Sunday, March 13, 2011

பரிணாமத்தில் மூளை எங்கே எங்கனம் தோன்றியது?

பரிணாமத்தில் மூளை எங்கே எங்கனம் தோன்றியது?

ஒரு செல் உயிரியின் பரு உடலின் உயிர்த் துகள்களின் சுழல் இயக்கத்தால்,
அங்கே ஒரு காந்தக் களம் தோன்றியது. அந்தக் காந்தக் களம் மையத்தில்
திணிவு பெற்று, ஒர் காந்த அலைக் கூட்டு உறைவிடமாய் பரிமளித்தது.
மையத்தில் தோன்றிய அந்த நுண் அலைத் தொகுப்பு தான் கொண்ட அந்த காந்த
அலைகளை அந்த நுண் பகுதியில் இருந்த பரு உடல் உயிர்த்துகள்களில் பதிவாக்க
அங்கே பதிவுகளை ஏந்திய முதல் அணுக்கூட்டம் தோன்றியது, பரிணாமத்தில்.
அதாவது, அந்தப் பகுதி பரமாணுக்கள் தன் காந்தக் களத்தில் தர மாற்றம்
அடைந்து அனைத்து பதிவுகளையும் தன் காந்தக் களத்தில் அலைகளாய், ஆற்றலாய்
ஏற்றது - இதுவே பதிவாதல். இந்த காந்தக் கள தர மாற்றம் என்பதே மனம்,
என்னும் அலை இயக்கத்தின் துவக்க நிலை. தர மாற்றம் அடைந்த பரம அணுக்களே
மூளை என்னும் உறுப்பின் துவக்கம். ஒரு செல் உயிரியில், அதன் மரபு அணுவே
அதன் மூளை.

ஒரு செல் உயிரி மனிதன் வரை பரிணாமத்தொடரில் வந்த போது, அனைத்து
அலைத்தொகுப்பேந்திய பரமாணுக்களும் கூடி ஒரு தனிப்பட்ட உறுப்பாய்
பரிமளித்தது. அந்த உறுப்பு அதன் காந்த அலைக்களம் மற்றும் அந்தக் களத்தின்
அலைத்தொகுப்பு மையத்தோடு தொடர்பு கொண்டு, தன் இயக்கம் அனைத்தையும்
நிகழ்த்துவது அதன் வழக்கமாயிற்று, அந்த அலைத்தொகுப்பு மையம் அந்த
உறுப்பிலிருந்து தள்ளிப் போனதுக்கு வெளியின் துல்லிய சம தள சீர்மை
ஆற்றலே காரணம். அலைக்களம் இன்றி தகவல் சேகரிப்பும் இல்லை, தகவல்
வெளிப்பாடும் (சொல், செயல் இன்ன பிற) இல்லை. இத்தகைய தகவல் சேகரிப்பு
மற்றும் தகவல் வெளிப்பாடு மையம் தான் கரு மையம், மேலும் அந்த அலைக் களமே
நமது மனம் - அந்த அலைக் களத்தோடு தொடர்புடைய பரமாணுக் கூட்டமே மூளை.
மூளையை, நாம் சீவ காந்த - எண்ணத் தன் மாற்ற மையம் (அதன் பரம அணுக்களில்
தான் சீவ காந்தம் மனம் என்னும் அலை இயக்கமாக தன் மாற்றமடைகின்றது) என்று
கூட அழைக்கலாம், அதில் தவறில்லை.

No comments: