Thursday, March 10, 2011

Strings Theory, Big Bang theoryயை ஆதரிக்கின்றதா?

Strings Theory, Big Bang theoryயை ஆதரிக்கின்றதா?

வாழ்க வளமுடன்.குருவருள் என்றும் அனைவருக்கும் துணையிருக்கட்டும்.

நம்மில் சிலர் துகளதிர்வுக் கொள்கை என்பது, சுத்த வெளியிலிருந்து துகள்
வந்தது என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதன் அடிப்படை
அதுவல்ல. அந்தக் கொள்கை ஒரே ஒரு துகள், பல்வேறு நிலைகளில் அதிரும்
போது, அது பல்வேறு துகள்களாய் (எலெக்டிரான், புரோட்டான், ஃபோட்டான்
இன்ன் பிற) தெரிகின்றது என்பதுவே. அந்த ஒரே ஒரு துகள் எப்படி வந்தது
என்று துகளதிர்வுக் கொள்கை எந்த தெளிவான வரையறையும் தருவதில்லை. மேலும்,
இந்த பெருவெடிப்புக் கொள்கை கோமாளிகள், இப்படி ஒரு ஆய்வு முடிவுக்கு
ஏற்கனவே வந்து விட்டதனால் அது துகளதிர்வுக் கொள்கை அடிப்படையையும்
பாதிக்கின்றது . அது எதுவெனில், அந்த கல் வெடித்து ஒரு சில மணித்
துளிகளுக்குள்ளாகவே அனைத்து அடிப்படைத் துகள்களும் வந்து விட்டன.

ஆக துகளதிர்வுக் கொள்கை எதை நோக்கிச் செல்கின்றது என்றால், அந்த ஒரு
சில மணித்துளிகளுக்குள் வெளிவந்த அந்த ஒரு சில ஒரே வகையைச் சேர்ந்த
துகள்கள் எப்படி பல்வேறு அதிர்வு நிலைகளை மேற்கொண்டு பல துகள்களாய்
மாறின, என்பதை விளக்கும் அறிவியல் தத்துவமாய் மாறிக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய நிலையில் துகளதிர்வுக் கொள்கை மஹானின் தத்துவத்தை ஆதரிக்குமா
என்று எதிர்பார்ப்பது, அவரு திருப்பதிக்கு போயிட்டு வந்தாருங்க,
கட்டாயமா அங்கே இருந்து திருநெல்வேலி அல்வா வாங்கியாந்துருப்பாருங்க,
என்று சொல்வதைப் போல. அது ஒரு திசையில் ஓட, நாம் அது எந்த திசையில்
ஓடினாலும், நமக்கு வேண்டியதையே தரும் என்று எதிர்பார்ப்பது, சற்றே
பிழையானது. அவ்வளவே.

வாழ்க வளமுடன்.

நன்றி : அருண்

No comments: