Thursday, March 10, 2011

தன்முனைப்பு

வாழ்க வளமுடன்


நிலையான ஒன்று என்பது இருப்பு நிலை. இதிலே மாற்றம் இருப்பதை உணர்ந்ததாக ஒருவர் சொல்லும் போது அவர் இறைனிலையை விட்டு அசைந்திருப்பார். மாற்றம் ஒன்றே நிலையானது என்று தத்துவம் சொல்லப்பட்டாலும் கூட, மாறுவதாக சொல்லப்பட முடியாது இறை நிலையே. குருவின் நிலையும் கூட மாற்றம் இல்லாததே.

தூய நிலையை நாடும் எவரும் இறையை உணர முடியும். இதிலே குற்றம் செய்தவர், செய்யாதவர் என்று எதுவும் இல்லை. முன்வினைகளை மறுப்பதற்கில்லை எனினும், அவைகளைத் தாண்டி எழும் அளவுக்குத் தன்னம்பிக்கை இருப்பின், இறை உணர்வு சாத்தியமே..

நல்வழியில் செல்ல ஆரம்பிக்கும் போது, தானாகவே தன்முனைப்பை அகற்றிய குருவின் காலில் விழுவார் சீடன். இந்தக்கணத்திலே, சீடன் குருவோடு மனதை ஒன்றி நிலைக்கவைத்து, இயங்கப்பழகும் போது, எதிர்வர இருக்கும், நடக்க இருக்கும் உலகாய விசயங்களின் தன்மை என்பது முன் கூட்டியே கிடைக்க ஆரம்பிக்கும். அது சீடனுக்கே சோதனை என்று இருந்தாலும் கூட, அதை சீடனுக்கு உணர்த்துவார் குரு. இப்படி நடக்க இருப்பதை நோக்கி செல்ல ஆரம்பிக்கும் போது, தானாகவே, எப்படி நடந்து கொள்வது என்ற விளக்கத்திற்க்காக, குருவிடம் தஞ்சமடைவார் சீடன்...

சீடனுக்குள் இருக்கும் திறமைகளின் தன்மைகளை உணர்ந்த குரு, எதை செய்தால் நல்லதோ அதை செய்யவைப்பார். உலகாய வாழ்வில், ஒருவர் முனைப்போடு நடந்து கொள்பவர் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அருகில் முனைப்பை ஒடுக்கும் சீடரும் வாழ்கிறார் என்றால், முனைப்பு உள்ளவர் செய்த செயலின் விளைவு நாளுக்கு நாள் சேர்கிறது என்றால், அவர் குருவின் உண்மையான சீடனிடம் கூட தன்முனைப்பினைக்காட்டுவார்.

இப்போது, சீடனுக்குச் சோதனை. வலிக்கும் ஆனால் குருவைப்பிடித்துக்கொள்வார். அதனால், வரும் சோதனை தனது பாவப்பதிவுகள் நீக்கம் என்று அமைதியை நாடுவார். முனைப்புடன் செயல்புரிந்தவருக்கு இயற்கையே தண்டிக்க அந்த வாய்ப்பை அவருக்கு அந்த வாய்ப்பு தந்திருக்கும். அவரும் தண்டிக்கப்படுவார்.

இப்படி ஒருவர் தன்முனைப்புடன் செய்யும் செயல், அவருக்கே விளையப்போகும் விளைவுகளைத் தீர்மானிக்கும். மேலும் உண்மையான சீடனுக்கும் பாவப்பதிவுகள் கழியும். இதே தன்முனைப்பு உள்ளவர், குருவிடம் தன் வேலையைக் காண்பிக்கிறார் என்றால், இறை நிலையே தன் பிள்ளைக்காக வான் காந்த அலையினூடே தன் நிலையைக் காட்டும்.

ஒருவரின் செயல் முனைப்பற்று இருத்தலின் அவசியத்திற்க்காக சில வரிகள்.
நன்றி : சுந்தரராஜன்

No comments: