Sunday, March 13, 2011

ஞானம்

ஞானம்:

ஐயா, கலவியில் ஈடு படும் போது அந்த இன்ப உணர்வில் என் மனம் நிற்காமல்
அதைச் செய்ய நான் யாது செய்ய வேண்டும்?


எவ்வாறு தாய்ப்பாலின் சுவையறிதலில் மனம் நிற்றல் பிழையில்லை என்று
கருதப்படுகின்றதோ, அதே போன்றது தான் இனப்பெருக்க உணர்வில் வரும்
புலனின்பமும். எனினும் இந்த இன்பத்தை முறைக்குள் நிறுத்தி அளவு கட்டி
பலரும் அனுபவிக்காது போனதால் தான், இந்தப் புலனின்பத்தையே ஆன்மீகம்
வெறுக்கும் காலம் வந்தது, என்பது தான் உண்மை.


முன்னாளில் ஆன்மீகச் சீடர்களுக்கு எப்படி சாத்துவீகம் நிறைந்தோர்
புலனின்பங்களில் மனதை நிறுத்த மாட்டார், என்று சொல்லப் பட்டு வந்ததோ,
அதேபோன்று நானும் உங்களுக்கொன்று சொல்லுகின்றேன், அது யாதெனில்,
புலனின்பங்களில் மனம் வைக்காது அவர்கள் எந்த பிரம்மத்தை அடைந்தார்களோ,
அதே பிரம்மத்தை நீங்கள் புலனின்பங்களில் அளவு முறைக்குட்பட்டு மனதை
வைத்தும் அடையலாம்.


"மனமாம் மறைவஸ்து புலன் வழி இயங்குகையில்
அளவு முறை துயிப்பு புலன் கருவிக்கோர் இன்பம்

முறையது அளவது அற்றதோர் விடாநாட்டம்
துயித்த புலன் கருவிக்கே பெரும் துன்பம்

பெரும் துன்பம் வரக்கண்ட ஞானியர் பலர்
துன்பம் தரும் புலனுணர்வே வேண்டாமென்றார்

இறை தந்த புலனுணர்வை வேண்டாமெனல்
இயற்கைதனை நம்மில் மறுத்தலன்றோ

பாலுணர்வாம் இயற்கை உந்தலை நம் முன்னோர்
மறுத்திருப்பின் நாம் வந்து பிறந்தது எங்கனம்? " - இறையாற்றல் கவி

அளவு முறை தாண்டா புலனின்பம் எதுவுமே இயற்கையின் முழுமையை நோக்கிய
பயணத்தில் அதன் அறிவாம் செயல் விளைவுக் கூறில் துன்ப உணர்வாய் மலராது
என்பது நாம் நன்றாய் அறிந்த ஒன்றே. உங்களுடைய (அல்லது என்னுடைய)
பெற்றோர்களிடம் பால் உணர்வு இன்றிப் போயிருக்குமேயானால், நீங்களோ நானோ
இந்தச் சிந்தனையை மேற்கொள்ள இங்கு இருந்திருக்கவே மாட்டோம்.


பால் உணர்வு என்பது இயற்கையின் 'பரிணாமம்' எனும் அறிவின் கூறின் ஒரு
பகுதி. இறை நிலை தன்னுடைய முழுமையை நோக்கி தானே விரையும் பயணமே பல கோடி
உயிர்களின் தோற்றம் மற்றும் அவற்றின் வளர்ச்சி. இனப்பெருக்கம் எனும்
அறிவின் விரைவு இல்லாது, இயற்கையால் தன் முழுமை நோக்கி பயணித்திருக்க
இயலாது. ஆதலால் பாலுணர்வே இயற்கை முழுமை எய்தும் பாதையாய் தனக்குத் தானே
வைத்திருக்கும் ஒன்று.


நான், என்னிடம் வரும் சீடர்கள், இனப்பெருக்க உணர்வில் புலனின்பம் காணின்,
அவர்களை தாய்ப்பால் உண்ணுகையில் இனிப்புச் சுவையில் மனம் வைத்த குழந்தை
போல் பாவித்து, அவர்களுக்கும் இயற்கையின் முழுமை நிலையைக் காட்டுவேன்.
அளவு முறைப் புலனின்ப வழியில் நடந்தும் நீங்கள் பிரம்மத்தை அடையலாம்.
பிரம்மம் ஒண்ணும் சொல்லாது, கவலைப்படாதீர்கள்.


"ஆடவரது பாலுணர்வில் முறையும் அளவும்
தாம் பாலுண்ட மாதர்க்குத் தரும் மதிப்பு அது" என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.




வள்ளலாரது கருத்துக்களில் 'சீவ வித்துக் குழம்பு வெளியாக வேண்டியதே'
எனும் கருத்து எங்கு வருகின்றது?

நீங்கள் சிறுவனாக இருந்த போது உங்கள் அப்பா வாங்கிய சைக்கிளில் கியர்
பாக்ஸ் எங்கு வருகின்றது? இன்றைக்கு நீங்கள் வாங்கிய பைக்கில் கியர்
பாக்ஸ் இருப்பது எப்படி? அப்படித்தான் இதுவும்.


வேதாத்திரியம் என்ன சொல்கின்றதோ அதை மட்டும் செய்யுங்களேன், தயவு
கூர்ந்து - மனவளக் கலை என்பது கம்ப்யூட்டர் போல, அது வள்ளலார் என்னும்
கால்குலேட்டரின் அனைத்து தேவையான பண்புகளையும் உள்ளடக்கியது. 5 பெருக்கல்
6 என்பதை கம்ப்யூடரில் பெருக்கி விட்டு, பின் கால்குலேட்டரிலும் பெருக்கி
சரி பார்ப்பது போன்றதே சீவ வித்துக் குழம்பின் தத்துவத்தை
வேதாத்திரியத்தில் படித்து விட்டு, பின் வள்ளலாரிடம் சென்று சரி
பார்ப்பது. வள்ளலாரின் ஆன்மீகத்தில் நல்லதென்று ஒன்று இருந்தால் அது
கட்டாயம் நம்மிடமும் இருக்கும், அங்கே அவசியமற்றதாய் ஏதும் இருப்பின்,
அது இங்கே இருக்காது. உதாரணம், அவர்கள் அருட் பெரும் சோதியை இன்னமும்
அவர்களது அறிவுத் திருக் கோவிலில் சூடத் தட்டில் தான்
பார்க்கின்றார்கள், நாம் நமது அறிவுத் திருக் கோவிலில் இறை நிலைத்
தவத்தில் அறிவாய் காண்கின்றோம். அவ்வளவே.

No comments: