Friday, March 25, 2011

தியானம் செய்தால்

தியானம் செய்தால்.........



தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும்.
அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.நமது மனது ஒரு நிலைபடாது . அலைபாய்ந்து கொண்டே இருக்கும் . மனதை ஒரு நிலைப்படுத்துவதட்க்கு தியானம் முக்கிய பங்கை வகிக்கிறது . நாம் எல்லோரும் இறைவனை நினைத்தே தியானம் செய்கின்றோம் . எல்லோரும் நமது மனதில் உள்ள சுமைகளை குறைக்கவும் , மனதை ஒரு நிலைப்படுத்தவும் தியானம் செய்வது அவசியம் .



அதிகாலை எழுந்திருக்கும் போதே, ' இறைவா இன்றைய நாள் உங்களை இடைவிடாது நினைக்கும் நாளாக இருக்க அருள் செய்யுங்கள்' இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய வேண்டும் என்று இறைவனை தியானித்து எழுந்திருக்க வேண்டும் . அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.

அதிகாலையில் 5மணியும் மாலைவேளையில் 6-7மணியும் தியானம் செய்வதற்கு சரியான நேரமாகும். தூய்மையான அமைதியான இடம் தியானம் செய்வதற்கு அவசியமாகும். தியானத்தின் ஆரம்ப நிலையில் பல வகையான தடங்கல்களும், சிரமங்களும் வரத்தான் செய்யும். இதைக்கடந்து தான் முன்னேற வேண்டும் . தியானம் செய்வதற்க்கு அமைதியான சூழல் , சுத்தமான காற்று என்பன முக்கியம் . தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி பொறுமைதான். தியானத்தின் ஆரம்பத்தில் மனம் அலைபாயும். பொறுமைபறந்து போகும். ஆனாலும் போகப் போக அது நன்மை பயக்கும்.


நேரம் கிடைக்காதவர்கள் தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்து கொள்ளலாம் . இந்து மதத்தவர்கள் ஓம் என்றும் , முஸ்லீம்கள் அல்லா என்றும் , கிறிஸ்தவர்கள் இயேசுவே என்று நினைத்தும் இறைவனை தியானம் செய்து கொள்கிறார்கள் . தியானம் செய்யும் போது மனதை எங்கேயும் அலைய விடக்கூடாது. மனம் ஒரு குரங்கு. அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும். சம்மந்தமில்லாத விஷயங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும். நேற்று உண்ட உணவு, உடை, எப்போதோ கேட்ட பாட்டு, போனற சிந்தனைகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். இவற்றை எல்லாம் கடந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய வேண்டும் .

தியானம் செய்து அமைதியை பெற்றாலே வாழ்க்கையில் சந்தோசத்தை அடையலாம் . கடவுளை நினைத்து தினந்தோறும் குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம் மேற்கொள்ளலாம். தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை.


யோகிகள், முனிவர்கள் போன்றோர் வனங்களில் இறைவனை நோக்கி தவம் இருக்கும் போது புலித்தோல், மான்தோல் போன்ற மிருகங்களின் தோல் மீது அமர்ந்து தியானித்தனர் என்பதை புராணங்கள் மூலம் நாம் அறிந்து கொள்கின்றோம் . தியானத்தில் இறை அன்பு இருக்கிறது. தியானம் நமது வாழ்க்கையை இனிதாக்கும். தியானம் கஷ்டங்களைப் போக்கிவிடும். இவ்வளவு விசயமும் இருக்கிறது இந்த தியானத்தில் .

தியானம் செய்தால் நாம் பல நன்மைகள் , பயன்களை அடைகின்றோம் . ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்குகிறது,அலைபாயும் மனம் அடங்கி அமைதியடைகிறது, சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது, நோய் இன்றி பெரு வாழ்வில் பல்வேறு பலன் கிடைக்கிறது, மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது, உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது, அன்பு, சாந்தம், ஆனந்தம், இன்பம் சுரக்கிறது, சக்தி விரயமாவது தடுக்கப்படுவதுடன் உடலுக்கு புதிய சக்தியும் உற்பத்தியாகிறது, மனம் இறுக்கத்திலிருந்து தளர்கிறது, உடல் முழுதும் பூரண ஓய்வு கிடைக்கிறது, குறைவான பிராண வாயுவே செலவாகிறது , மனிதனின் சிந்தனை சக்தியை தூண்டிவிடுகிறது, தூக்கத்தினால் கிடைப்பதை விட உடலுக்கு அதிகமான ஓய்வு கிடைக்கிறது. இவ்வளவு பயன்களையும் நாம் தியானம் செய்வதன் மூலம் அடைகின்றோம் .

1 comment:

Anonymous said...

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4(PART-2)
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

Online Books(Tamil- சாகாகல்வி )
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454