Tuesday, May 10, 2011

உயர்ந்த சிந்தனை

உயர்ந்த சிந்தனை
1.அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.
2.உழைப்பினால், உடலும் உள்ளமும் உலகமும் பயன் பெறும் உணர்வீர்!

3.கடமை உணர்ந்து அதைச் செயலில் காட்டுபவன் தியாகியாம்.

கடவுளே மனிதனான கருத்தறிந்தோன் ஞானியாம்.

4.உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு.

5.ஆக்கத் துறையில் அறிவைச் செலுத்து, ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்.

இந்த உயர்ந்த சிந்தனைகள் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனத்தில் உதித்தவை.

எடுத்துக்காட்டுகள் :

1.மக்கள் பல சமயங்களில் உணர்ச்சியின் வெளிப்பாடாகத் திகழ்கிறார்கள். உணர்ச்சியை வெல்பவரே அறிஞராவார். எடுத்துக்காட்டு: அறிவால் உயர்ந்தவர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

2.உண்மையான உழைப்பினால் உலகத்துக்குப் பலன் கிடைக்கும். உழைப்பவரின் உடலும் உள்ளமும் வலிமை அடையும். எடுத்துக்காட்டு: அன்னை தெரசா. அவரின் உண்மையான உழைப்பை உலகம் போற்றியது.

3.பிறந்த நோக்கத்தை உணர்ந்து அதை வாழ்வில் செய்து காட்டுபவன் தியாகி என்று போற்றப்படுவான். கடவுளின் தன்மை மனிதனிடம் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துபவர் ஞானியாவார். எடுத்துக்காட்டு: ஆச்சார்யா வினோபா பாவே.

4.எளிமையான பொருத்தமான தூய உடை, இரக்க உள்ளம். மதிக்கத் தக்க வாழ்க்கை முறை ஆகியவையே நல்லவர்களின் பண்புகள். எடுத்துக்காட்டு: டாக்டர். இராதாகிருஷ்ணன்.

5.நல்லதை நினை. நல்லதைப் பேசு. நல்லதைச் செய். அது அனைவருக்கும் நன்மையைத் தரும். செய்ய முடிவதை மனத்தில் உறுதி கொண்டு நினை. நினைத்ததைச் செய். எடுத்துக்காட்டு: மகாத்மா காந்தியடிகள்.

No comments: