ப வல்லவராயின் அவர் தன்னை(பிள்ளை) யார் என்று அறியும் இறைநிலையை அடைகிறார். தானாகிய பிள்ளையை யார் என்று அறிந்த சித்தர்கள் அனைவரும் பிள்ளையார்களே. நாமனைவரும் பிள்ளையாராகும்(தன்னையறியும் / சிவநிலை / இறைநிலை யடையும்) வாய்ப்பு அரிய பிறப்பான மானிடர் அனைவருக்கும் இயற்கையாவே உண்டு.

தனது குற்றங்களையும் பாவங்களையும் இறைவனிடம் ஒப்புக் கொடுத்து மன்னிப்புப் பெறும் ஒரு உபாசனையாக தோப்புக்கரணம் இருந்துவந்துள்ளது. வினைகளை வேரறுக்கும்; கடவுளான விநாயக வழிபாட்டில் தோப்புக்கரணம் முக்கிய இடம் வகித்துவருகிறது. பாடசாலைகளிலும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் குற்றங்களுக்கு வழங்கப்படும் ஒரு தண்டனையாகவும் தோப்புக் கரணம் கொள்ளப்பட்டுவந்திருக்கிறது. இந்த வகையில் கீழைத்தேய மக்களுக்கு இத் தோப்புக்கரணம் நன்கு அறிமுகமிக்க ஒன்றாகும்.

செய்யும் முறை

பாதங்களை ஒருங்கு குவித்தபடி நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.

மேலைத்தேய மருத்தவ ஆராய்ச்சிகளும் சிபார்சுகளும்
லொஸ் ஏஞ்சலைச் சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் றொபின்ஸ் (Dr.Eric Robins) தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுவதாக கூறுகிறார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளை எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல புள்ளிகளைப் பெற்றதாகக் காட்டுகிறார்.
யேல் பல்கலைக்கழக (University of Yale) நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் ( Dr.Eugenius Aug) அங் இடது கையால் வலத காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்.
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விடயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

காணொளி: பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.
http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

No comments: