Thursday, March 3, 2011

சித்தர்கள்

*வாழ்க வளமுடன். முதல் கேள்விக்கு
சித்தர்கள் என்பவர்கள் உயிரை (சித்)
உணர்ந்தவர்கள்.

அன்பே சிவமாவது எப்போது?

அன்பும், சிவமும் வேறுவேறு அல்ல.
அசையாமல் இருக்கும்போது சிவம்.(சிவனே என்றிரு)
அசையும்போது சக்தி
இந்த இரண்டும் சேரும்போதுதான் (அளவுவேறுபாடு)
தான் பஞ்ச பூதங்கள். (விநாயகர் முதற்கடவுள்) பௌதீகம்
விண், காற்று, அழுத்தக்காற்று, (வெப்பம்) நீர், நிலம்.

இதில் ஓரறிவு --தாவரங்கள்--- அழுத்த உணர்வு.
ஈரறிவு -- புழு ---அழுத்தம், சுவையுணர்வு.
மூவறிவு -- எறும்பு, வண்டுகள்---அழுத்தம், சுவை, மணம்..
நான்கு அறிவு -- ஊர்வன,பாம்பு ---அழுத்தம், சுவை, மணம், ஒளி.
ஐந்தறிவு -- விலங்கினங்கள் --- அழுத்தம், சுவை, மணம், ஒளி, ஒலி.

இதற்கு மேலாக ஆறாவது அறிவு மனிதனிடம் மனம.
என்பதுதான் வெளிப்பாடாக செயல் புரிகிறது.
இது புலன்களுக்கு எட்டாது.
1, இறைவெளி இருப்புநிலை, (சிவம்)
2, விண்துகள்-உயிர்,(சக்தி)
3, காந்த ஆற்றல்- மனம (கந்தன்)
இம்மூன்றையும் உணர்ந்து கொள்ளும் கருவிதான்.
மனிதமூளை. இந்த அற்புதமான அறிவுதான்
ஆறாவது அறிவாகும்.

இப்போது கவனித்தால் பல்லாயிரக்கணக்காக
ஆண்டுகளாய் எங்கும் விடுபடாமல். அந்த சிவமேதான்
பல் வேறு விதமான உயிரினங்களாகவும், மனிதனாகவும்.
வந்துள்ளான். என்பதை மறவாமல்.
எந்த ஒரு உயிருக்கும் துன்பம் தராமலும்.
துன்பப் படும் உயிர்களுக்கு நம்மால்
முடிந்த வரை உதவியும் வாழ்வதே
நாம் இறைவனுக்கு (சிவத்திற்கு) இலையில்லை
நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும்.
நன்றி வாழ்க வளமுடன்.
--அருள் தந்தை வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்கள்.*



--
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
M-195A, 2/848, I FLOOR
TNHB PHASE-I
KRISHNAGIRI - 635 001
CELL : 99943-94610
srinivasanb2401@blogspot.com

No comments: