Tuesday, March 15, 2011

சித்திகள் பற்றி பதஞ்சலி யோக சூத்திர பிரமாணங்கள்

சித்திகள் பற்றி பதஞ்சலி யோக சூத்திர பிரமாணங்கள்

எல்லா உயிர்களின் மொழியறிவு.

பறவை மொழி, பாம்புமொழி, ஆடுமாடு விலங்குகள் மொழி இவற்றை அறிந்து அவற்றுடன் பேசமுடியும்.
ஒன்று என நாம் நினைத்திருக்கும் ஒலி, அதன் பொருள் ஞானம்
மூன்றையும் பிரித்துத் தனித்தனியே சம்யமம் செய்வதால் எல்லா
உயிர்களின் குரல்மொழிகளின் ஞானம் வரும்.

பிறர் கண்ணுக்கு மறைதல்

யோகியானவன் கண்ணாடியின் முன் அமர்ந்து தன் உருவத்தையே
நன்கு உற்று நோக்கி தன் உருவத்தின்மீது சம்யமம் செய்வதால் பிறர் கண்களுக்குப் புலப்படாமல் உலவ முடியும்.

தன் மரணகாலத்தை அறிதல்.

தன்னுடைய சஞ்சித, பிராரப்த, ஆகாம்யா, நிஷ்காமிய, கர்மங்களின் மீது சம்சயம் செய்து தன் இறப்புக் காலத்தை யோகி அறிந்து கொள்கிறான்.

குணங்களின் மீதான சம்சயம்.

நட்பு, கருணை, காதல், ஈகை, என்று நற்குணங்களின் மீது மனம் வைத்து சம்சயம் செய்வதால் பல்வேறு வகை சித்திகள் கைவரும்.

தொலைவில் உணர்தல்

ஜோதி சம்சயம் என்ற விளக்கின் ஒளியில் சம்சயம் செய்வதால்
தொலைவில் உணரும் வல்லமை கிடைக்கிறது.

உலக அறிவு பெற

சூரியனின் மீது மனங்குவித்து சம்சயம் செய்வதால் உலக அறிவு உண்டாகும்.

வாழ்க வளமுடன்...

1 comment:

thalavaisamy - tuticorin said...

சம்யமம்,சம்சயம் ithil yathu correct