Thursday, March 10, 2011

அலையின் வேகம்

அலையின் வேகம்
உங்கள் கண்ணில் உள்ள சீவ காந்தம் மட்டும் தொலைவிலுள்ள நட்சத்திடிரக் கூட்டம் வரை செல்ல இயலுமாயின், நீங்கள் நிஜமாவே ஒரு சூப்பர் மேன் தான்!!
இந்த பயிற்சியை நீங்கள் செய்து பாருங்கள் அய்யா: துரிய தீட்சை அளிக்கும் போது, ஒரு மாணவரை 1 அடி தொலைவில் அமரச் செய்து அவரது கண்களைத் திறந்து உங்கள் கண்களைப் பார்க்கச் சொல்லுங்கள். உங்களது சீவ காந்த அலையை அவர் கண் எரிச்சலாக உணர்வார். அவரையே மணி மண்டபத்தில் வாசலில் அமரச் செய்து நீங்கள் ஓம்கார மண்டபத்தின் முகப்பில் நின்று கொண்டு அவரைப் பார்த்தால் அவர் உங்களது சீவ காந்த அலையை நிச்சயமாய் உணர மாட்டார். என்ன நிகழ்கின்றது இங்கே? உங்கள் அலைக்கு அத்துணை தூரம் பயணிக்கும் ஆற்றல் இல்லை. இதே மஹான் இந்த பயிற்சியை செய்தால், அந்த சீடர், தன் கண்களில் எரிச்சல் உண்ர்வாய் அந்த சீவ காந்த அலையை உணர்வார். ஆக அலை பரவும் தொலைவு அதன் ஆற்றலை பொறுத்தது. [மஹான் இதையே தான் கண்ணில் இருந்து ஆற்றலைப் பாய்ச்சாமல் கையிலிருந்து பாய்ச்சி அருள் அலைவீச்சைத் தருவார்].

இப்பொழுது இயற்பியலுக்குள் செல்வோம். எளிமையான விளக்கங்கள் மூலம் இதைக் காண்போம். ஓம்கார மண்டபம் மாடியிலிருந்து ஒரு டார்ச் அடியுங்கள் - அந்த ஒளி முகப்பு வாசல் வரை தெரியும். அதாவது அந்த ஒளி அலையின் ஆற்றல் அத்துணை தூரம் பயணம் செய்திருக்கின்றது. இதே நீங்கள் நிலாவில் நின்று கொண்டு பார்த்தால் அந்த டார்ச் வெளிச்சம் உங்களுக்கு தெரியாது அல்லவா (நடுவில் மறைக்க ஒன்றுமில்லாத போது கூட), ஆக அந்த டார்ச் அலை தன் ஆற்றலைக் கொண்டு அத்துணை தூரம் பயணிக்க இயலவில்லை. அது பயணித்து அத்துணை தொலைவு கடந்து வந்திருந்தால் அங்கே இருக்கும் உங்களுக்கு அது கண்ணில் பட்டிருக்கும். இதெ போன்றதொரு நிகழ்வு தான் நட்சத்திரம் உமிழும் ஆற்றலிலும் நிகழ்கின்றது. நமக்கு பக்கதிலிருக்கும் ஒரு விண்மீன் கூட்டத்தை எடுத்துக் கொள்வோம் - ஆண்ரோமெடா காலக்சி. புவிக்கும் அந்த காலக்சிக்கும் உள்ள தொலைவு தோராயமாக 25000000000000000000000 மீட்டர். ஒளி அலை சக்தி களத்தில் பரவும் வேகம் 3*10^8 மீ/வினாடி - இந்த திசை வேகம் ஆய்வுப் பூர்வமாய் அறிவியலாளார்களால் நிரூபிக்கப் பட்டது (சில நூற்றாண்டுகளுக்கு முன்பே). ஆக அதன் ஒளி அலை அங்கேயிருந்து இங்கே வர ஆகும் காலம் (காலம் = தூரம்/திசைவேகம்) தோராயமாக 2642482.67 வருடங்கள் (கணக்கை நீங்களும் போட்டு எண்களைச் சரி பார்துக்கொள்ளவும்). இன்றைக்கு நீங்கள் கண்ணால் பார்க்கும் ஆண்ரோமெடா, 2642482.67 வருடங்களுக்கு முன்னால் அது எப்படி இருந்ததோ அந்த வடிவம்/நிலை தான். இன்றைக்கு அது எப்படி இருக்கின்றது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், இன்னும் 2642482.67 வருடங்கள் நீங்கள் புவியின் மேற்பரப்பிலே நீங்கள் காத்திருக்க வேண்டும், அன்றைக்கு தான் இன்றைக்கு அங்கிருந்து புறப்பட்ட அந்த ஒளி அலை அத்தனை தூரம் கடந்து இங்கே வந்தடையும் - எனவே அன்று தான் நீங்கள் அதைக் கண்ணால் காண இயலும். இது தான் இயற்பியல்.

ஆக உங்கள் சீவ காந்தம், அங்கே சென்று வருவதில்லை - அதன் ஒளி தான் இங்கு வரை அதன் வடிவத்தை சுமந்து கொண்டு அலையாய் வருகின்றது, அந்த ஒளி அலை உங்கள் கண்ணின் சீவ காந்த களத்தில் மோதும் போது அதன் வடிவம், உங்களுக்கு காட்சியாகின்றது.

உங்கள் கேள்விக்கு வருவோம். எண்ண அலை என்பது ஒரு 1-3 சி பி யெஸ் யில் வெளிவரும் போது, அதைத் தடுக்க வான் காந்த்ததில் வேறு எந்த பொருளும் / துகளும் இல்லாத நிலையில், அது ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொண்டு சக்தி மற்றும் சிவ களங்களை அடைய வாய்ப்புண்டு, ஆனால் என்ன வேகத்தில் அது நிகழும் என்பது யாராலும் நிரூபிக்கப் படவே இல்லை. அந்த அலை ஒளி போன்ற வேகம் உடையதாகவோ, இல்லை, அதை விட சற்றே கூடியோ குறைந்தோ இருக்கலாம் - ஆனால் அளவுகோலில் அதை இட்டவர் யாருமில்லை.
1. ஒளி அலையை விட எண்ண அலைகளின் வேகம் அதிகமாய் இருக்க இயலும். அந்த அனுமானத்தில் பிழை ஏதுமில்லை.
2. மூளையில் எண்ண அலைகளின் வேகம் என்ன என்பதைச் சார்ந்த ஆய்வின் முடிவுகளை அப்படியே சக்தி களத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், ஆய்வின் முடிவுகளாய் இவைகளையும் நான் இங்கே தந்திருக்கின்றேன்:

1. ஊடகத்தின் தன்மையைச் சார்ந்து அலை பரவும் வேகம் மாறுபடும். ஆகவே எண்ணம் சக்தி களத்தில் ஒரு வேகத்திலும், சிவ களத்தில் மற்றொரு வேகத்திலும் பரவும் இயல்புடையது.
2. ஒரு அலையின் ஆற்றல் அதன் அதிர்வெண்ணைச் (மற்றும் அலை நீளம்) சார்ந்தது மாறுபடும். ஆகவே பீட்டா, ஆல்ஃபா, காமா, டெல்டா என்கிற அலைஅதிர்வெண் நிலைகள் வான் காந்த ஊடகத்தில் வெவ்வேறு ஆற்றலோடு பயணிக்கும். இந்த ஆற்றல் வேறுபாடு அவை பரவும் தூரத்தையும் பாதிக்கும்.

No comments: