Thursday, March 10, 2011

விழிப்பு நிலை

விழிப்பு நிலை...
வாழ்க வளமுடன்.


குருவே சரணம்.


நமக்குள் இருக்கின்ற பல எண்ணங்கள் எல்லாம் நமது அறிவே அதுவாக உருவெடுத்து நமது கருமையத்தில் பதிக்கிறது.

எந்த அலை நீளத்திலே அந்த பதிவுகள் உள்ளதோ, அந்த அலை நீளத்திலே நாம் எப்போது திரும்பி வந்தாலும் கூட மீண்டும் நமக்குள் பதிவான அனைத்தும் நமக்கு எடுத்துக்காட்டும் போது, நமது அறிவு மீண்டும் பதிவான பொருளின் தன்மையாக மாறியிருக்கும்.

நாம் ஒரு செயலைச்செய்கின்றோம் என்றால், அந்த செயல் புலன் வயப்பட்ட ஒன்றாக இருப்பினும் கூட அது பதிவாகிறது. அதே போல, அச்செயலில் விழிப்புடன் இல்லாததால், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தவற்றினை செய்து கொண்டு செல்கிறோம்.

நாம் எப்போதும் நன்றாக வாழவே தான் விரும்புகிறோம். நமக்கு நல்லது அல்லது என்பதன் பொதுவான அர்த்த்ம் புரிகிறது என்றாலும், பழக்க நிலைகளில் வரை விழிப்பு நிலை இல்லாததால், புலன்களின் இயக்கம் தொடர்ந்து இருப்பதும், தியானத்திலே ஆழ்ந்து நிற்கக்கூடிய தன்மை கிடைக்காமல் இருப்பதுமாக இருக்கிறது.

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை எவ்வுயிரை
ஒருவர் அடிக்கடி நினைந்தால் அப்பொருளின் தன்மையாய்
நினைப்போர் ஆற்றல் அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்.

என்பார் நமது குரு.

எச்செயலை ஒருவர் அடிக்கடி நினைந்தால் என்பது தான் பழக்க நிலை.

நாம் செய்யும் செயலானது விழிப்பு நிலையிலே இருப்பின் மட்டுமே, அதன் தன்மை இயல்பூக்க நியதியாய் நமக்கு நன்மையைத் தரும்.

புலன்களில் மனத்தினால் எண்ணுவது கூட ஒரு செயல்தாம். இப்போது நாம் ஒரு செயல் செய்கிறோம் என்றால், அங்கே குருவே சுத்தவெளி என்று அதனுள் நுழைத்து, அதே செயல்களை செய்து பார்க்கவேண்டும். சுத்தவெளிக்குள் எண்ணமும், எண்ணத்திலே சுத்தவெளியுமாய் குரு நமக்குள்ளே நிறைய ஆரம்பிப்பார்.

இப்படி பழக ஆரம்பித்தால் நாளடைவிலே எந்த எண்ணத்திற்க்கு முன்னும் பின்னும் குருவே வந்து முன் நிற்பார். குருவே இறுதியிலே நிலைப்பார். மனதில் குரு இப்படி நுழைந்த பிறகு, கண்ணை மூடின உடன் சுத்தவெளியிலே சீடன் இருப்பது புரியும்.. சுத்தவெளியிலே சீடன் இருக்கும் போது, தியானம் சுத்தவெளியிலே ஆரம்பித்து, சுத்தவெளியிலே இருந்து இறங்குபடி தவத்தின் மூலம் மூலாதாரம் இறங்கிவிடவேண்டும். தவத்தை ஆரம்பிக்கவேண்டியதில்ல. கண்ணை மூடினால் தவம் உள்ளுக்குள் இருப்பதைக் காணலாம். இதுவே குருவினால் வந்தது தான்.

இப்போது நாம் ஒருவரைப்பற்றிப் பேசுகிறோம் அல்லது இந்த நட்சத்திர மண்டலத்தைப்பற்றிப்பேசுகிறோம்...

அந்த ஒருவரைப்பற்றி நாம் என்னென்ன அறிந்துகொண்டோமோ அத்தனையும், அவர் உருவத்தின்/ பெயரின் மேல் பதிந்து வைத்துக்கொள்கிறோம். எப்போது அவர் உருவம் வந்தாலும் பதிந்த அத்தனை உருவரும் நமக்குள்ளே உள்ள அறிவே அதுவாய் மாற்றம் பெற்று, இயல்பூக்க நியதியால் அறிவினிலும் உடலினிலும் மாற்றத்தைத் தரும். இந்த செயல் கூட பதிவாகி விடும் கருமையத்திலே.

இதே போல, நாம் காணும் நட்சத்திரக்கூட்டம் என்பது நமது மனதினைப்போல. எத்தனைகோடி நட்சத்திரமோ அத்தனைகோடி எண்ணங்கள்... நட்சத்திரங்களுக்குள்ளும் அதைத்தாண்டியும் இருப்பது சுத்தவெளியே. எப்போது நாம் குருவை நினைக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதே,

இறைவெளியோடு எண்ணத்தை கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.

என்ற வரிகளைப்போல, நாம் சுத்தவெளியாய் ஆகிவிடுவோம்..

ஒருவர் இப்படி செய்கிறார் அப்படி செய்கிறார்... என்ற எண்ணத்திலே எல்லாம் கவனித்துப்பார்த்தால் விழிப்பு நிலை தவறி இருக்கும். இதுவே துன்ப நிலைகளுக்குள் நம்மை தள்ளி வைத்திருப்பதை நாம் கவனிக்காமல் இருந்திருப்போம். எதை நினைந்தாலும், அதுவாய் உருவெடுத்து அதன் மேல் நாம் பதிவு ஏற்படுத்துள்ளதாய் மாறி, நாம் அதன் பயனாய் இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவிப்போம்...

விருப்பும் வெறுப்பும் எவரெனக்கண்டு அறிவே
இவையாய் தோன்றி இயங்கி இவையாய்
மாறிடும் தன்மை கண்டு அத்தகைய
அறிவின் தத்துவம் அறிய அறிவை ஒன்றி
அறிவில் நிறுத்தி அறிவையே அறிய
ஆழ்ந்து ஆய்ந்து பொறிபுலன் அடக்கிப்பொறுமை அடைந்து
ஒன்றி ஒன்றி ஒருவனாய் உட்புறம் உணர்ந்து...

என்பார் நமது குரு. அதுபோல, அறிவே தான் இவையாக மாறுகிறது என்று விழிப்பு நிலையிலே


மனதில் எண்ணம் என்பது நட்சத்திர மண்டலத்திற்கு ஒப்பானது. குருவின் மீதான எண்ணமோ எண்ணத்தின் பிறப்பைத் தடுத்து மௌனத்திலே நிலைபெறச்செய்வது.

எந்த ஒரு நட்சத்திரமும் கூட, நம் எண்ண அளவில் தான். எந்த ஒருவரும் நமது எண்ணத்தின் அளவில் மட்டுமே தான். இருப்பது குருவான சுத்தவெளி மட்டுமே தான்.

மனதில் எண்ணம் என்பது நட்சத்திர மண்டலத்திற்கு ஒப்பானது. குருவின் மீதான எண்ணமோ எண்ணத்தின் பிறப்பைத் தடுத்து மௌனத்திலே நிலைபெறச்செய்வது.
(...)



எந்த ஒரு நட்சத்திரமும் கூட, நம் எண்ண அளவில் தான். எந்த ஒருவரும் நமது எண்ணத்தின் அளவில் மட்டுமே தான். இருப்பது குருவான சுத்தவெளி மட்டுமே தான்.

அங்கே நிலைத்து நின்ற பிறகு நாமும் சொல்வோம்...

மேன்மையுளப் பேரின்ப ஊற்றாம் உன்னில்
மிதக்கின்றேன் காப்பாய் இந்நிலை மாறாமல்....

இந்த அரும்பிறவியில் முன்வினை அறுத்து
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைய
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்.

என்று.

வாழ்க வளமுடன்.
நன்றி : சுந்தரராஜன்

No comments: