Thursday, July 28, 2011

அன்பே சிவம்

அன்பே சிவம்



குற்றம் செய்யினும் குணமாக கொண்டு

அற்றம் தவிர்க்கும் நம் அப்பர் பதத்திற்கே

அபயம்! அபயம்!! அபயம்!!!


ஆத்மாவாகிய பிரம்மத்திற்கு நான்கு நிலைகள் உள்ளன்...


1. விழிப்பு நிலை - சாக்கிரம்

2. சொப்பன நிலை - கனவு

3. சுழுத்தி நிலை - நித்திரை

4. துரியநிலை - தன்னுடைய சுயநிலையாகிய ஆன்மா


துரிய நிலையில் உள்ள ஆத்மாவுக்கு மற்ற மூன்று நிலைகளும் சொப்பன நிலையாகும்.


இந்த மூன்று நிலைக்குள் உலகம் முழுவதும் அகப்பட்டுள்ளது. ஆகவே எல்லாம் பிரம்மம்.


பிரம்மம் - அத்மா - பிராணன் - கடவுள்


அத்மாவே பிராணனாகவும், மனமாகவும், புத்தியாகவும், சித்தமாகவும், அகங்காரமாகவும், பஞ்சேந்திரியங்களாகவும்,

இவைகள் அனுபவிக்கும் உலகங்களாகவும் ஆகின்றது.


மனம் நான்கு விதமாக திகழ்கின்றது.


1. பஞ்சேந்திரியங்களோடு வியாபாரத்தில் ஈடுபடும் மனம்.

[பஞ்ச இந்திரியங்கள் - கண், காது, மூக்கு, வாய், மெய்]


2. மனத்தை அடக்கியாளும் புத்தி


3. எப்பொருளையும் தனதாகக் கொள்ளும் அகங்காரம்.


4. அதன் சுத்த நிலையாகிய சித்தம்


இச்சித்தம் தான் இதயத்தில் பிராணனின் உறைவிடம்.


1. காற்றாடி விடுபவன் நூலைப்பற்றியிருப்பது போலும்,


2. மூலையில் மாடு கயிற்றினால் கட்டப்பட்டது போலும்,


3. தாயில் முந்தாணியைப் பிடித்துக் கொண்டே செல்லும் குழந்தை போலும் பிராணனும் மனமும் இணைக்கப்பட்டிருக்கின்றன.


பிராணன் மனதை தாய்போல காக்கிறது.


விழிப்பு நேரத்தில் குழந்தையாகிய மனதை இந்திரியங்களோடு விளையாட விடுகிறாள்.


அந்திப்பொழுதானதும் மனதை உள்ளே இழுத்துத் தூங்க பண்ண முயற்சி செய்கிறாள்.


மனது தன் நண்பர்களாகிய பஞ்சேந்திரியங்கள் இல்லாமல் தனக்குத்தானே விளையாடிக் கொள்கிறது..


பிறகு இதயத்துக்குள்ளே இழுத்து மடியிற்போட்டு தூங்கப் பண்ணுகிறாள். இங்கே சித்தாக இருந்து கொண்டு மனம் சுகத்தை அனுபவிக்கிறது.

[சூக்கும காரண உடலை கடந்த போது ஆத்மாவே இதயம்]


பிராணன் விழித்துக் கொண்டிருந்து குழந்தையாகிய மனதின் விளையாட்டு சாமாங்களாகிய உடலையும், ஞாபக சக்தியையும், புத்தியையும், அகங்காரத்தையும், ஜாக்கிரதையாய் வைத்துக் கொண்டு விழித்தவுடன் அதனிடம் கொடுத்து விடுகிறது.


சுழுத்தி : தூக்க நிலையில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மனிதன் கடவுளோடு இதயத்தில் ஒன்றியிருக்கிறான்.


மனது சுதந்தரமின்றி பிராண சக்தியால் இழுக்கப்பட்டு தூக்க நிலைக்கு போவதால் அங்கிருந்து கடவுள் அறிவை கொண்டு வர முடியவில்லை.


ஆனால் தானாகவே உலகத்தை உதறி தள்ளிவிட்டு புத்தி கூர்மையால் அகங்காரத்தையும், தள்ளிவிட்டு இதயக்குகையில் இருக்கும் தன்னுடைய சுயவீடாகிய சித்தத்தில் குடிக்கொண்டிருக்கும் கடவுளிடம் செல்லுவோமானால் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. கடவுளின் அருள் ஏற்படுகிறது.


இதுதான் உண்மை ஞான அறிவு. இந்த அறிவால் பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம். எல்லா தத்துவங்களையும் எளிதாக அறியலாம். மனம் எப்படி அடிக்கடி கடவுளிடம் போக்குவரத்து வைத்துக் கொண்டு இருக்குமானால் பேரின்பம் உண்டாகும். இதனை அடையச் செய்யும் சாதனையே பிராணாயாமம் ஆகும்.


பிராணாயாமம் பற்றி ஞானிகள் கூறும் மெய்ஞான விளக்கம் வருமாறு


நாதவிந்து என்றும் நடுவனையிலே இருந்த

போதமென்று மீண்டும் புகன்றதெல்லாம் - ஓதரிய

வாசிக்கே சொன்ன வகையல்லால் வேறன்று

நேசித்து நீ முனையில் நில்


நாசிவரும் வாசி நடுவனையிலே மறித்து

ஊசித்துளை வழியே உள்ளேற்றிப் பேசும்

இடமறிந்து சென்றே எல்லாமும் நீயதுவாய்த்

திடமறிந்து கண்டு தெளி


கண்டதுண்டந் தானறிந்து காரணராஞ் சற்குருவைத்

தெண்டனிட்டு நின்று தெரிசித்தாற் - துண்டமதிற்

காலைமே லேற்றுங் கருத்தனைக் காட்டுவார்

[வேல் முனையைக் கண்டுமே லேற்று]


வாசி என்பது பிரமரந்திரம் நோக்கிச் செல்லும் பிராணனுக்கு பெயர்.

ஊசி என்பது சுழுமுனைக்கு பெயர்.


"ஊசி துளையில் பாம்பு அடைப்போம்" - என்றார். ஒரு பெரியோர்.


அதன்செயல் கீழ்முகமாகச் செல்லும் அபானனது கதியை மேல் நோக்க செய்தல்.


இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்

துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்

உறக்கத்தை நீக்கி உணரவல்லார் கட்கு

இறக்கவும் வேண்டாம் இருக்கலுமாமே


இடகலை, பிங்கலை நாடிகளின் வழிப் பிராணன் இயங்குவதை மாற்றி சுழுமுனை வழியாகப் பிராணனை செலுத்த வல்லார்க்குத் தளர்ச்சி இராது. உறங்கும் காலத்தில் விழித்திருந்து, பயில்வார்க்கு இறப்பின்றி அழியாது இருக்கக்கூடும்.


சுழுமுனைத் தியானத்தை அதிகாலையில் தொடங்குவார்க்கு அழிவில்லை என்று திருமூல நாயனார் அருளியுள்ளார்கள்.


[நன்றி : ஜோதியும் திருவடியும்]

Tuesday, July 26, 2011

மூலிகை பதிமுகம்

இந்த வார மூலிகை அறிமுகம் 1 - பதிமுகம்


பதிமுகம்

1. வேறுபெயர்கள்- சப்பான் மரம்,. பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா.
2. தாவரப்பெயர்- சிசால்பினேசப்பான், CAESALPINIA SAPPAN சிசால்பினேசி எனும் தாவரக் குடும்பம்.
3. வளரும் தன்மை- இந்தியா மற்றும் மலேசியாவைத் தாயகமாக் கொண்டது பதிமுகம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு செம்புறை மன் உகந்தது.முட்களுடன் பத்து மீட்டர் உயரம் வளரும் குறு மரம். இதன் குறுக்களவு சுமார் 15.30 செ.மீ. விட்டமாகும். ஒரு வருடத்தில் செடிகள் 3-5 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் இளம் பச்சை நிறமுடைய கூட்டிலைகளாக முதல் வருடத்திலேயே பூக்க ஆரம்பிக்கும்.

கவர்ச்சியான இளமஞ்சள் நிறமுடைய பூக்கள், காய்கள் 15 நாட்களில் தோன்ற ஆரம்பிக்கும். மூன்று மாதங்களில் முற்றுகின்றன. ஒவ்வொரு காயிலும் கரும்பழுப்பு நிறமுடைய 3-4 விதைகள் இருக்கும். இது வறட்சியைத் தாங்கி பல் வேறுபட்ட கால நிலையிலும் வளரும். இது வறண்ட வெப்ப மண்டலம், மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளரும். இந்த மரம் முதிரவடைவதற்கு 8 வருடமாகும். இது விதை வழி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

4. பயன் படும் உறுப்புக்கள்- இலை,பட்டை, மரத்தண்டு, பூக்கள், மற்றும் வேர்பாகங்கள். (சமூலம்).

5. பயன்கள்- இதன் மரக்கட்டைத் தூளை உபயோகித்து மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப் படுகிறது அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது.
சர்கரை நோய் கட்டுப்படுகிரது, இரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படிகிறது. சிறுநீரகக் கோளாறுகள் சீரடைகிறது. மூலநொய் குணமடைகிறது. கொழுப்பு விகிதம் சமச் சீராகிறது. வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக் கின்றது. சரும நோய்சரியாறது.
பூ, இலைகள், ஒப்பனை அழகு சாதனப் பொருட்களாகிறது. இயற்கையான நிறமேற்றுப் பொருளுக்கான அதி அற்புத உற்பத்திப் பொருளாகிறது 1000 மடங்கு எதிர்கால தேவையை நிவர்தி செய்யும்திறன் மிக்கது. இதன் மையத்தண்டில்அடங்கியுள்ள 'பிரேசிலின்' என்ற சிகப்புச் சாயம் காற்றில்பிராணவாயுவுடன் சேரும் போது 'பிரேசிலியன்' வண்ணமாக மாறுகின்றது.
இச்சாயம் நீர், வெளிச்சம் மற்றும் வெப்பத்தால் பாதிப் படையாத, அறிப் புண்டாக்காத முகப் பூச்சுக்கள் தயாரிப்பில் பயன் படுகிறது. முதிர்ந்த மரத்தின் மையப்பகுதியினின்று பெறப்படும் சாயம் தோல்,பட்டு, பருத்தியிழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சாமான்கள் வீட்டுத்தரை, சிறகு, மருந்துகள் மற்றும் பல்வேறுபட்ட கைவினைப் பொருட்களை வண்ண மூட்டப் பயன் படுத்தப் படுகிறது. பத்தமடை கோரைப் பாய்கள் பதிமுக வண்ணத்தால் சாயமூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பதிமுக சாயம் 'கயா' என்னும்மரச் சாயமுடன் கலக்கும் போது கறுப்பு, ஊதா மற்றும் சிகப்பு வண்ணச் சாயங்கள் உருவாக்கப் பட்டு அவை பனைஒலை, மற்றும் தாழை, கைவினைப் பொருட்களை வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் பயன்படும் 'லூக்கோல்' என்னும் மருந்தில் பதிமுகம் பயன் படுத்தப்படுகின்றது. இது கற்பப்பையினுள் கருவி மூலம் சோதனை செய்யும் போது உதிரம் கொட்டுதல் போன்றவற்றை மட்டுப் படுத்திகிறது. இலைகளினின்று பிரித் தெடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம், போன்றவற்றிக்கு எதிராகப்பயன் படுகின்றது. மிக அதிக அளவில் கரியமில வாயுவை கிரகித்துக் கொள்வதுடன் மிக அதிக அளவில் பிராண வாயுவைவெளிப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை அற்புதமாக பாதுகாக்கிறது. மழை வளத்தைத்தூண்டுகிறது

காந்தத் தொடர்- நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி

காந்தத் தொடர்- நீங்கள் நினைத்ததை அடைய -பகுதி 4

நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் ,பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம் .

நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள் , ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதைவிட,எது தேவை இல்லையோ அதை பற்றிதான் யோசித்து கொண்டிருப்பதும், பேசிகொண்டிருப்பதும் தெரிய வரும், நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கேட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை ,அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது .
ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி ,அது உங்களது எண்ணங்களை பெற்றுக்கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும் , நீங்கள் என்ன என்னிகொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும் .

ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி
நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால் , உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ ,அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் , அதற்கு நல்லது ,கேட்டது தெரியாது .

நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும்போது அது அப்படியே எடுத்து கொள்ளும் ,அதற்கு சில உதாரணம்

" நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன்
நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன் "

" இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது
இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும் "

"எனக்கு காய்ச்சல் வரகூடாது "
எனக்கு காய்ச்சல் வர வேண்டும்"


"நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன்
நான் இனி எந்த விசயத்திலும் தோர்ப்பேன் "

நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது .

மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்ததுதான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர் .

நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் ,நாம் பேசிக்கொண்டிருக்கும்போதும் ,டிவி பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போதும், கார் ஓட்டும்போதும் , வேலை செய்து கொண்டிருக்கும்போதும் ,நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும்தான் ,ஆனால் நாம் தூங்க முயலும் பொது கடைசியாக நாம் சிந்தித்த வற்றை ஈர்ப்பு விதியானது , அசை போட்டு கொண்டிருக்கும் ,அதனால் நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும்.

இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை ,நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும் .நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள் .நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் .உங்களது எண்ணங்கள் தான் விதை .உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்.

இன்னும் ஈர்க்கும்

மூலிகை - குப்பைமேனி

1) வேறுபெயர்கள் :- பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி.

2) தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.

3) குடும்பம் :- EUPHORBIACEAE.

4) வளரும் தன்மை :- இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. குப்பை மேனிக்கு அருகில் பூனை வராது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில்
ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட
குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குனான், ஸ்டீரால்ஸ் மற்றும், சைனோஜெனிக் க்ளைக்கோஸைடு போன்ற மிகவும் விஷம் வாய்ந்த வேதிப் பொருட்களையும் உடையது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். எரிப்புகுணமுடையது.வசீகரப்படுத்தும்இயலடையது.
மாந்திரீக மூலிகையாகும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.

5) பயன்தரும் பாகங்கள் :- செடி முழுதும் மருத்துவப்பயனுடையது.

6)பயன்கள் :- நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலைஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.

வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவுகொடுக்கவும்.

இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும்.

இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும்
இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.

மூலநோய் :- மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள்நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். பதினெட்டுவகை எனவும், கூறுவர். அவைஇவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலைசாப்பிடுக, 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்மோரில் சாப்பிடுக. புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

நாடாப்பூச்சி, புழு - குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகிய வற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

விடம் :- குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியன வற்றில் கடி வாயில்தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.

படுக்கைப்புண் :- ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இழஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.

தலைவலி :- இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

சொறிசிரங்கு :- குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும்அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்துவர சொறி சிரங்கு படை குணமடையும்.

புண் :- எல்லாவகையான புண்களுக்கும் இதன்இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.

Read more: http://karurkirukkan.blogspot.com/2011/05/10.html#ixzz1TC4sU9R9

Monday, July 25, 2011

நால் வருணம்

நால் வருணம்

வானில் நாம் காணும் பலகோடி அண்டங்களையும் ஒன்று கூட்டி நினைத்து அதனை பிரபஞ்சம் என்று கூறுகிறோம்.
எல்லா அண்டகளையும் சேர்ந்த ஒரு பெரிய இயக்கமாக இருப்பதால் அதனைப் பேரியக்கமண்டலம்,என்று நாம்
கூறுகிறோம்.நாம் நட்சத்திரங்கலகக் காண்பது சுரியன்களே.அவற்றில் ஒன்று நாம் வாழும் நில உலகு இயங்கி வரும் சூரிய மண்டலம்.
நில உலகம் தோன்றிய பின் கணக்கிட முடியாத காலம் கடந்து ஓரறிவு உயிர் பொருளாகிய புல்,புண்டுசெடி,கொடி,மரங்கள் தோன்றின.
பிறகு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டறிவு,மூவறிவு,நான்கறிவு,ஐயறிவுஉயிகளென விலங்கினம் விரிந்தன.
சந்தர்ப்ப வசமாக இருவேறுபட்ட விலங்கினங்களின் உடலுறவில் இருந்து ஆதிகாலமனிதன் தோன்றினான். அந்தஒருமனிதனில் இருந்து கிளைத்து விரிந்தே மனிதசமுதாயம்.மனித இனம் விலங்கினங்களைப்போலவே இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக
துய்த்து ஆறாவது அறிவாகிய சிந்தனை சிறப்புப் பெறாது கழிந்த காலம் மிகநீளம்.
எப்போது பூமியைக் கிளறி வித்தித்டுப் பயிராகிஇருப்பு வைத்து தானும் உண்டு பிறக்கும் வழங்கி வாழத் தெரிந்து கொண்டானோ,
அதுவே மனிதன் ஆறாவது அறிவு ஒளிவிடத் தொடங்கியகாலம்.மனித இனம்தொடக்க காலத்தில்,ஆங்காங்குகிடைக்கும்.நிலவளம்,விளைபொருள்கள்,வாய்ப்பு இவற்றிர்கேற்பபொருட்களை உற்பத்தி செய்து பண்டமாற்றுமுறையில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வழ்ந்திரிந்தர்கள். பிறகு ஒரு குழுவினரோடு பிரகுழு கலப்புறுங்காலம்
வந்தது.ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினருக்கு தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் மாற்றிக்கொள்ளும் தேவையும் ஏற்பட்டது. இவ்வாறு பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மற்றும் ஒரு புதிய தொழில் உண்டாயிற்று.இந்ததொழில் திறன்படச்செய்தவர்கள் வணிகர்களானர்கள்.இவர்களே வைசியர்கள் எனப்ட்டர்கள்.
பொருள் மிச்சம்,இடம் மாற்றம்,வணிகதொழில் என்றமூன்று நிலைமைகளால் வரியவன் எளியவனைத் தக்கிப்பொருள் பறிப்பதும்,
உயிர்கொலை என்ற வன்முறைச்செயல்கள் உருவாயின.சமுதாயக்கூட்டாக இதைத்தடுத்து எளியவர்களையிம் அவர்கள் உடமைகளையும் பாதுக்காக பொதுக்கவல்முறை ஏற்பட்டது.அதற்காக மக்காளால் நியமிக்கப்பட்ட உடல்வலிவும் போர்த்திறமையும்
உள்ள தலைவன் தான் காவலன்.பிற்காலத்தில் ஏற்பட்ட பல மாறுதல்களையோட்டி காவலன் அரசன் எனப்பட்டான்.புலன் இன்ப வாழ்விலே மக்களில் பலர் நேறிதவறிய செயல்களாலும்,எண்ணங்களாலும் வாழ்வில் சிக்கல்கள் பலதோன்றின.
பின்னர் இயற்கையை ஆராயும் சிந்தனையாளர்கள் மனிதசமுதாயத்தில் உருவானார்கள்.அவர்கள் அறிவைஉட்செலுத்தி உடலுக்குள்
உயிரையும்,உயிரை நிலைக்கலனாகக் கொண்டுவிரிந்தது இயங்கும் அறிவையும் பேரியக்கமண்டல நிகழ்ச்சிகளுகுக்கெல்லாம் மூல
ஆற்றலான இறைநிளையும் உணர்ந்தார்கள்.இவ்வகையில் அறிவுவிரிந்தது இயற்கையை உணர்ந்ததெளிவுலே மக்களுக்கும்,அரசுக்கும்,வணிகருக்கும் ஏற்படக் கூடிய வாழ்க்கைச் சிக்கல்களை அவ்வப்போது ஆராய்ந்து சிக்கல் தீர்த்து சீராகவாழும்
முறைகளைப்போதனை செய்தார்கள்.இவர்கள் எல்லாவற்றையும் பர்ப்பவனாகிய அறிவு யார் என அறிவை நோக்கி உள்நோக்கிப்
பார்க்கும் அகத்தவ முறையைப் பயின்றதால் பார்பனர் என்று,முடிவாக பெரியக்கமண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் தனது அழுத்தம் எனும் ஒரேஆற்றலால் துல்லியமாக இய்ங்கிவரச்செய்யும் ஆதியும்அனதியுமான மெய்பொருளை பிரம்ம நிலையை
உணர்ந்தவர் என்ற உயர்கருத்தில் மெய்ஞானி,பிராமணர் என்றும்வழங்கப்பட்டனர். ஆழ்ந்து ஆராயுமிடத்து ஒரே சாதியானஉழைப்பாளி,
எல்லார் வாழ்வுக்கும் ஆதாரமானவனயிருப்பதனால் சூத்திரன் என்ற மதிப்பைப் பெற்ற உளைப்பளியிருந்து தான் தேவைக்கும்
காலத்திற்கும் ஏற்ப வணிகன்,அரசன்,மெய்ஞ்ஞானி என்ற மூன்று பிரிவுனரும் தோன்றியிருக்கிறார்கள்.
எந்தத் தொழிலையும் திறமையாக,சிறப்பாகவும் செய்யக்கற்றுக் கொள்ள கல்விக் கூடங்கள் இல்லாத காலத்தில்,தந்தை செய்த தொழிலையே மகனும் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் அந்தத் தொழிலை ஒட்டி சூத்திரன்(உழைப்பாளி),வைசியன்(வணிகன்),அரசன்(சத்திரியன்),மெய்ஞ்ஞானி (பிராமணன்),என்று பிரித்து பேசப்பட்டது.தொடர்ந்து பழக்கத்திற்கும் வந்துவிட்டது.இனி
இன்றையநிலைமையைக் கவனிப்போம்.
விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு எவரும் எந்தத்தொளிளையும் கற்கலாம்,செய்யலாம் என்பதனால் தனியே சூத்திரன் என்பதுமறைந்துவிட்டது.
எவர் என்றாலும் எல்லாருமே வாணிபம் செய்யலாம் என்ற வாய்ப்பு ஏற்பட்டுச்செயலிலும் வந்து விட்டது வைசியன் என்ற தனிப்பிரிவு போய்விட்டது.
வக்குச்சீட்டுப் போட்டு எந்த குடிமகனையும் ஆட்சியாளனாகாக்கொண்டு வரலாம் என்ற நிலை ஆட்சிக்கு விட்டதால் சத்திரியன்
என்றதனிப்பிரிவு மனிதசமுதாயலித்திருந்து விடை பெற்றுக்கொண்டது.
விஞ்ஞானக் கல்வியால் எவரும் விண் அறிவும் நுண்ணறிவும் பெற வாய்ப்பும் அகத்தவ சாதனையால் எவர்முயன்றாலும்
பிரம்மத்தை அறிந்து அறிவில் முழுமைபெறலாம்.மெய்ஞ்ஞானியாகலாம் என்ற சமுதயநிலை உருவகிவிட்டதல் தனியே பார்ப்பான்
-பிராமணன் என்ற பிரிவு மறைந்து விட்டது.
உழைத்துப் பொருள் ஈட்டும் உளைப்பளியிலேயே, சூத்திரநிலேயே நான்கு ஜாதிகளும் ஒன்ருபட்டுவிட்டது. இந்த உண்மையை உணர்ந்து சாதியால் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு காணமல் உலகம் ஒன்று,மனிதசமுதாயம் ஒன்று அதில் நாம் அனைவரும் உடன்பிரந்தவ்ர்களே என்ற விரிந்த நோக்கில் ஒருவருக்கு ஒருவர் உதவியும் எவரும் பிறருக்கு எவ்வகையிலும் தீமை செய்யாமலும் அறவழியில் நின்று வாழ்வோம்.அமைதியும் இன்பமும் கூடிய வாழ்வை அனுபவிப்போம்."வாழ்க வளமுடன்" -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

எட்டும் இரண்டும்

நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்கி குரு எமக்கு சொல்லி குடுத்ததை இறைவனின் அருளால் நான் இந்த பதிவை இங்கு பதிவு செய்கிறேன். எழுத்து பிழை இருப்பின் திருத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே ---- திருமந்திரம் 986

எட்டும் இரண்டும் இனிதான பேரின்பத்தைக் கொடுக்கும் என்பதனை, எட்டையும் இரண்டையும் அறியாதவர்கள், பணம் உள்ளவன் பணக்காரன் இல்லாதவன் ஏழை. அதுபோல எட்டும் இரண்டும் அறிந்தவன் ஞானமாகிய செல்வம் பெற்ற பணக்காரன். எட்டும் இரண்டும் அறியாதவன் ஞானமாகிய செல்வம் இல்லாத ஏழைகள்.
அவர்கள் அதன் இன்பத்தை அறிய மாட்டார்கள். என்ற கூறுகிறார். மேலும் எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு அதாவது பத்து என்பதே சித்தாந்த சன்மார்க்க பாதம் என்கிறார் திருமூலர். இது என்னடா!? எட்டும் இரண்டும் பத்து என்பது முதல் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கே தெரியும் இதைச் சொல்ல திருமூலர் எதற்கு என்கிறீர்களா? ஞானிகள் கூற்று எல்லாமே எளியதான ஆனால் அதே சமயம் ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஞானத்தை விளக்கும் மறை பொருளாகவே இருக்கும்.

இனி திருமூலர் சொன்னதை பார்ப்போம்?

எட்டு என்பது " 8 " என்றும் தமிழில் "அ" என்றும், "சூரியன்" என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும்.

இரண்டு என்பது " 2 " என்றும், தமிழில் "உ" என்றும், "சந்திரன்" என்றும், இடது கண் என்றும் கூறுவர்.

இந்த எட்டும் இரண்டும் பத்து. 8 + 2 =10 , அ + உ = ய, சூரியனும் சந்திரனும் நம் சாதனையால் ஒன்று பட்டு உள்முகமாக சென்று பத்தாகிய. "ய" ஆகிய அக்னியோடு சேர்ந்தாலே திருவடியை. ஜோதியை, ஜீவனை பாதத்தை நாம் தரிசிக்க முடியும். இந்நிலையைத் தான் "முச்சுடரும் ஒன்றை முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காண அனந்தமாபாதம்" என சித்தர்கள் கூறுவர்.

யமுனையில் கண்ணன் காளிங்க நர்த்தனம் புரிந்தான் என்பது புராணம். இதன் தத்துவம் பற்றி கொஞ்சம் சிந்தித்து பார்போம்.

"ய" - முனை "ய" என்ற கலை சேர்ந்த எழுத்தில் மூன்று முனை - சூரியன் சந்திரன் அக்னி என மூன்று கலை சேர்ந்த இடத்தில் - விஷத்தைக் கக்கும் காளிங்கன் - காம குரோதாதிகளை கொடுக்கும் பஞ்சேந்திரியங்களை வென்று அதன் மேல் ஏறி - ஒளியாகிய இறைவன் - கண்ணின் ஒளி - கண்ணன் ஆனந்த நடனமாடினான் என்பதே மெய்ஞான விளக்கம். "ய" - முனை மூன்றாக உள்ளது, அதை ஒன்று சேர்த்தாலே ஞானசாதனை . அப்படி சேர்க்கும்போது சூலாயுதம் போல் மூன்று கூறாக உள்ளது. வேல்போல் குவிந்து ஒன்றாகி விடும். முருகனுக்கு சக்தி கொடுத்தது ஞானவேல் அல்லவா? நாம் ஒவ்வொருவரும் ஞான வேலாக மிளிர வேண்டும்! ஒளிவிட்டு பிரகாசிக்க வேண்டும்! அனுபவிப்போம் - உண்மை அறிவோம் !

இந்த ரகசியத்தை யாரவது சுட்டிக் காட்டினால்தான் நமக்குப் புரிய முடியும். அதனால்தான் "சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்ற பழமொழி நிலவுகிறது. பற்பல நூற்களையும் ஞானவான்கள் கூற்றையும் படிக்கும்போது பரம்பொருள் - ஒளி - கண் - என நினைத்து பாருங்கள் - படியுங்கள் - உண்மை விளக்கங்கள் அழகாக புரியும் ! சிந்திப்போம் தெளிவு கிடைக்கட்டும். பரம்பொருள் ஒளியாக - கண்ணில் காரியப்படுவதை நாம் உணர்வதுதான் ஞானத்தின் முதல்படி. திருவடி தீட்சை என்றும் சட்சு தீட்சை என்றும் இதைத்தான் குரு உபதேசம் செய்வார்.

உபதேசம் என்பதன் பொருள், உப = இரண்டு, தேசம் = இடம் . இரண்டு இடம் - இரண்டு கண் என்பதே ஆகும். இதை உறுதிப்படுத்ததான் சாஸ்திர விளக்கம் கூறுவர். அவரும் இதைதான் சொன்னார் - இவரும் இதைத்தான் சொன்னார் - எல்லாருமே இதைத்தான் சொன்னார்கள் என எல்லா ஞானிகள் நூற்களையும், அவற்றின் மறை பொருள்களையும் - பரிபாசையாக சொன்னவைகளை விளக்கித் தெளிவுபடுத்துவர். இந்த உபதேசத்தை ஒரு சடங்காகவே செய்வர். உபதேசம் பெற்றவன் அஞ்ஞான வாழ்க்கையை முடித்து ஞான வாழ்வுக்கு முயல்பவனாக மீண்டும் பிறந்தவனாக கருதப்படுகிறான் . மெய் பொருள் உணர்ந்த உபதேசம் பெற்றவர்களே இரு பிறப்பாளன் ஆகிறான்.

இயேசுநாதர் 2 மீன்களையும் 5 அப்பங்களையும் 5000 பேருக்கு பங்கிட்டுக் கொடுத்தார். மீதமுள்ளதை 12 கூடையில் வைத்தார் என பைபிள் கூறுகிறது. பைபிளின் முதல் பகுதியிலேயே வேத வாக்கியங்களை மேலோட்டமாக பார்க்காதீர். ஆழ்ந்து கவனியுங்கள் என கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் 2 மீனையும் 5 அப்பத்தையும் எப்படி ஐயா 5000 பேருக்கு பங்கிட்டு கொடுக்க
முடியும் ? கொஞ்சமாவது சிந்திப்போம்.

மீன் என்றால் தண்ணீரில் வாழும் மீன்அல்ல. மீன் போன்ற அமைப்புடைய நம் கண்கள். இயேசு 2 மீன்களாக தன் இரு கண்களாலும் 5 அப்பம் என்றது ஞானேந்திரியம் ஐந்தாலும் 5000 பேருக்கு உபதேசங் கொடுத்தார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அதாவது கண்ணால் பார்த்து அனைவருக்கும் ஞானதீட்சை கொடுத்தார் என்பதே பொருள். கண்ணில் உள்ள ஒளியால் அக்னியால் ஞானஸ்தானம் வழங்கினார் என்பதே பொருள். மீதமுள்ளவை 12 கூடையில் வைத்தனர். இது 12 கலையுடன் சூரிய நிலையில் நின்றனர் என்றே பொருள்படும். நமக்கு சூரிய கலை வலது கண்ணே. இதையெல்லாம் உண்மை ஞானம் விளக்கம் பெற்றவர்கள் உடனே உணர்ந்து கொள்வார். அறியாதவர்கள் இல்லை என தர்க்கம் செய்யாதீர்கள். எவ்வளவு தூரம் இது உண்மை என அறிய முற்படுங்கள் சிந்தியுங்கள் என்பது எனது தாழ்மையான கருத்து. கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள்.

பைபிளில், கண்ணே சரீரத்தின் விளக்காய் உள்ளது. உன் கண் ஒளியுள்ளதாய் இருந்தால் உன் சரீரமும் ஒளி உள்ளதாய் இருக்கும். தேவன் ஒளியாய் இருக்கிறார். நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம். உன் சரீரத்தின் விளக்கான கண்ணில் உள்ள தேவனாகிய ஒளியை பெருக்கி உன் சரீரத்தை ஒளிமயமாக்கினால் ஒளிமயமான தேவனை தரிசிக்கலாம் என கூறப்பட்டுள்ளதை சிந்திப்போம்! குர் ஆனிலும் இன்னும் உள்ள அனைத்து மத நூற்களிலும் இதையேதான் கூரியிருகின்றனர். படித்து , சிந்தித்து தெளிவடைவோம்.

இறைவன் எப்படிபட்டவர் என்றால், ஒரு சிறு உதாரணம். நாம் தேடும் குறிப்பிட்ட அன்பரை சரியான விலாசத்தில் தேடி கண்டுபிடித்து விட்டோம். வீடு பூட்டியிருக்கிறது. நாம் வீட்டுக் கதவைத்தட்டி நண்பரை பேர் சொல்லி கூப்பிடுகிறோம். நமது நண்பர் வீட்டில் எங்கிருந்தாலும் என்ன செய்வது கொண்டிருந்தாலும் ஓடோடி வந்து கதவை திறந்து வாருங்கள் வாருங்கள் உட்காருங்கள் ஏதாவது சாப்பிடுங்கள் என்று நம்மை வெகுவாக உபசரித்து வீட்டின் உள்ளே கூட்டிச் சென்று அமர வைக்கிறார். இதுபோலவே, நாம் இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த உடலின் உட்புகு வாசலை-கண்ணை-கண்மணியில்-நினைவால்-தட்ட வேண்டும். தட்ட வேண்டிய இடத்தில் தட்டவேண்டிய முறைப்படி தட்டிக்கூப்பிட்டால் எங்கு இருந்தாலும் இங்கே வந்து வாசலை திறந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்வான். கேட்டதெல்லாம் தருவான். அருள்வான். அருளாளன் அல்லவா இறைவன்! நம் கடன்-கடமை இறைவன் இருக்கும் வீட்டு வாசலில்-கண்ணில் நினைவை நிறுத்தி பணி-சாதனை -செய்து கிடப்பதே. நம்மை உள்ளே அழைத்துச் சென்று அருள் கொடுப்பவன் எல்லாம் வல்ல இ றைவன் செயலே. வாசல் கதவை தட்டிக் கூப்பிட்டால் போதும்! நாம் செய்ய வேண்டியது இவ்வளவே! இந்த சின்ன வேலையைக் கூட நம்மால் செய்ய முடியாவிட்டால் எப்படி?! தட்டுங்கள் - திறக்கப்படும்.

நல்ல குருவைப் பெற்று சாதனை செய்யுங்கள், சத்சங்கம் கூடுங்கள். அப்பொழுதுதான் ஒருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளலாம். "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ஊண் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான் பற்றப் பற்ற தலைப்படுந்தானே". நமது ஊண் உடலைப்பற்றி நிற்கின்ற உணர்வுறு மந்திரமாகிய கண்ணில் ஒளியாக துலங்கும் ஜீவனை நாம் சாதனையால் பற்றப் பற்ற - சிக்கெனப் பற்றினால் - நமக்கு கைவல்யப்படும். "சுடரடி தொழுது எழு என் மனனே" என ஒரு பக்தர் பாடுகிறார். இறைவன் திருவடியாகிய சுடரை தொழு என் மனமே என்கிறார். திருவடியே - சுடர் என் ஜோதியே எவ்வளவு அழகாக கூறுகிறார் பாருங்கள்.!

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"



வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

நன்றி
மதிவாணன்
mathish0610@gmail.com

Saturday, July 23, 2011

சைவமா? அசைவமா?-ஒரு கருத்தாய்வு

சைவமா? அசைவமா?-ஒரு கருத்தாய்வு
எந்த உயிரையும் உட்கொள்ளாத உயிரினம் சைவம் என மனிதர்களால் கூறப்படுகிறது. ஆனால், மனிதர்களில் சைவம் உண்டா என இனி அலசுவோம்.


பூமியில் இருக்கும் உயிரினங்களை இருவகைப்படுத்தலாம்.

1.இடம்பெயரா உயிரினங்கள். 2.இடம்பெயரும் உயிரினங்கள்



இடம் பெயரா உயிரினங்கள் என்பது மரம் ,செடி, கொடி போன்ற உயிரினங்கள்.

இடம் பெயரும் உயிரினங்கள் என்பது மனிதன்,வீட்டு விலங்குகள்,காட்டு விலங்குகள்,பறவைகள்,மீன்கள் இன்னும் பல.



இடம்பெயரா உயிரினங்கள் நேரடியாக தனக்கு தேவையான உணவை பூமியிலிருந்தும்(நீர் மற்றும் தாதுக்கள்), சூரியனிடமிருந்தும் (வெப்பம்,ஸ்டார்ச்) எடுத்துக்கொள்கிறது.(இவைகள்தான் சைவம்,ஏனென்றால் இவைகள்தான் பஞ்சபூதங்களிலிருந்து நேரடியாக உணவை எந்த உயிரையும் கொல்லாமல் எடுத்துக்கொள்பவை.)

சில வகை மரம்,செடிகள் சிறு பூச்சிகளையும் விலங்குகளையும் பிடித்து அவற்றின் உடலில் உள்ள நீர்ச்சத்துக்களை உறிஞ்சக்கூடியவையும் உண்டு.(இவை அசைவ தாவரங்கள்)

அநேகமாக,சைவமா அசைவமா என சர்ச்சை பண்ணும் உரிமை மரம்,செடி,கொடிகளுக்கு மட்டும்தான் இருக்கமுடியும்



இடம்பெயரும் உயிரினங்கள், மற்ற இடம்பெயரும் உயிரினங்களையும் இடம் பெயரா உயிரினங்களையும் தின்று வாழ்கின்றன.



மொத்தத்தில், இந்த பூமியில் வாழும் அனைத்து இடம்பெயரும் உயிரினமும் மற்றொரு உயிரைத்தின்றே வாழ்கின்றன. பஞ்சபூதங்களிடமிருந்து நேரடியாக உணவைப்பெறும் மனிதர் யாரேனும் இருந்தால் அவர்தான் சைவம்.அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. ஆக, எந்த மனிதனும் சைவம் இல்லை.



(பின்குறிப்பு; ஆகவே,உயிரினத்தை வைத்து சைவமா அசைவமா என நாம் பேசுவதில் அர்த்தமில்லை. இனி,உண்ணும் வழக்கத்தை மட்டும் வைத்து பார்த்தால் தாவரங்களை உண்பவர்களை தாவர உண்ணிகள் எனவும் இரத்தம் வெளியேறி துடிதுடித்து சாகும் உயிரினங்களை உண்பவர்கள் மாமிச உண்ணிகள் எனவும் கூறிப்பழகுவோம்.)

by Kumar Ilang

வாழ்க வளமுடன்
குருவே துணை