Thursday, March 10, 2011

குவார்க் என்பது என்ன?

குவார்க் என்பது என்ன?



குவார்க் என்பது எளிமையாய்ச் சொல்லப் போனால், பரமாணுவை (எலெக்ரான்,

புரோட்டன், நியுரான் இன்ன பிற அடிப்படைத் துகள்களை) ஆக்கும் ஒரு நுண்

துகள், அதாவது நமது வேதாத்திரிய மொழியில் இறைத்துகள். அவ்வளவே.



ஒரு எளிய எடுத்துக்காட்டு மூலம் இதைக் காணலாம்: இப்பொழுது நீங்கள்

உங்கள் மனைவி, இருவரும் ஒரு பூங்காவில் நடக்கின்றீர்கள். ஒரு வயதானவர்

அந்த வழியே போகின்றார் - நீங்கள் அவரோடு ஓடிப்போய் ஒட்டிக்

கொள்கின்றீர்கள், அவரோ உங்களோடு ஒட்டும் பண்பில்லாதவர் போல்

தென்படுகின்றார். ஆனால் அவரிடம் நீங்கள் காட்டும் ஒட்டுதல் பண்பு உங்கள்

மனைவியிடம் காட்டும் ஒட்டுதலை விட, ஈர்ப்பை விட அதிகமாய்ப் போகின்றது.

இது சுற்றியிருப்பவர்களிடம் வியப்பையும், குழப்பத்தையும்

தோற்றுவிக்கின்றது.



இதே குழப்பம் தான், அணுவை உற்று நோக்கும் ஒரு அறிவியலாளாருக்கும்

ஏற்படுகின்றது. ஒரு புரோட்டான் என்றுமே ஒரு எலெக்டிரானை தன்னைச் சுற்றி

ஓடச் செய்யவே வைக்கின்றது. எலெக்ட் ரானும் மகிழ்வோடு அந்த ஓட்டத்தை

மேற்கொள்கின்றது - இதை அவைகளுக்கிடையேயான ஈர்ப்பு என்று கொள்வோம்.

நியூட்டிரான் என்னும் ஒரு வயதான சுழல விருப்பமில்லாததொரு துகள் இந்த

புரோட்டானோடு ஒட்டிக் கொண்டே இருக்கின்றது. அணுவை விட்டு அதை வெளியே

எடுத்தால், அது புரோட்டானோடும் ஒட்ட அவ்வளவாய் ஆர்வம் காட்டுவதில்லை,

எலெக்ட் ரானோடும் ஓடவும் அதற்க்கு விருப்பமில்லை, ஆனால் அணுவின்

மையத்தில் மட்டும் புரோட்டானை ஒட்டியே என்றும் சுழல்கின்றது அது. இங்கு

ஒரு ஆய்வு செய்து பார்த்தார்கள். ஒரு எலெக்ட் ரானை புரோட்டனின்

ஈர்ப்பிலிருந்து பிய்த்துப் பார்த்தார்கள் - அது சற்றே எளிதில் பிய்ந்து

வந்து விட்ட்து, அதை புரோட்டானின் ஈர்ப்பு விசைைய்த் தாண்டத் தேவையான

ஆற்றல் என்று பெயரிட்டார்கள். நியுட்டிரானையும் இப்படி எளிதில் பிய்த்து

விடலாம் என்று எண்ணியவர்களுக்கு பெரும் வியப்பே மிஞ்சியது. அது வரவே

இல்லை. அணுவின் ஆற்றலை இரண்டாகப் பிரித்து பெயரிடும் அளவிற்கு அது

வலுவாய் ஒட்டிக் கொண்டது. மின் காந்த ஆற்றல் என்னும் பெயர் புரோட்டான்

மீது எலெக்ட் ரான் வைத்திருந்த பாசத்துக்குப் போனது - வலுவான அணு ஆற்றல்

என்னும் பெயர் நியுட்டிரான் மீது புரோட்டான் வைத்திருந்த

மாயப்பிணைப்புக்குப் போனது.



அறிவியலுக்கு ஒன்றும் விளங்கவில்லை ஒரு காலத்தில், போட்டார்கள் ஒரு

ஏட்டுக் கணக்கை, புரோட்டான் மூன்று துகள்களால் ஆனது, நியூட்டிரான் ஒரு

மூன்று துகள்களால் ஆனது, இந்த மூன்று, அந்த மூன்றோடு ஒட்டும்

இயல்புடையது - அதுவே புரோட்டான் நியுட்டிரானோடு வலுவாக ஒட்டக் காரணம்

என்று. இன்றைக்கு வரைக்கும் இந்த மூன்றையும் இந்த மூன்றையும் ஆய்வுப்

பூர்வமாய் கண்டவர்கள் யாருமில்லை. அந்த முன்று தான் குவர்க்குகள் என்னும்

ஏட்டுத் துகள்கள்.



உண்மையிலேயே புரோட்டான் என்பது என்ன? அது ஒரு பரம அணு, அது எதால் ஆனது?

இறைத்துகள்கள். அதே போல் நியூட்டிரான் மற்றும் எலெக் ட் ரான் என்னும்

துகள்களும் இறைத் துகள்களால் ஆனவையே. சரி எலெக்ட் ரானை புரோட்டானுடன்

பிணைப்பது எது? புரோட்டான் சுழலும் போது வெளிவரும் யோகான் அலைகள்

சற்றே பெரிதான ஒரு சுழல் காந்தக் களத்தை அமைக்க அதில் சிறிதான எலெக்ட்

ரான் என்னும் பரம அணு சிக்கிச் சுழன்று வர, அந்த சுழற்சியே எலெக்ட் ரான்

புரோட்டான் மீது கொண்ட ஈர்ப்பாம்.



சரி, புரோட்டான் - நியுட்டிரான் பிணைப்பு? வெளி என்னும் இறுக்கம்

துல்லிய சமதள சீர்மை ஆற்றலாய் செயல் பட்டு, பல துகள்களை இறுக்க, அந்த

சுழல் இயக்கதின் இயல்பாய், கனமான துகள்கள் மையம் நகர, லேசான துகள்கள்

அம்மையம் சூழ, மையத்தில் வெளியின் இறுக்கத்தால், அழுத்தம் மிக, அந்த

மிகுந்த அழுத்தம், மையம் சென்ற துகள்களுக்கிடையேயான வலுவான பிணைப்பு

விசையாய் பரிமளிக்க, அதுவே இயற்பியலில் வலுவான அணுவாற்றல் என்னும் பெயற்

பெற்றதாம். மேலும், மையம் சென்ற கனமான துகள்கள் புரோட்டான் மற்றும்

நியுட்டிரான், அவைகளைப் பிடித்து இறுக்கி கெட்டியாய் பிணைத்தது சுத்த

வெளி. அறிவியல், இன்று வரை, இந்த உண்மை நிலை வரை வரவில்லை.



மேலும் இன்றய ஆய்வு இயற்பியல், ஒரு சிறு கோமாளித்தனத்துக்குள் குதிக்க

தயார் படுத்திக் கொண்டிருக்கின்றது தன்னை. அது எதுவெனில், ஒரு லட்டு

இருப்பதாகக் கொள்வோம். அந்த லட்டை இன்னொரு லட்டு மீது மோதச்

செய்தால், என்ன வெளிவரும்? கட்டாயம் ஒரு உடைந்த லட்டுத் துண்டாவது வரும்

அல்லவா? அந்த துண்டைக் கையில் வைத்துக் கொண்டு நான் லாட்டுத் துண்டை

புதிதாய் கண்டுபிடித்துவிட்டேன், எனக்கே நோபேல் பரிசு, என்று சொன்னால்

என்ன பொருள்? அது போல அவர்கள் பல மில்லியன் யுரோ செலவில் பல மைல்

தூரம் செல்லும் ஒரு ஆழ்குழாய் பாதை அமைத்து அதில் அதிவேகத்தில் இரு

பரமாணுக்களை மோத விட்டு, ஒரு உடைந்த பரமாணுத் துண்டு வருமா என்று

ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பின் அந்தத் துண்டை கிப்ஸ் போசான் என்ற

ஏட்டுத் துகளின் பண்புகளாக ஏட்டில் கருதப்படுபனவற்றோடு ஒப்பிட்டு

ஒன்றாய் அது வந்து விடும் என்றும் நம்புகின்றார்கள். அதை வைத்துக்

கொண்டு அதுவே அடிப் படைத் துகள் என்று அறிவிக்க இயலுமா, அதுவே பின்

கிராவிட்டி என்னும் ஆற்றலின் அடிப்படைத் துகள் என்று சொல்ல இயலுமா

என்றும் யோசிக்கின்றார்கள், இதே கிராவிட்டி ஆராய்சியை, நாம் ஆழ் மனம்

என்னும் நிலையில் செய்யும் போது, லட்டாங்க அது பூந்தித் துகள்களின்

தொகுப்பு, அந்த பூந்தி போன்றதே நமது இறைத்துகள், அந்த லட்டு போன்றதே

பரமாணு, என்னும் உண்மை, குரு அருளால் நமக்கு எளிதில் விளங்கிக்

கொள்கின்றது. பல மில்லியன் யுரோ ஆராய்ச்சி எங்கே? அரை மணி நேரத்

தவத்தில் இதை உணர்த்தும் இறைஅருள் எங்கே?



வாழ்க வளமுடன்.

No comments: