Thursday, March 10, 2011

ஒழுக்கம்

ஒழுக்கம்

வாழ்க வளமுடன்


எந்த ஒரு நிமிடத்திலும் நமக்குள் உள்ள உணர்வுகளை குருவிடம் சொல்லிக்கொண்டே செல்வது என்பது நல்ல ஒரு பழக்கம்... இது வழக்கமானால், அப்போது நம்மோடு குரு எப்போதும் இருக்கிறார் என்கிற உணர்வு எப்போதும் நீடிக்கும்... இந்த உணர்வு, நமது வாழ்விலே பல இடங்களில், இருக்கும் இடத்திலிருந்து நம்மை இறையின் பக்கம் திருப்பி விடும்.

சீடன் என்பவன் எப்போதும் குரு என்ற நிழலிலே இருப்பது என்கிற சுகத்தை இழக்காது பாதுகாத்துக்கொள்கிறேன்.

தன்னால் ஆன உதவிகளை எப்போதும் செய்துவந்தாலும், குரு என்ற இருப்பினை நோக்கி செல்லச்செல்ல, தனக்குள் ஏற்படும் மாற்றங்களை அனுமானித்து, நோக்கும் விசயங்களின் தன்மைகள் தன்னையும் பாதிப்பதை அறிந்து விடுதல் மிகமுக்கியம். சமுதாய அமைதியை வலியுறுத்திய குருவானவர், தனக்கோ பிறருக்கோ என்று தான் தனது பண்பாட்டினை எடுத்துத் தந்தார்.

பிறருக்குத் தீங்கு இழைக்காதது என்ற நிலை எல்லாருக்கும் ஆன்மீக உயர்வின் அடிப்படையிலே இருக்கும். இந்தப்பயிற்சி அதிகமாகும் அளவிலே, தனக்கும் தீங்கு தரக்கூடாத நெறியானது சீடனுக்குள் மலரும். அப்போது தான் குரு சொன்ன விதத்திலே, தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ, உடலுக்கோ, உணர்ச்சிக்கோ தீங்கு விளவிக்காததே ஒழுக்கம் என்று சொல்ல முடியும். இந்த பண்பாடு என்பது, பிறருக்குத் எவ்வகையிலும் தீங்குதராத என்ற பிடிப்புடன், தன்னை கவனித்து உயர்த்திக்கொள்ளும் நிலையை சீடனுக்குத் தந்தார் குரு.

யாருக்கும் தீங்கு தரக்கூடாது என்று எண்ணுகிற எனக்கு ஏன் இந்த நிலை என்று ஒரு கணம் நினைத்தாலும் கூட, தனக்கோ பிறருக்கோ என்ற அந்த பண்பாட்டு வரிகளினை சொல்லிக்கொண்டே முன்னேறிட வேண்டும். இது குருவை நெருங்கும் ஒரு வழி. குரு வழி.

எதிர்பார்க்காது தன்னை அண்டி இருக்கிற சீடனை உயர்த்துவது என்பது குருவின் ஒரு அம்சம்.

காலத்திலே நடக்கும் நிலைகளில் பின் தங்கி இருப்பதாகக் கருதப்பட்டு மனதில் ஏக்கம் ஏற்படுவது, அந்த மன அலையிலே குருவை தொடர்பு கொள்ளாமல் இருக்கிற காரணமாக இருக்கிறது... அந்த அளவிற்கு எச்சரிக்கை உணர்வும், காலத்தினைப் புரிந்துகொள்ளும் தன்மை சீடனுக்குத் தந்துவிடுகிறார். இருப்பினும், தியான முன்னேற்றத்தினை மட்டும் விரும்பும் சீடனை தானாகவே, தனது இடத்திலே கொண்டு போய் நிறுத்தி, உயர்த்தி விடுகிறார்.

நாம் எந்த மாதிரியான விவகாரத்திலே மாட்டி இருக்கிறோமோ, அதை எல்லாம் குருவிடம் சொல்லமுடியுமா என்று திக்கித்து நிற்பதை விட, குருவிடம் கலந்துகொண்டு தியானத்திலே அந்த எண்ணத்தைக் கடந்து நின்று அமைதியிலே திளைக்கும் முயற்சியைப்பார்த்தாலே அந்த சிக்கலிற்கு உள்ள தீர்வு கிடைத்து விடும்.

குரு என்ற அருளைத்தொட்டுப்பார்க்க இறை நிலை தவத்தில் லயிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
வாழ்க வளமுடன்.

நன்றி : சுந்தரராஜன்

No comments: