Saturday, April 9, 2011

நம் உடலில் ஒன்பது முக்கிய இயக்க மண்டலங்கள்.

நம் உடலில் ஒன்பது முக்கிய இயக்க மண்டலங்கள்.

எலும்புகளுடன் இயங்கும் நம் எலும்பு மண்டலம்.---Skeletal System.

+ நம் உடலின் எடையைக் கொண்டுள்ள கனத்த தசை மண்டலம். ---Muscular System.

+ மூளையிலிருந்து தொடங்கித் தண்டுவடம் வழியே உடலின் ஒவ்வொரு செல்லுடனும்

செய்தித் தொடர்பு வைத்திருக்கும் மத்திய நரம்பு மண்டலம்.---Central Nervous System.

+ வாயில் தொடங்கி கழிவுத் துளை வரை செல்லும் நீண்ட

உணவுப் பாதை மண்டலம்.---Digestive System.

+ மூக்குத் துளையில் தொடங்கி நுரையிரல் வரை செல்லும்

மூச்சுப் பாதை மண்டலம்.---Respiratory System.

+ இதயத்தில் தொடங்கி உடல் முழுதும் சுற்றி இதயத்திலேயே முடியும்

குருதி ஓட்ட மண்டலம்.---Blood Circulation System.

+ நீர்க்கழிவை வெளியேற்றும் தோல், சிறுநீரகம் உள்ளிட்ட கழிவு

வெளியேற்ற மண்டலம்.---Excretory System.

+ சூழ்நிலைகளுக்கும் பருவ மாறுதல்களுக்கும் ஏற்ப, ஒவ்வொரு நொடியும், நம் ஒவ்வொரு உறுப்பையும் கண்காணிப்பில் வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பி மண்டலம்.---Glands System.

+ நம் ஏழு தலைமுறை வரலாற்றை அடக்கி வைத்து, புதிய தலைமுறையைப்

பற்றித் தீர்மானித்து வடிவமைக்கும் இனப்பெருக்க மண்டலம்.---Reproductive System.

நன்றி, திருக்குறள். இரா. கனகசுப்புரத்தினம். வாழ்க வளமுடன்.

No comments: