Wednesday, May 4, 2011

108-ன் மகிமை

■பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
■சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல் 108 மடங்கு, பூமிக்கும் சூரியனுக்கும் இடைய உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
■வேதத்தில் 108 உபநிடதங்கள், நடராஜரின் கரணங்கள் (Postures) 108, தாளங்கள் 108, அர்ச்சனையில் 108 நாமங்கள்.
■அரசமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை. பஞ்ச பூதத்தலங்கள் அறுபடை வீடுகள் என்பதுபோல் சைவ, வைணவ திவ்ய க்ஷேத்திரங்கள் 108.
■தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள். திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108.
■ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத்தூண்டுதல்களை நாம் (Temptations) வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
■மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்த மதம் கூறுகிறது.
■முக்திநாத் க்ஷேத்திரத்தில் 108 நீருற்றுக்கள், உத்தரகாண்டில் ஜோகேஸ்வர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள், உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
■குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது. மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
■108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
■நம் முன்னோர்கள் 10 வரும்படியாக அனைத்தையும் அமைத்துக் கொண்டனர். வித்தைகள் 18, புராணங்கள் 18, சபரிமலை படிக்கட்டுக்கள் 18, கீதை அத்தியாயங்கள் 18, ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு.
■ஜோதிடத்தின்படி நட்சத்திர பாதங்கள் 108. 12 வீடுகள், 9ராசிகள். 12x9=108.

No comments: