Tuesday, March 29, 2011

'சூக்கும பயணம்'

'சூக்கும பயணம்' என்பது என்ன?விளக்கம் தேவை..."
என ஒரு அன்பர் கேள்வி கேட்டார்.
தெரிந்த அன்பர்கள் தங்கள் அனுபவங்களை
பகிர்ந்து கொள்ளலாம்.
நான் 1992 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி ஆழியார் சென்ற போது மகரிஷி அவர்கள் கொடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.


முன் ஏற்பாடு :
மதிய உணவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வேண்டும் என்றால் இரவு நீர் ஆகாரம் மட்டும் போதும்.
இரவு சவ ஆசனத்தில் படுத்து மணி பூரகத்தில் மனம் வைத்து படுக்க வேண்டும்.
சீவ காந்த பயிற்சி செய்து பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும்.
கண்ணாடி பயிற்சியில் சூக்கும வெளிப்பாடு இருக்க வேண்டும்.


பயிற்சி :

காலையில் 4 .30 மணிக்கு கண் விழித்து, சிறு நீர் கழித்து, கை கலீல் நீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மணி பூரகத்தில் மனம் வைத்து சவ ஆசனத்தில் படுத்து தவம் செய்ய வேண்டும்.
மகரிஷி அவர்கள் வந்து சூக்குமமாக நம்மை வழி நடத்தி செல்வார்.

விளக்கம் :

எண்ணத்தின் ஆற்றல், இறையாற்றல் காந்தம், இவையிரண்டின் வாயிலாக சூக்குமப் பயணத்தில் பெறக்கூடிய அனைத்தையும் நம்மால் பெற இயலும். எனவே சூக்குமப்பயணத்தால் சிறப்பாகப் பயனேதுமில்லை, காந்தச் செலவு தான் என்கிற வாதம் சரியே. எனினும் சூக்குமப்பயணத்தை பல வருடங்களாய் கற்றுத்தந்தோம் என்பதால், அதனது வரையறையையும், சில அடிப்படைத்தகவல்களையும் நாம் நம்மோடு வைத்துக்கொள்வதில் பிழையில்லை தான்.

"நுண்ணுடலினின்று உயிர்த்துகள் சிலவற்றைப் பிரிதல், அவ்வாறு பிரிந்த உயிர்த்துகள்களோடு நடுமனம் மூலமாக எண்ணத்தொடர்பில் இருத்தல், எண்ணத்தொடர்பே பிரிந்த உயிர்த்துகள்களை வான்காந்த மண்டலத்தில் வழிநடத்திச்செல்லுதல், அவ்வுயிர்த்துகள்கள் தம் காந்தச் செறிவு சார்ந்து அழுத்தம், ஒளி, ஒலி, மணம், சுவை, எண்ணம் இவைகளில் ஒன்றாகவோ பலவாகவோ உணரப்படல்" - சூக்குமப் பயணத்தின் அடிப்படை வரையறை.

சூக்கும பயணம் - பயன்கள் சில
1 . உடலில் சீவ காந்த சக்தி பெருகும். (நன்கு பயிற்சி செய்த பின்பு)
2 . நான் யார்? என்ற தன் நிலை விளக்கம் கிட்டும்.
3 . மனதில் பற்றட்ட்ற நிலை வரும்.
4 . இறை நிலை தவம் நன்கு வரும்.
5 . கூடு விட்டு கூடு பாயும் சக்தியை உணரலாம்.
6 . உங்கள் உடலை நீங்களே பார்க்கலாம்.
7 . மனம் அமைதி அடையும்.
8 . உடல் நகராமல் மனதால் எல்லாம் நடத்தி கட்டலாம்.
9 . உயிரின் நிலை பற்றி தெளிவு கிட்டும்.
10 . தம் கருத்தை பிறர் மனத்தில் உதிக்க செய்யலாம்.

சில சங்கடங்களும் உள்ளன...
1 . முதல் நாள் மதியம் முதல் உணவு கட்டுப்பாடு தேவை.
2 . இரவு சாப்பிடாமல் இருப்பது நல்லது.
3 . இரவு 9 மணிக்குள் தூங்க வேண்டும்
4 . ஒரு வாரம் முன்பும், பின்பும் பிரம சரியத்தில் இருக்க வேண்டும்.
5 . கண்ணாடி பயிற்சி செய்து தெளிவு பெற வேண்டும்.
6 . இரவு மணி பூரகத்தில் தவம் செய்ய வேண்டும்.
7 . காலை 4 .30 தவம் தொடங்க வேண்டும்.
8 . பயிற்சி முடிந்த பின் குளிக்க கூடாது.
9 . உடன் சாப்பிட கூடாது
10 . புலன் இயக்கம் அதிகம் இருக்க கூடாது.
11 . உடற் பயிற்சி மற்றும் எந்த பயிற்சியும் செய்ய கூடாது.
12 . மதியம் வரை எங்கும் வெளியில் செல்ல கூடாது.
13 . அன்று பிரயாணத்தை தவிர்க்க வேண்டும்.
14 . சீவ கந்த சக்தி அதிக இழப்பு இருக்கும்.
15 . உடல், மனம் இயக்கம் இருக்க கூடாது.


அடுத்து பயிற்சி முறை ....

சூக்கும பயணம் பயிற்சி முறை

காலை 4 .௦௦00 முதல் 5 .00௦௦ மணிக்குள் செய்ய வேண்டும்.

இரவு மணி பூரகத்தில் தவம் செய்து படுக்க வேண்டும்.

அருட் காப்பு போட்டு, குருவின் துணையுடன்

காலையில் மணி பூரகத்தில் நன்கு தவம் செய்து ஆற்றலை தேக்க வேண்டும்.

துரியாத தவத்தில் துவாக சாங்கம் செய்வது போல

மணி பூரகத்தில் இருந்து ஒரு முழம் மேலே உயிர் ஆற்றலை உடலில் இருந்து

மேலே கொண்டு வர வேண்டும்.

மகரிஷி அவர்கள் நம்மை வழி நடத்தி செல்வார்.

சித்தர்கள் வாழ்ந்த இடங்கள் , கோவில்கள் (திருப்பதி, பழனி....), நண்பர்கள் வீடு, சந்திரன், நெருங்கிய உறவினர்கள் வீடு, பிடித்த சுற்றுலா இடங்கள் போன்றவட்ரை பார்கலாம, வாழ்த்தலாம், காப்பு போடலாம்.

மீண்டும் திரும்பி வர வேண்டும்.

உங்கள் உடலை நீங்களே பார்கலாம்.

பின் மீண்டும் மணி பூரகத்தில் வந்து முடிக்க வேண்டும்.

அரை மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும்.

இடம் நிசப்தமாக இருப்பது அவசியம்.

ஏன் இதை தடை செய்தார்கள் மகரிஷி ........

தோரயமாக 1995 ஆண்டு முதல் இது தடை செய்யப்பட்டது.
மகரிஷி அவர்கள் செய்தால் அதற்கு ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும்.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தி வந்தது.
அமெரிக்காவில் (astral Travel) செய்த ஒருவர் இறந்து விட்டதாக செய்தி.
அதனால் அமெரிக்கா அரசு இதை தடை செய்தது.
இன்நிகழ்ச்சி நம் இயக்கத்திகும் வந்து விட கூடாது என நினைத்து (நீண்ட) எதிர் கால விளைவை எண்ணி இம்முடிவை அறிவித்தார்.
மகரிஷியுடன் கிட்ட ஒரு கேள்விக்கு தெரிந்த paerasiriyar oruvarai கொண்டு பயிற்சி பெற்ற அன்பர்கள் கூட்டாக manrangalil செய்யலாம்.
இனி புதிய அன்பர்களுக்கு அள்ளிக்கபட மாட்டாது என கூறினார்.

அனுபவங்கள் சில

ஆசிரியர் பயிற்சி பெற்று, சூக்கும பயணம் கற்று, மீண்டும் அதை பெற விரும்பி 1993 ஆம் ஆண்டு மீண்டும் ஆசிரியர் பயிற்சிக்கு வந்தேன்.
வீட்டில் செய்தேன்.
பலனை உணர்தேன்
விளைவுகளை சந்தித்தேன்.
திருமணத்திற்கு முன்பு பல நாட்கள் செய்துள்ளேன்.
திருமணத்திற்கு பிறகு சூழ்நிலை அமையவில்லை.
ஆழியார் போன்ற அமைதியான இடங்களில் செய்யலாம்.
பயிற்சி செய்யும் போது சப்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.
அந்த அறியில் வேறு யாரும் இருக்க கூடாது.
கொசு வலை இருந்தால் நல்லது.
பேன்(fan) கூடாது.

ஒரு அன்பரின் அனுபவம்.
அவர் பயிற்சி செய்யும் போது எலி அவர் மீது விழுந்து அவர் துள்ளி எழுந்து, உடல் பாதிக்கப்பட்டதால் பயிற்சியை கை விட்டார்.

மகரிஷி தடை செய்த பின் முயற்சியை தொடர மனம் விரும்பவில்லை.
கற்றது கை மண் அளவு.
ஏதோ அறிவிற்கு எட்டிய அளவு கூற முயற்சி செய்துள்ளேன்.
பிழை இருந்தால் மன்னிக்கவும்.
திருத்தம் இருந்தால் வரவேற்க்கப்படுகிறது.
வாழ்க வளமுடன்.
குருவே துணை.

பயிற்சி பெற விரும்பினால் -

சூக்கும பயணத்தின் விதிமுறைகளும் விளக்கங்களும் தெளிவாகவும்,இருந்தது.
அருண் அவர்களின் விளக்கம் இன்னும் ஆழ்மன வரையில் சென்று ஆராய வைத்தது.
இன்னும் தெரிந்து கொள்ளவேண்டும். என்பவர்களுக்கும், பயிற்சியில் கலந்து கொள்ளவேண்டும் என நினைப்பவர்களுக்கும்.
மகரிஷியுடன் நீண்ட காலம் இருந்தவர். பேராசிரியர்,மாரியம்மாள் அவர்கள். இப்போதும் ஒவ்வொரு பௌர்ணமிக்கு முன்தினமே சென்று விட்டால். பௌர்ணமி அன்று சூக்கும பயணத்தவம் சொல்லித்தருவார்கள்.
இரண்டுநாள் பகலில் எல்லாத்தவங்களும் முறையான விளக்கத்தோடு
அவர்களே நடத்துவார்கள். ஆழியாறிலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்குள் இருக்கிறது. அந்த இடம் போன் நெம்பர் 9842282078 . அருள்நிதி மாரியம்மாள் அவர்கள்.
தகுதி, பிரம்மஞானப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன்.
வேதலோக அன்பு நிலையம் வாழ்க வளமுடன்
http://www.vethaloka.org/
நன்றி : பூங்குழலி அம்மா, அருண், ரமேஷ், சுந்தரராஜன், ரமேஷ் குமார்,
சீதா லக்ஷ்மி

No comments: