Thursday, March 31, 2011

தீட்சை முறைகளைக் கூறும் சித்தர் பாடல்கள்

தீட்சை முறைகளைக் கூறும் சித்தர் பாடல்கள்.

--ஸ்பரிச தீட்சை என்ற தொடு தீட்சை.



வாரணம் முட்டையிட்டு வயிற்றில்வைத் தணைத்துக் கொண்டு

பூரணக் கூடுண்டாக்கிப் பொரிந்திடுங்குஞ்சு போலக்

காரணக் குருவைமூலக் கனல்விளக் கதநாற கண்டு

நாரணன் அறியாநாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே



சட்சு தீட்சை என்ற நேத்திர தீட்சை



தண்ணீரி லிருக்கும்மீன்கள் தண்ணீரிற் கருவைப்பித்திக்

கண்ணினாற் பார்க்கும்போது கயலுறு வானாற்போல

நண்ணிய குருவைக்கண்டு நாதன்நல் லுருவைச் சேர்த்து

விண்ணின்மேல் நாகைநாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே.



ஞானதீட்சை எனும் மானச தீட்சை



குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டுக்

குளத்துநீர் குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது

குளத்திலே புதைத்தமுட்டை கருவுரு வானாற்போல்

உளத்திலே நாகைநாதர் உருவழிந் துணர்வாய் நெஞ்சே.

------------(கணபதிதாசர் நெஞ்சறி விளக்கம் பாடல்கள்)



கருக்கொண்ட முட்டைதனைக் கடல்ஆமை தான் நினைக்க

உருக்கொண்ட வாறதுபோல் உன்னை அடைவது எக்காலம்.

-------------------(பத்ரகிரியார் பாடல்)

1 comment:

Sivamjothi said...
This comment has been removed by the author.