Friday, March 25, 2011

தியானம் செய்தால்

தியானம் செய்தால்.........



தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும்.
அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.நமது மனது ஒரு நிலைபடாது . அலைபாய்ந்து கொண்டே இருக்கும் . மனதை ஒரு நிலைப்படுத்துவதட்க்கு தியானம் முக்கிய பங்கை வகிக்கிறது . நாம் எல்லோரும் இறைவனை நினைத்தே தியானம் செய்கின்றோம் . எல்லோரும் நமது மனதில் உள்ள சுமைகளை குறைக்கவும் , மனதை ஒரு நிலைப்படுத்தவும் தியானம் செய்வது அவசியம் .



அதிகாலை எழுந்திருக்கும் போதே, ' இறைவா இன்றைய நாள் உங்களை இடைவிடாது நினைக்கும் நாளாக இருக்க அருள் செய்யுங்கள்' இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய வேண்டும் என்று இறைவனை தியானித்து எழுந்திருக்க வேண்டும் . அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.

அதிகாலையில் 5மணியும் மாலைவேளையில் 6-7மணியும் தியானம் செய்வதற்கு சரியான நேரமாகும். தூய்மையான அமைதியான இடம் தியானம் செய்வதற்கு அவசியமாகும். தியானத்தின் ஆரம்ப நிலையில் பல வகையான தடங்கல்களும், சிரமங்களும் வரத்தான் செய்யும். இதைக்கடந்து தான் முன்னேற வேண்டும் . தியானம் செய்வதற்க்கு அமைதியான சூழல் , சுத்தமான காற்று என்பன முக்கியம் . தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி பொறுமைதான். தியானத்தின் ஆரம்பத்தில் மனம் அலைபாயும். பொறுமைபறந்து போகும். ஆனாலும் போகப் போக அது நன்மை பயக்கும்.


நேரம் கிடைக்காதவர்கள் தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்து கொள்ளலாம் . இந்து மதத்தவர்கள் ஓம் என்றும் , முஸ்லீம்கள் அல்லா என்றும் , கிறிஸ்தவர்கள் இயேசுவே என்று நினைத்தும் இறைவனை தியானம் செய்து கொள்கிறார்கள் . தியானம் செய்யும் போது மனதை எங்கேயும் அலைய விடக்கூடாது. மனம் ஒரு குரங்கு. அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும். சம்மந்தமில்லாத விஷயங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும். நேற்று உண்ட உணவு, உடை, எப்போதோ கேட்ட பாட்டு, போனற சிந்தனைகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். இவற்றை எல்லாம் கடந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய வேண்டும் .

தியானம் செய்து அமைதியை பெற்றாலே வாழ்க்கையில் சந்தோசத்தை அடையலாம் . கடவுளை நினைத்து தினந்தோறும் குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம் மேற்கொள்ளலாம். தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை.


யோகிகள், முனிவர்கள் போன்றோர் வனங்களில் இறைவனை நோக்கி தவம் இருக்கும் போது புலித்தோல், மான்தோல் போன்ற மிருகங்களின் தோல் மீது அமர்ந்து தியானித்தனர் என்பதை புராணங்கள் மூலம் நாம் அறிந்து கொள்கின்றோம் . தியானத்தில் இறை அன்பு இருக்கிறது. தியானம் நமது வாழ்க்கையை இனிதாக்கும். தியானம் கஷ்டங்களைப் போக்கிவிடும். இவ்வளவு விசயமும் இருக்கிறது இந்த தியானத்தில் .

தியானம் செய்தால் நாம் பல நன்மைகள் , பயன்களை அடைகின்றோம் . ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்குகிறது,அலைபாயும் மனம் அடங்கி அமைதியடைகிறது, சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது, நோய் இன்றி பெரு வாழ்வில் பல்வேறு பலன் கிடைக்கிறது, மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது, உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது, அன்பு, சாந்தம், ஆனந்தம், இன்பம் சுரக்கிறது, சக்தி விரயமாவது தடுக்கப்படுவதுடன் உடலுக்கு புதிய சக்தியும் உற்பத்தியாகிறது, மனம் இறுக்கத்திலிருந்து தளர்கிறது, உடல் முழுதும் பூரண ஓய்வு கிடைக்கிறது, குறைவான பிராண வாயுவே செலவாகிறது , மனிதனின் சிந்தனை சக்தியை தூண்டிவிடுகிறது, தூக்கத்தினால் கிடைப்பதை விட உடலுக்கு அதிகமான ஓய்வு கிடைக்கிறது. இவ்வளவு பயன்களையும் நாம் தியானம் செய்வதன் மூலம் அடைகின்றோம் .

யார் இந்த சித்தர்கள்

யார் இந்த சித்தர்கள்
சித்தர்கள் என்றால் சித்தை உடையவர்கள் அதாவது அறிவு படைத்தவர்கள் தான் இந்த சித்தர்கள் எனப்படுவோர் . பதினெட்டு சித்தர்கள் உள்ளனர் . நந்தீசர் , அகத்தியர் , திருமூலர் , புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக் கண்ணர், போகர், கருவூரார், கொங்கணவர், காலாங்கிநாதர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பைச் சித்தர், இடைக்காடர், சட்டை முனி, அழுகண் சித்தர், அகப்பேய்ச் சித்தர், தன்வந்திரி என பதினெட்டு சித்தர்கள் உள்ளனர் .


சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும்,எமது சூழலில் , வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள். சித் என்றால் அறிவு என்று பொருள் . சித்தர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை கொண்டவர்கள் .இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன.



சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும் சொல்கிறார் . தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!என்று சொல்கிறார் . சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும். எல்லோரும் சித்தர்கள் ஆகி விட முடியாது . இப்போதெல்லாம் எல்லா மனிதர்களிடமும் நாம் அன்பையோ , உண்மையையோ , நேர்மையையோ எதிர்பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் சித்தர்கள் இவ்வளவு பண்புகளை தம்மிடத்தில் கொண்டு வாழ்ந்து இருக்கிறார்கள் . நல்ல சிந்தனைகளை போதித்தார்கள் . செயல்படுத்தினார்கள் .
சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள் தான் இந்த சித்தர்கள் . சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வர்ணிக்கின்றன . இறைவனிடத்தில் சித்தியை அடைந்தவர்கள் . தமது இருப்பை, உடம்பை , சிந்தையை , சுற்றத்தை , தெளிவாக புரிந்தவர்கள் அறிந்தவர்கள் .



இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.



சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள்,புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம்.
சித்தர்கள் என்போர் யார் , எத்தனை சித்தர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கு புரிகிறது . நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் இந்த சித்தர்கள் . நாம் எல்லோரும் இவற்றை அறிந்து , தெரிந்து வைத்திருப்பது மிகவும் நன்று .

Wednesday, March 23, 2011

Sky Useful Website - Blogs - eBooks - Video - Audio

Sky Photo Gallery

http://www.vethathiri.org/PhotoSilver/Theater/Default.html
http://vethathiri.in/vethanew/photoalbums.htm
http://picasaweb.google.com/wcsc.delhi
http://picasaweb.google.com/sky.bayarea
http://picasaweb.google.com/skyInner
http://picasaweb.google.com/sky.uae.wcsc
http://picasaweb.google.com/skysharjah

Useful Blogs

http://saintvethathiri.blogspot.com/
http://vethathiri.blogspot.com/
http://mkgthavamaiyam.blogspot.com/2008/09/blog-post_17.html
http://vethathiri-vethathirimaharishi.blogspot.com/2008/07/value-of-introspection-vethathiri.html
http://mvkmtrustkaraikal.blogspot.com/2009/04/about-manavalakalai-mandram-trust.html
http://brahmagnanam.blogspot.com/2007/06/philosopher-thathuvagnani-v
http://skysharjah.blogspot.com/ethathiri.html


Useful Website

http://www.vethathiri.org/Home/
http://www.vethathiri.in/
http://www.sky-yogacentre.org/
http://singaporevethathiri.org/
http://www.skysociety.org.sg/
http://vethathirium.org/
http://skybayarea.org/
http://skyelibrary.org/
http://ocsky.org/
http://saidaijrmmtrust.org/
http://www.attvmvkmtrust.org/
http://www.arulamutham.org/
http://www.gantham.com/


Useful eBooks

http://www.vethathiri.org/Ebooks/
http://www.sky-yogacentre.org/SG/Magazines.html
http://vethathirium.org/backissues.html
http://www.arulamutham.org/magazine.html
http://www.textbooksonline.tn.nic.in/Std1.htm
http://www.projectmadurai.org/pmworks.html
http://www.chennailibrary.com/


Useful Video

http://www.vethathiri.org/VLiveProgramms/
http://www.sivajitv.com/memorable-moments/Salomon-Pappiah---Thenkachi---Suki-Singapore-Speech---Part-3.htm
http://www.globalzero.org/map
http://www.ted.com/talks/lang/eng/pranav_mistry_the_thrilling_potential_of_sixthsense_technology.html
http://www.youtube.com/watch?v=gib2i3_KW5Y

Useful Audio

http://www.sky-yogacentre.org/SG/mp3gallery.html

http://www.vethathiri.org/AudioGallery/Default.aspx

பூமியை விட 400 மடங்கு பெரிதான கிரகம்

பூமியை விட 400 மடங்கு பெரிதான கிரகம் பால்வெளிக்கு அப்பால் கண்டுபிடிப்பு



பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் புதிய கிரகம் ஒன்றை முதல் முறையாக விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியில் இதுவரை 500க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல்முறையாக பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் புதிய கிரகம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹெல்மி ஸ்டிரீம் என்ற நட்சத்திர கூட்டத்தின் அருகே இந்த கிரகம் காணப்படுகிறது. பால்வெளி மண்டலத்தின் தென் பகுதியில் உள்ள இந்த நட்சத்திர கூட்டம் பார்னாக்ஸ் அல்லது பர்னேஸ் என்று அழைக்கப்படுகிறது. 600 கோடி முதல் 900 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த நட்சத்திர கூட்டம் பால்வெளி மண்டலத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


பூமியில் இருந்து 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகம், எச்.ஐ.பி., 13044 பி என அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் நிரம்பி உள்ளன. வியாழன் கிரகத்தை விட 25 சதவீதமும், பூமியை விட 400 மடங்கும் எடை அதிகமானது. சிலி நாட்டில் லா சில்லாவில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்கள் 2.2 மீட்டர் குறுக்களவு உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ததில் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம், அதன் அருகில் உள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. அந்த நட்சத்திரத்தில் இருந்த ஹைட்ரஜன் வாயு முற்றிலும் எரிந்து விட்டது. இதனால் அந்த நட்சத்திரம் விரிவடைந்து "சிவப்பு குள்ளன்' என்ற நிலைக்கு மாற்றமடைந்து வருகிறது. அந்த நட்சத்திரத்தின் மையப்பகுதியில் உள்ள ஹீலியம் வாயு தற்போது எரிந்து வருகிறது.


நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகம், அதன் ஈர்ப்பு விசையின் காரணமாக இழுக்கப்பட்டு விழுங்கப்படும். இதனால் அந்த கிரகத்தின் ஆயுள் முடிந்து விடும் என்று கருதப்படுகிறது. ஜெர்மன் நாட்டு ஹெடில்பெர்க் நகரில் உள்ள மேக்ஸ் - பிளாங் விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர் ரெய்னர் கெல்மன் கூறுகையில், "பால்வெளி மண்டத்திற்கு அப்பால் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த உற்சாகமூட்டக்கூடிய நிகழ்வாகும். மேலும், பல புதிய நிகழ்வுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இது ஏற்படுத்தியுள்ளது' என்றார்.


-நமது சிறப்பு நிருபர்-
Source: Dinamalar

Tuesday, March 22, 2011

மனு முறைகண்ட வாசகம்

மனு முறைகண்ட வாசகம்
**********************************


நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!
- வள்ளலார்

Monday, March 21, 2011

வேதாத்திரியம் - 14 அம்ச திட்டங்கள்

வேதாத்திரியம் - 14 அம்ச திட்டங்கள்
1 . போரில்லா நல்லுலகம்
2 . பொருள் துறையில் சம நீதி
3 . நேர்மையான நீதி முறை
4 . நில உலகுக்கோர் ஆட்சி
5 . சீர் செய்த பண்பாடு
6 . சிந்தனையோர் வழி வாழ்வு
7 . சிறப்புணர்ந்த பெண் மதிப்பு
8 . தெய்வா நீதி வழி வாழ்தல்
9 . தேர் திரு விழா தவிர்த்தல்
10 . சிறுவர்கட்கே விளையாட்டு
11 . செயல் விளைவு உணர் கல்வி
12 . சீர் காந்த நிலை விளக்கம்
13 . பார் முழுதும் உணவு - நீர் பொதுவாக்கல்
14 . பல கடவுள் பழக்கம் ஒழித்து, உண்மை ஒன்றை வழிபடுதல்.
வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன்

Sunday, March 20, 2011

உலக பொது சமயத்தின் உண்மை உணர்வு

உலக பொது சமயத்தின் உண்மை உணர்வு



1. எனது பிறப்பு, வளர்ப்பு, காப்பு இவற்றிற்கு கருணையுள்ள, கண்கண்ட கடவுளாகவும், காப்பாளராகவும், துணைவர்களாகவும் உள்ள எனது அன்னை, தந்தை, குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் என்ற ஐந்து பெரியவர்களையும் நன்றி மறவாமல் மதித்து வாழ்வேன்.


2. பேரியக்க மண்டலம் முழுமையும் நீக்கமற நிறைந்து எல்லாப் பொருட்களிலும், உயிர்களிலும் முற்றறிவாக இயங்கி அருளாட்சி புரியும் மெய்ப்பொருள் எல்லாம் வல்லது, எங்கும் உள்ளது, எல்லாம் அறியும் ஆற்றலுடையது. என்னுள்ளும் எனதறிவின் உட்பொருளாய் உள்ளது என்பதை நம்புகிறேன், உணர்கிறேன். ஒத்துக்கொள்கிறேன்.


3. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நான் செய்யும் தொழில்களில் எனது நோக்கம், திறமை, இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருட்கள் அல்லது மக்கள். இவற்றிற்கு ஏற்ப இன்பமோ, துன்பமோ விளையும் உண்மையை, எல்லாம் வல்ல தெய்வமே அதன் பேரருள் நிலையிலிருந்து நீதியோடு வழங்குகிறது என்ற உண்மையை மதிக்கிறேன். எச்செயலையும் எனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், உடலுக்கும், உயிருக்கும், துன்பம் விளையாத முறையில் விழிப்போடு செயலாற்ற என்னால் இயன்றவரை அக்கறையோடு முயற்சிப்பேன். இதனையே இறைவழிபாடாகக் கொள்வேன்.


4. உணவு, உழைப்பு, ஓய்வு, உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து தொழில்களையும் அலட்சியம் செய்யாமல், மிகையாக அனுபவிக்காமல், முரணாக அனுபவிக்காமல் அளவோடு, முறையோடு செய்து உடல் நலம், மனநலம், பொருள் வளம், சமுதாய நலம் காப்பேன்.


5. அறிவின் நலம் காத்து அதனை மேன்மை நிலைக்குக் கொண்டுவர தெய்வ வழிபாடும், சமுதாய மக்களிடம் நட்புறவை இனிமையாக அமைத்துக் கொள்ள ஒழுக்கம், கடமை, ஈகை, என்ற மூன்றிணைப்பு அறநெறியும் மையக் கருத்துகளாகக் கொண்டவையே எல்லா மதங்களும் என்பதை உணர்ந்தேன். எல்லா மதங்களுக்கும் மதிப்பளித்து வாழ்வேன். எந்த உருவில், எந்த குணத்தில் தெய்வத்திற்கு உருகொடுத்து வணங்கினாலும் அவரவர் அவரறிவால் எடுக்கும் உருவம், குணம் என்பதையறிந்து எவ்வகை வழிபாடும் அறிவை வழிபடும்கருத்தே என்பதை உணர்ந்து கொண்டேன். எந்தவகை இறைவணக்கத்தையும் அலட்சியப்படுத்தாமல் மதித்து போற்றுவேன்.


6. நான், குடும்பம், சுற்றம், சமுதாயம், உலகம் என்ற ஐந்து பிரிவிற்கும் ஒன்றால் ஒன்று கெடாமல் எனது கடமைகளை வழுவாமற் செய்வேன்.


7. குடும்பத்தில், சமுதாயத்தில், ஆட்சிமுறையில், உலக அரங்கில் நடைபெறும் குற்றங்கள், தவறுகள், பழிச்செயல்கள் இவற்றிற்கு எந்த ஒரு தனி மனிதனையும் பொறுப்பாக்கி அவர் மீது வெறுப்போ, பகையோ, அலட்சியமோ கொள்ளமாட்டேன். எனெனில் எந்தக் குற்றத்திற்கும், தவறுக்கும் நீண்டகால சமுதாயத்தில் நிலவி வந்த கருத்துக்கள் செயல்கள், சூழ்நிலைகளால் ஏற்பட்ட நிர்பந்தங்கள் இவற்றால் ஏற்பட்ட பதிவுகளும், கருத்தொடராக தொடர்ந்து வருவதும் இன்றுள்ள சமுதாய சூழ்நிலைகளும்தான் எல்லா பழிச்செயல்களுக்கும் காரணம் என்பதை அறிவேன். இன்றுள்ள மக்கள் மனம்தெளிந்து திருந்துவதற்கு உதவி செய்ய ஆன்மிக அறிவை வளர்ப்பதும், துன்பப்படும் மக்களுக்கு உதவி செய்வதும், வருங்கால சமுதாய அறிவுத் தெளிவோடு அறநெறி பின்பற்றி வாழவும், உலக நாடுகளுக்கிடையே அமைதி நிலவவும் என்னால் இயன்ற தொண்டுகளைச் செய்வேன்.


8. பரிணாம சிறப்புப்படி எல்லா அண்டங்களையும் உருவாக்கிக் காக்கும் இயற்கை உலகில் உயிர்களை உற்பத்தி செய்து வளர்க்கும் பொறுப்பினை பெண்ணினத்திடமே ஒப்புவித்துள்ள கருணை நிறைந்த அருட்பொறுப்பை உணர்ந்து பெண் குலத்திடம் எப்பொழுதும் உரிய மதிப்புடைய வனாக இருப்பேன்.


9. எனது வருமானத்தில் நூற்றுக்கு ஒன்று வீதம் ஒதுக்கி பிறர் நலத்திற்காகச் செலவிட்டு வருவேன்.


10. எனது ஆன்மா தூய்மைபெற, மேன்மை பெற அகத்தவம் எனும் அகநோக்குப் பயிற்சியைப் பின்பற்றி சிறப்படைவேன்.
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி