Thursday, March 10, 2011

பாலுணர்வும் ஆன்மீகமும்

இனப் பெருக்க உணர்வு என்பதில் அளவு முறை என்பது என்ன? குழந்தை
பெறுவதைத் தள்ளிப் போடுதல் பிழையா, ஆன்மீகத்தில்?


வாழ்க வளமுடன்.

இந்த ஐந்தில் அளவு முறை என்ற கருத்தில் வரும் முறை என்னும் சொல்லுக்கு
என்ன வரையறை? இந்த கேள்விக்கு விடைதான் இனப்பெருக்கம் சார்ந்த உங்களது
வினாவுக்கும் விடை.

முறை எனப்படுவது, இரு சொற்களுக்குள் அடங்க வல்லது, அவையாவன: 1.
இயற்கைக்கு முரணற்ற, 2. சமுதாயத்துக்கு முரணற்ற என்பவை தாம் அவை.
எடுத்துக் காட்டுகளுக்குள் போகாது, இதை விளக்க இயலாது.

நாம் வெளி நாட்டுக்கு போகின்றோம். அங்கே ஒரு வெளி நாட்டவர் நம்மிடம்
சொல்கின்றார்: நாங்கள் திருமணம் செய்து கொள்வதிலை, ஆனாலும் நன்றாய்
தான் ஒன்றாய் இணைந்து வாழ்கின்றோம், ஒரு பெண்ணோடு மட்டும் தான் இணைந்து
வாழ்கின்றேன், என்று. இந்த கூற்றை நாம் நமது வேதாத்திரிய
இலக்கணத்துக்குள் மொழி பெயர்க்க வேண்டும். பின் தான் விடை அளிக்க
இயலும்.

அவர் வாழ்வது முறையான வாழ்வா? இயற்கை திருமணம் செய்தாலும் செய்யாது
போனாலும் ஆண் பெண் இணைவில் குழந்தை என்ற ஒன்றை தருவதனால், அது
இயற்கைக்கு முரணான செயல் என்று சொல்லிவிட இயலாது தான்.

சமுதாய முரண் என்னும் ஒன்று தான் இங்கே தடையாக வருகின்றது. முதன் முதலில்
மனித குலம் இப்புவியில் தோன்றிய போது, அங்கே விலங்கினப் பதிவான
இனப்பெருக்க இன்பம் என்னும் உணர்வை அடிப்படையாகக் கொண்டு மனிதன் தன் மன
அமைதியையும், உடல் நலத்தையும் இழந்தான், உயிரைக் கூட இழந்தான். இருவர்
ஒரு பெண் மீது இச்சை கொள்ள, அதன் விளைவாய், அந்த சமுதாயத்தில் அமைதி
குலைந்து, இருவருமே ஒரு விலங்கினத்தோடு போட்டியிட்டு அதை வென்று வர
வேண்டும், வெல்பவர் அந்த பெண்ணை மணக்கத் தகுதியானவர், என்ற ஒரு வழக்கம்
கொண்டு வரப் பட்டு, இருவருமே காடு சென்றனர், வென்றவர், வென்றதில்
அடையாளமாய் பல், நகம், தோல் ஏனயவற்றைக் கொண்டுவந்து அதையே தாலி, மணமகள்
உடை, இன்ன பிற பொருட்களாய் தருவது வழக்கம்.(இன்னமும் பொண்ணுக்கு சேலை
எடுத்துக் கொடுப்பது மாப்பிள்ளை வீட்டர் தான், தாலி செய்வது கூட
மாப்பிள்ளை தான்). ஆனால் தோற்றவர் நிலை? அந்த விலங்கிடம் தோற்றவர்,
உடல் பாகம் பல இழந்தார், உயிர் கூட இழந்தார், அவ்ர் குடும்பம் அவர்
திரும்பி வராத போது மன அமைதி இழந்தது. ஆக இந்த ஒரு பெண்ணை இருவர்
இச்சித்தல் என்னும் நிலையே ஒரு துன்பம் தான் - இங்கே தான் 'ஒருவனுக்கு
ஒருத்தி' என்னும் கலாச்சாரம் ஆழமாக வேறூன்றியது. இந்த ஒருவனுக்கு ஒருத்தி
என்னும் நிலை தவறிய போது தான் இராமாயணமும், இலியட்டும் காப்பியங்களாகத்
தோன்றின, முறையற்ற பால் கவர்ச்சி என்னும் சொல், மனிதனின் அறு
குணங்களில் ஒன்றாய் வரையறுக்கப் பட்டது.

நம்மிடம் வந்து ஒருவர் ஒரே ஒரு பெண்ணிடம் மட்டும் வாழ்வதாய், ஆனால்
திருமணம் செய்யாது வாழ்வதாகக் கூறினார் அல்லவா ஒருவர், அவரிடம் இப்படி
ஒரு கேள்வியை முன் வைப்போம்.

ஏன் திருமணம் செய்யவில்லை நீங்கள்?
திருமணம் செய்து பின் விவாகரத்து வாங்கும் நிலை வந்தால் அதில் சட்டச்
சிக்கல்கள் பல வரும் என்பதால் செய்யவில்லை நாங்கள்.

ஆக, விவாகரத்து என்பது தவிர்க்க இயலாத ஒன்றே?
என்ன செய்ய, பிடிக்காமல் போனால் விவாகரத்துத் தான்.

பின் என்ன செய்வீர்கள்?
இன்னொரு பெண்ணைத் தேடுவேன்.

ஒரு பெண்ணைப் பிடிக்காது போனால், இன்னொரு பெண்ணை தேடிப்பிடித்து
அவளோடு வாழ்ந்து விட வேண்டும், இவளை விட்டு விட வேண்டும் என்னும் எண்ணம்
வருகின்றதல்லவா? அங்கே தான், அவர் சமுதாயதுக்கு முரணற்ற என்னும் நிலையான
'ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரத்தை' தாண்டிப் போகின்றார் அவர்.

இயற்கைக்கு முரண் இல்லை எனினும், சமுதாயத்துக்கு முரணான ஒரு செயலைச்
செய்வதால் அங்கே துன்புறுகின்றார் அன்னாட்டார். சிலர் இதே வழியில்
சென்று, இயற்கைக்கு முரண் என்னும் நிலையையும் அடைந்து அதன் விளைவாய் பால்
வினை நோய் பல கூட அடைவார், அதுவும் நிகழ்வதுண்டு அத்தகைய சமுதாயத்தில்.

இப்பொழுது ஒருவர், சமுதாயத்துக்கு முரணற்ற வகையில் சரியான வயது வந்த
நிலையில், குடும்பப் பொறுப்புகளை ஏற்கும் மன முதிர்ச்சி வந்த நிலையில்
ஒருவனுக்கு ஒருத்தி என்னும் வரையறையை மதித்து திருமணம் செய்கின்றார்
என்று கொள்வோம். இந்த நிலையில் இயற்கைக்கு முரண் என்பது அவருக்கு என்ன?
எயிட்ஸ் நோய்க்கிருமியைக் கொண்டுவந்த அந்த மனிதர், இயற்கைக்கு முரணாய்
குரங்கு என்னும் விலங்கினத்தோடே உடலுறவு கொண்டதால் அதை மனித
சமுதாயத்துக்குள் வியாதியாய் கொண்டுவந்தார் - இதை நாம் அறிவோம். ஆனால்,
பருவம் வந்ததும் சரியாய் மணம் முடிக்கும் ஒருவருக்கு இயற்கைக்கு முரணான
ஒன்று என்ன? ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். இப்பொழுது அவர் தன்
குழந்தை பிறப்பை தள்ளிப் போட நினைக்கின்றார் (ஏதோ சில நியாயப் படுத்த
வல்ல காரணங்களால்) என்று கொள்வோம். இயற்கைக்கு முரண் என்பது, அவர் தன்
மனைவிக்கு 35 வயது வயது வரும்வரை தள்ளிப் போட நினைப்பது தான்!! ஏனெனில்
அந்த வயதில் குழந்தை பிறப்பு என்பது எளிதல்ல, இயற்கை உடல் சார்ந்த
பல்வேறு காரணிகளால் அதை முரணான ஒன்றாய் வைத்திருக்கின்றது. அதே அவர், ஒரு
ஒரு வருடத்துக்கு மட்டும் தள்ளிப் போட நினைத்து புலன் உணர்வுகளை
திருப்திப் படுத்தும் வகையிலும், ஆனால் குழந்தை பிறக்கா விதத்திலும்
இல்லறம் ஏற்கின்றார் என்றால், அங்கே முரணாக இயற்கை வருவதில்லை - சீவ
வித்துக் குழம்பின் உற்பத்தியை அது இவன் குழந்தை பெறா வண்ணம் இல்லறம்
செய்கின்றான், நாம் அதை குறைத்து விடுவோம், என்று அது குறைப்பதில்லை.
அது அது பாட்டுக்கு சுரக்கின்றது, ஒரு குறிப்பிட்ட காலம் வரை, காலம்
தாண்டினால் தான் சிக்கல், அதுவரை இருப்பு ஆற்றல், சுரப்பு ஆற்றலாய்
இருந்து கொண்டே தான் இருக்கின்றது. சமுதாயமும், அது மனைவி என்னும்
பெண்ணோடு மட்டும் நிகழ்வதால், அதை முரண் என்று சொல்வதில்லை. ஆக,
குழந்தை பெறுதலை தள்ளிப் போடுதல் என்பது, ஒரு குறிப்பிட்ட கால அளவு வரை,
இயற்கைக்கு முரணற்றதாக இருக்கின்றது. அதனால் அதை முறையற்ற ஒன்று என்று
சொல்ல இயலுவதில்லை. எனினும், தள்ளிப் போடுதல் என்னும் கால கட்டத்தில்
அங்கே புலன் இன்பம் துயிக்கப் படவே செய்கின்றது - அதில் பிழை உண்டா?
அதைத் தான் இனி வரும் பகுதி ஆய்கின்றது.

முறை என்பதைப் பார்த்தோம்! அளவு என்ற ஒன்றும் உள்ளதே! புலன் இன்பமாம்
இனப்பெருக்க உணர்வில் சிக்கி, குழந்தை பெறுதலைத் தள்ளிப் போட்ட
நிலையிலும் கூட, அளவின்றி, சீவ வித்துக் குழம்பு தான் பெற்ற அந்த
ஒருத்தியோடே விரயமானால், அங்கே அளவு மீறிப் போகின்றது. இங்கே சுரப்பு
விகிதம், இழப்பு விகிதத்திடம் தோற்றுப் போகின்றது. இந்த நிலையில் தான்
இது இயற்கைக்கு முரணாகின்றது. ஆக இந்த நிலை தான் கூடாது, குழந்தை
பெறுதலைத் தள்ளிப் போடுதலில். மேலும் அந்த ஒருவனுக்கு ஒருத்தி என்னும்
ஒன்றில் கூட சில தவறான உடலுறவு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன - மேல்
நாடுகளில். அந்த வகை புலனின்ப துயிப்பும் இயற்கைக்கு முரணானதே (அதைப்
பற்றி அதிகம் விவாதிக்க வேண்டியதில்லை இங்கே) - அவ்வளவே.

காயகல்பம் என்னும் ஒன்று இதை எப்படி சீரமைக்கின்றது? முதலில் காயகல்பம்
என்பதில் இந்த சமன்பாட்டை மனதில் வைக்க வேண்டும் நாம்.

அளவுக்கு மிஞ்சிய சீவவித்துக் குழம்பு = சீவ வித்துக் குழம்பின் சுரப்பு
விகிதம் - சீவ வித்துக் குழம்பின் 'அளவு' 'முறை'க்குட்பட்ட இழப்பு
விகிதம்.

இந்த மிஞ்சிய சீவ வித்துக் குழம்பை மூளை வரை ஏற்றுவதே காயகல்பத்தின் பணி.
மேலும் இழப்பு விகிதத்தை 'அளவு' 'முறை'யில் வைப்பதிலும் காயகல்பம் பெரும்
பங்கு வகிக்கின்றது.இது தான் காயகல்பத்தின் இலக்கணம். இந்த இலக்கணம்
வேதாத்திரி என்னும் மஹான் வந்த பின் தான் காயகல்பதுக்குள் நுழைந்தது.
அதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

வாழ்க வளமுடன்.

நன்றி : அருண்

No comments: