Monday, September 17, 2012

கைரேகை மச்சம்

கைரேகை மச்சம்
கோள்கள் இடம் மாறும்போது அவைகளிலிருந்து வரும் காந்த அலைகளுக்கேற்றவாறு மனித உடலில் தோல் மற்றும் கைகளில சில இரசாயன மாற்றங்கள் உண் டாகும். அவைகளைத்தான் மச்சம் என் றும் கைரேகை என்றும் கூறுகின்றனர். கிரகங்களால் இன்னென்ன அழுத்தம் இருக்குமேயானால் இன்னென்ன இடத்தில் மச்சம் வரும் என் றும் அவைகள் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருப்பதால் அந்த கிரகங்களிலிருந்து வரும் அலைகளின்
வேறுபாட்டினால் கைரேகையும் மாறிக் கொண்டே வரும் என்றும் முன்னோர்கள் கண்டனர். அதைக் கொண்டுதான் அவர்கள் பலனைச் சொல்வார்கள். ஆனால் அவ்வளவும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இயற்கையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் நுண்மையாக கணிக்க முடியாது. ஜோதிடர்களால் கூறப்படும் ஹேஷ்யங்கள் ஓரளவுக்குத்தான் சரியாக இருக்கும்.

ஒரு கைரேகைக்காரன் நான் கேட்காமலேயே என்னிடம் வந்து எனது கைரேயையைப் பார்த்துவிட்டு எனது ஆயுள் 58 வயது வரை தான் என்று கூறினான். எதை வைத்துக் கொண்டு 58 வயது என்று சொல்கின்றாய் என்று கேட்டபோது, கைரேகையின் குறுக்கே ஒரு கோடு இருக்கிறது அதனால்தான் அப்படி சொன்னேன் என்றான். எனது பணியினை நல்ல முறையில் செய்து முடிக்க எனது ஆயுளை இன்னும் கொஞ்சம் காலம் நீடிக்க ஒரு வழி சொல் என கேட்டேன். அதற்கு கைரேகைக்காரன் அதெல்லாம் செய்ய முடியாதுங்க இப்போது இருப்பதைத்தான் கணக்கு போட்டு சொல்ல முடியும் நீங்களாகவே தான் உங்களது செயல்களால் உங்களது ஆயுட்காலத்தை மாற்றிக் கொள்ள முடியும் அது பற்றிய விளக்கமும் உங்களுக்குத் தெரியும் என்றான்.

தவத்தினாலோ அல்லது நாமே உணர்ந்த ஒரு தன்னையினாலோ நம்முடைய ஆயுட்காலத்தை நாமே மாற்றிக் கொள்ளலாம். நாம் ஏற்கனவே செய்த செயல்களின் விளைவாக இன்றைய நிலை என்கின்றபோது, இன்று முதல் நாம் செய்கின்ற செயல்களின் விளைவாக நமது எதிர்காலம் அமையும் என்பதை உணர வேண்டும். நாமே உருவாக்கிக் கொள்ளக்கூடிய ஒன்றுக்காக, கைரேகைக்காரனையோ, கிளி ஜோசியனையோ நம்பிப் பணத்தையும், பொழுதையும் விரயமாக்குவதை தவிர்ப்பதோடு நம்முடைய மனத்தையும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியம் வேண்டியதில்லை
by Vethathiriyam for World Peace on Monday, September 17, 2012 at 6:55pm •

No comments: