Monday, March 7, 2011

ஆத்மா சாந்தித் தவம்

ஆத்மா சாந்தித் தவம்.

இத்தவத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த வரையில் தெரிவிக்கிறேன்.
மறைந்தோரின் படம் ஒன்றை வைத்து,

(மறைந்தோர், மறைந்த பதினாறாவது நாட்களில் இத்தவத்தை செய்தால் நல்லது என்றும் அல்லது அவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி வைத்துக்கொள்ளலாம்.என்பார்கள்.)

ஆசிரியர் பயிற்சி அல்லது பிரம்மஞானப் பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்வார்கள்.வழக்கம்போல் தவம் தொடங்கும்.அதற்குமுன் மறைந்தோரின் படத்தை
அனைவரும் ஒருமுறை பார்த்துக்கொள்வார்கள். தவத்தில் பேரியக்க மண்டலத்திற்குச்
செல்லும்போது மறைந்தவரின் உருவத்தை நினைவுக்குக் கொண்டுவந்து அவரின் ஆத்மா சந்தியடையும் படி பிரார்த்தனை செய்து அவரை (சக்திகளத்திலேயே)
பேரியக்கமண்டலத்திலேயே விட்டுவிட்டு தவம் செய்வோர் அனைவரும் சுத்தவெளி (சிவகளம்) சென்று தன்னை தூய்மை செய்துகொண்டு படிப்படியாக இறங்கிவந்து துரியத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு தவத்தை நிறைவு செய்யவேண்டும். அருட்காப்பு மிகவும் அவசியம்
ஒரு பாத்திரத்திலே சிறிதளவு நீரை எடுத்துக்கொள்ளுங்கள். தன் இயல்பு நிலையில் அந்த நீர் பாத்திரத்தை விட்டு நீங்குகின்றதா என்றால் இல்லை, கொஞ்சம் அந்த பாத்திரத்தை சூடாக்குகின்றீர்கள், இப்போது அந்த நீர் சூடாகி நீராவியாகி அந்த பாத்திரத்தை விட்டு நீங்கி மேலெழும்புகின்றது. இதைப் போன்றதே சாலோக்கியத்திலே மிதக்கும் ஒரு ஆன்மாவின் நிலையும். புவியின் துல்லிய சமதளச் சீர்மை சார்ந்து அந்த அலைக்கட்டு [wave packet i.e., genetic center] மிதக்கத்துவங்கும் இடம் புவியை ஒட்டிய வளிமண்டலமே. இந்த நிலையிலே தவஞானியொருவர், தம் உயிராற்றல் களத்தை மேலெழுப்பி துவாதசாங்கம் தாண்டி பேரியக்கமண்டலத்தோடு இணைப்பாரேயானால், அவரது எண்ணத்தோடு ஒன்றரக் கலந்த எந்த ஒரு அலைக்கட்டுக்கும் பேரியக்கமண்டலத்தோடு ஒன்றும் உணர்வு கிட்டுகின்றது. இந்த நிலையிலே அந்த அலைக்கட்டின் அலைச்சுழல் தாழ்ந்து அது பேரியக்க மண்டலத்தை நோக்கி உயர ஏதுவாகின்றது. இத்தகைய இயற்கை நிகழ்வை ஒட்டி அமைந்ததே 'ஆன்மசாந்தி தவம்'.

[அவசியப்படின்] குறிப்பு: ஆன்மசாந்தித் தவம் செய்த மற்றோர் சீவன் முக்தர் ரமணர். ரமணரின் தாயார் தன் மகன் இளவயதிலேயே வீட்டை விட்டு நீங்கியதால் மிகவும் விசனமுற்றிருந்தார், பின்னாளில் தன் மகன் திருவண்ணாமலையில் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டு அவ்விடம் வந்து தன் மகனைச் தரிசித்தார். ரமணரோ தாய் எனும் உலகவியல் பந்தத்துக்கு எந்தவித உணர்ச்சியினடிப்படையில் அமைந்த எண்ணத்திலும் பதில் தரவில்லை. எனினும் தாயுள்ளம் அல்லவா? மகனை விட்டு நீங்குமா அது? அங்கேயே தங்கி ஒரு சாதாரண சன்னியாசியாகவே வாழ்ந்து வயது முதிர்ந்து உயிர் நீத்தார். அவர் உயிர் நீத்ததை கேள்வியுற்ற இரமணர் தாயார் உடல் இருந்த இடம் வந்து, ஆன்ம சாந்தித் தவம் செய்து, தன் அன்னையின் ஆன்மாவுடன் தன் உயிராற்றல் களத்தை இணைத்துக்கொண்டு சக்தி, சிவ களங்களில் ஒன்றரக் கலந்து, அவ்வுயிரை சாமீப்பியம் - சாரூப்பியத்துக்கு உயர்த்தினார். அவசியப்படின் பயன்படுத்திக் கொள்ளவும்.


தத்துவ விளக்கம் இங்கே:

'எண்ணியதாய் எண்ணிய கணமே நிற்றல்' என்பது வரம். உயிரை விட்ட அலைக்கட்டுக்கள் [wave packets] அனைத்துமே புவியின் துல்லிய சமதளச் சீர்மை சார்ந்து இலகுவான பொருண்மையுடைய பொருட்கள் மிதக்கும் பகுதியாகிய சாலோக்கியத்திலே மிதக்கத் துவங்குகின்றன. இந்த அலைக்கட்டுக்களில் உள்ள எண்ண அலைகளின் தன்மையையும் வீரியத்தையும் சார்ந்தே அவைகளின் இலக்கிடம் [target location] அமைகின்றது. ஒரு அலைக்கட்டிலே மெய்யுணர்வு மிக வீரியமாகப் பதிவாகியிருப்பின், அந்த அலைக்கட்டு சாமீப்பியத்தையோ, சாரூப்பியத்தையோ நோக்கி நகரத்துவங்குகின்றது. அறுகுணங்களே வீரியமாகப் பதிவான அலைக்கட்டோ, அக்குணங்களின் அடிப்படையிலமைந்த நிறைவேறா இச்சைகளை நிறைவேற்றும் பொருட்டு ஒத்த குணமுடைய மற்றோர் வாழும் உடலுக்குப் பயணமாகின்றது. இந்த மேனோக்கிய நகர்தல் நிகழ்வோ, அல்லது கீழ்நோக்கிய நகர்தல் நிகழ்வோ உயிரை விட்ட நிலையிலேயோ, அல்லது ஓரிரு வாரங்களுக்குள்ளாகவோ ஏற்படும் ஒன்று. [1-3 அலை நிலையில் உயிரை இழக்கும் கருமையத்துக்கு இத்தகைய மேனோக்கு நகர்வு நிகழ்வு உடனடியாக நிகழ்ந்து விடவல்லது.] தவப் பயிற்சியால் முழுமை நிலை அடையாதவர்களோ, அல்லது தவம் செய்து உயிராற்றலை உணராதவர்களோ, நுண்ணிய அலைநிலைப் பிரபஞ்ச மண்டலங்களுக்கு [சக்தி களம், சிவ களம்] உடனடியாக நகர்வது என்பது இயலாத ஒன்று. இத்தகைய கருமையங்களுக்குத் தான் ஆன்மசாந்தித்தவம் என்பது பேருதவியாக அமைய வல்லது. 'எண்ணியபோது எண்ணியதாய் நிற்கவல்லோர்', உயிரை விட்ட ஒரு அலைக்கட்டை [wave packet] தம் எண்ணங்களோடு ஒன்றர இணைத்துக்கொண்ட நிலையில் சக்திகளமாயும் சிவகளமாயும் ஒன்றுதல் என்பதே இதன் அடிப்படை. இந்த சாதகத்திலே அந்த அலைக்கட்டில் 1-7 அலை நிலையே வீரியமாகப் பதிவாவதால், அந்த அலைக்கட்டு தாழ்அலைச்சுழல் பிரபஞ்ச மண்டலங்களை அடைகின்றது. இது தான் அடிப்படைத் தவவிளக்கம்.

No comments: