Tuesday, April 26, 2011

வள்ளலார் அறிவுரை

1.வள்ளலார் அறிவுரை

சன்மார்க்க அன்பர்களே ! நினைமின்கள் "நான் உரைக்கும் வார்த்தையெல்லா

நாயகன் தன் வார்த்தை நம்புமினோர் நம்மவர்களே நற்தருணமிதுவே, வான் உரைத்த்

மணிமன்றில் நடம்புரியும் எம்பெருமான் வர எதிர் கொண்டு அவனருளால் வரங்கள்

எல்லாம் பெறவே."
ஆதி அந்தம் இல்லாதோர் அம்பலத்தாடும் ஜோதி தன்னையே நினைமின்கள்,சுகம்

பெற விழைவீர், நீதி கொண்டுரைத்தேன், இது நீவீர் மேலேறும் வீதி, மற்றைய வீதிகள்

கீழ்ச்செல்லும் வீதி.
எட்டும் இரண்டும் அறியீர்

எப்படி கரையேறுவீர் நினைமின்கள்!

எட்டு என்ற அகாரமாகிய சந்திரனையும்.இரண்டு என்ற உலகமாகிய சூரியனையும்,

அறியாத மூடர்கள் சூரிய சந்திரனால் ஏற்படும் இன்பத்தை அறியவில்லை, சூரிய

சந்திரர் ஒன்றுபடுவதே பத்து எனப்பட்டதாகிய யகாரமாகும். அதாவது ஆறு

ஆதாரங்களும், (இரு மூன்று = ஆறு) நான்கு அந்தக்கரணங்களும் சேர்ந்ததே பத்தாகும்

(மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்) ஆகும்.
இப்பத்தாகிய யகார ஸ்தானத்தைக் குறிக்க ஆறு என்பது வழி. அது இங்கு

இறைவனை அடையும் வழியைக் குறிக்கும். அவ்விடத்தில் அந்தக்கரணங்களை

ஒன்று படுத்துதலே சித்தாந்த சன்மார்க்கமாகும் என்பது உணர்த்தப்படுகின்றது .
"எட்டும் இரண்டும் அறியாத என்னை

எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்."

------ திருமந்திரம்.

எட்டாகிய புரியட்டகாயமும் (சூக்கும சரீரம்) இரண்டாகிய ஆன்மாவும்,

பத்தாகிய பதியும் இது என்று அறியாதிருந்த எனக்கு எனது குருவாகிய நந்தி

தேவர் பக்குவத்தைச் சோதித்து எட்டும் வகையில். எட்டும், இரண்டும் ஆகிய

அப்பத்தை உபதேசம் மூலம் அவிழ்த்தருளினார். இதனை குருவருளால் அறிந்த

பின் அப்பத்தையும் நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பத்தே பதியாகிவிடும்.
(அ+உ=ய) இதுவே ஆன்மாவாகிய இலிங்கமாகும்.

1 comment:

Sivamjothi said...

Please read this book...
http://www.vallalyaar.com/?p=409