ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: காரத்தினால் ஏற்படும் அவஸ்தைகள்!
எனக்கு வயது 67. நீண்டகாலமாக மூலம் தொந்தரவு. காரம் சேர்க்காமல் இருந்தால் அதிகமான தொந்தரவு இல்லை. ஆனால் சிறிய அளவு காரம் சேர்த்துவிட்டால் கூட ஆசனவாய் வீக்கம், ஊறல், ஈரம் படுதல் அதிகமாக ஏற்படுகிறது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேதம் கூறும் வழிகள் எவை?
ராமசாமி, ராஜபாளையம்.
வாயு மற்றும் நெருப்பை ஆதிக்க பூதங்களாக்கி, காரம் எனும் சுவை பொருட்களில் ஏற்படுகிறது. இதன் சேர்க்கையானது, உணவின் மூலமாக உள்ளே குடலில் சேரும்போது, தோஷ தாதுக்களைச் சுரண்டிக் கரைக்கும் தன்மையுடையதாக இருக்கிறது. ஆசனவாயில் ஏற்பட்டுள்ள முடிச்சு போன்ற மூல முளைகளினுள்ளே இருக்கக் கூடிய கட்டுகளை விடுவிக்கிறது. ஆசன வாயின் துவாரத்தை விரித்து விடுகிறது. இவை அனைத்தும் நடப்பதற்கு அதன் உஷ்ணமான வீர்யம் உதவுகிறது. இப்படியெல்லாம் செய்து, மூல முளைகளை அழிப்பதற்கான ஒரு முயற்சியை அது செய்கிறது என்றும் நாம் ஏன் நினைக்கக் கூடாது? ஆனாலும் வீக்கமும், ஊறலும் உறுத்தலாக இருப்பது மிகவும் கஷ்டமே. ஈரம்படுவதன் அதன் (மூல) முளைகள் உடைவதற்கான ஒரு நல்ல லட்சணமாகக் கொண்டு , அதைப் பெரும் பிரச்னையாகக் கொள்ள முடியாது. ஏனெனில் காரம் எனும் சுவைக்குப் புண்களை ஆற்றக் கூடிய திறனும் இருக்கிறது.
காரத்துக்கு நேர் எதிரான குணாதிசயங்களைக் கொண்டது இனிப்புச் சுவையாகும். நிலம் மற்றும் நீரின் ஆதிக்கப் பூதங்களால் உருவான இனிப்பு, வாயு மற்றும் நெருப்புக்கு நேர் எதிராக இருப்பது இயற்கைதான். ஆனால் உங்களுக்கு எந்த அளவு இந்த இனிப்புச் சுவை சேர்ந்த மருந்துகள் பயன்படும் எனத் தெரியவில்லை. காரணம், இனிப்புச் சுவையை மருந்தாகச் சாப்பிடுபவருக்கு, வயிற்றிலுள்ள பசித்தீயின் தன்மை, அதை செரிக்கக் கூடிய கால அளவு, குடலின் தன்மை போன்றவை நன்றாக ஊகித்து அறிந்த பிறகே, கொடுக்க முடியும். மேலும் மூல முளைகளுக்கு இனிப்புச் சுவையான மருந்துகள் பொதுவாக அனுகூலமானவகையாக இருப்பதில்லை. அதனால் உங்களுடைய விஷயத்தில் அறிந்து கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன.
பெüத்திரம் எனும் துளை ஏற்படுத்திச் செல்லும் உபாதை உங்களுக்கு மூல முளைகள் வழியாக ஏற்பட்டுள்ளதோ என்ற ஒரு சந்தேகம் தோன்றுகிறது. அதற்குக் காரணம், ஆசன வாய் வீக்கம், ஊறல், ஈரம்படுதல் போன்றவை, காரத்தின் வழியாக ஏற்படுகிறது என்றால், அந்தச் சுவை எந்த இடத்தில் தோஷத்தை நீர்க்கச் செய்கிறது? என்று யோசிக்கத் தோன்றுகிறது. காரத்தினுள்ளே அடங்கியுள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை உருக்கினால், அவை அதன் வழியாக ஆசன வாயைச் சென்றடைந்து நீங்கள் குறிப்பிடும் உபாதைகளைத் தோற்றுவிக்கலாம்.
அதனால் நீங்கள் உடனடியாக மூலமுளைகள் எந்தப் பகுதியில் உள்ளன. அவற்றின் வேர்கள் எங்கெல்லாம் செல்கின்றன. பெüத்திரம் வந்துள்ளதா? போன்றவற்றை அறியும் நவீன கருவிகளின் வழியாகத் தெரிந்து கொண்டு, அதன்பிறகு சிகிச்சை மேற்கொள்வதே நலம் என்பதால், நோயின் தன்மையை நன்றாக அறிந்து கொண்டு மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும். அதுவரை ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய அபயாரிஷ்டம், சுமார் 6 ஸ்பூன் (30 மி.லி.) காலை இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வரவும். திரிபலா எனும் சூரணத்தைச் சுமார் 15 கிராம் அளவில் எடுத்து, 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, குளிர்ந்த பிறகு, வடிகட்டி, ஆசன வாயை, மலம் கழித்த பிறகு கழுவுவதற்காகப் பயன்படுத்தி வரவும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி
ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
Wednesday, September 21, 2011
Monday, September 19, 2011
பற்று
பற்று என்பது சாதி, மத, சமய, இனப்பற்றை மட்டும் குறிக்காது. அகப்பற்றும் நீங்க வேண்டும், அகப்பற்று நீங்கினாலொழிய அருள்ஜோதியை க்காணமுடியாது.
சுத்த சன்மார்க்கி என்பது அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமே தவிர அகங்காரத்தின் வெளிப்பாடாக அமையக் கூடாது.
பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து எனது அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
-அகவல்
எல்லாம் வல்ல ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் பாதம் சரணம். ஐயா! நீங்கள் நிறுவிய சுத்த சன்மார்க்க சங்கத்தின் அருமையையும், அதனால் ஏற்படும் பலன்களையும் இப்பிறப்பில் தெரிந்துக்கொண்டோம். சுத்த சன்மார்க்கம் எல்லா மதங்களுக்கும், சமயங்களுக்கும் பொது என்பதையும் உங்களுடைய பாடல்கள் மூலமும், உங்கள் வழிகாட்டுதலின் மூலமும் அறிந்துக்கொண்டோம்.
பற்று அனைத்தையும் தவிர்த்தால் அருட்பெருஞ்ஜோதியை உணர முடியும், இங்கு பற்று என்பது சாதி, மத, சமய, இனப்பற்று மற்றும் அகப்பற்றையும் குறிக்கும் என்பதையும், இத்தகையப் பற்றை முற்றிலுமாக நீக்கினால் மட்டுமே ஆன்ம நேய ஒருமைப்பாட்டை முழுவதுமாக உணர முடியும் என்பதையும் உங்கள் மூலம் அறியப்பெற்றோம். எனவே அகப்பற்றை முற்றிலுமாக நீக்கி புறப்பற்றாக எல்லா உயிரிடத்தும் அன்புச் செய்வதையே இறை வழிபாடு என்பதையும் தெரிந்துக்கொண்டோம்.
எல்லா உயிர்களும் மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டும், எல்லா உயிர்களும் சுத்த சன்மார்க்கத்தை நாட வேண்டும், சுத்த சன்மார்க்கம் ஒன்றே நன்மார்க்கம், மற்ற மார்க்கங்கள் எல்லாம் புன்மார்க்கமாகி எல்லாம் வல்ல பரம்பொருளைக் காணாது திகைக்க, சுத்த சிவத்தை சன்மார்க்கம் ஒன்றே விளங்கச் செய்கிறது என்பதையும் இதுவரை சுத்த சன்மார்க்கத்தை அறியாது செத்தவர்கள் எல்லாம் இப்பொழுது அதனை அறிந்து உலகில் திரிந்து மகிழ்ந்திருப்பார்கள் என்பதையும் உணருகிறோம்.
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மை உறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்திருப்பார்
திருவருட் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே.
நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் என்ற வாக்கிற்கிணங்க சமயாதீதம் மூலம் அனைத்து மக்களும் சன்மார்க்கத்தை நோக்கி வருவதையும் பார்க்கிறோம். இன்று பல மதங்களை சார்ந்தவர்கள், பல மார்க்கங்களை சார்ந்தவர்கள் எல்லாம் சன்மார்க்க வழியே சிறந்த வழி என்று உணர்ந்து அவர்களும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை –ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.
சுவாமி, நீங்கள் எல்லாவற்றையும் செய்து வருகிற நேரத்தில் எங்களுடைய ஆணவம், கன்மம், மாயை, திரோதனம், மாயையேம் போன்ற மல குணங்கள் உங்களை அறிய விடாது மறைத்துவிடுமோ என்ற பயமும் வருகிறது.
சும்மாயிருக்கும் சுகத்தை தவிர வேறு எதை செய்தாலும் ஆணவம் மேலிடும் என்பதை எங்களால் உணர முடிகிறது. உதாரணத்திற்கு
•வள்ளலார் பற்றிய கட்டுரை எழுதுகிறேன், வள்ளல் பெருமானை என்னைப்போல் வேறு யாவரும் எடுத்து வியம்ப முடியாது என்று கூறினால் அதுவும் ஒர் ஆணவச் செயல்.
•வள்ளலாரை நான் மட்டுமே சரியாக புரிந்துக்கொண்டுள்ளேன் என்று வெளியில் கூறினாலும் அதிலும் ஒர் ஆணவம் இருக்கின்றது.
•வள்ளலார் எழுதிய திருவருட்பாவிற்கு இதுவே சரியான விளக்கம் என்று கூறினாலும் ஆணவம் தென்படுகிறது.
•வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தை வேறு எவரும் இது வரை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை, யாமே மிக சரியாக புரிந்துள்ளோம் என்று கூறும் போது புகழ் ஆசை வருகிறது.
•திருவருட்பாவை படி, படிக்காதே என்று கூறினாலும் ஆணவம் வருகிறது.
•திருவருட்பாவை உலக அளவில் எடுத்து வியம்பி வள்ளலாருக்கு பெருமைச் சேர்க்கப்போகிறேன் என்று கூறினாலும் ஆணவம் வருகிறது.
•நான் ஒரு சுத்த சன்மார்க்கி என்று வெளியில் பிரகனப்படுத்தினாலும் அதுவும் ஒர் ஆணவச் செயலே.
வெட்ட வெளிதனை மெய்யென்றிருப்போர்க்கு
பட்டயமெதுக்கெடி குதம்பாய்- பட்டயமெதுக்கடி
- என்று குதம்பை சித்தர் கூறுவது போல் எவ்வித பட்டயமும் இல்லாமல் சுத்த சன்மார்க்கி என்பதை அன்பின் வெளிப்பாடாகக் கொண்டு உலகியியல் வாழ்வைத் தொடர்ந்தால் ஞானம் கிட்டும்.
ஆனால் இன்று சுத்த சன்மார்க்கி என்று கூறுபவர்கள் கூட அகங்காரத்தின் பிடியில் இருக்கின்றனர். அவர்களால் ஆணவ மாயையிலிருந்து தப்பிக்க முடிவதில்லை. பெரும்பாலான அன்பர்கள் தாங்கள் தான் திருவருட்பாவை –வள்ளல் பெருமானை உலகிற்கு விஞ்ஞானரீதியில் தெரியப்படுத்துகிறோம் என்று தற்பெருமை கொள்கிறார்கள். இதுவும் ஒரு மாயையே.
எனவே இவர்கள் இத்தகைய மாயையின் பிடியில் இருந்து தப்பிக்க அவர்களால் எதுவும் நடக்கவில்லை, எல்லாம் வல்ல சிதம்பரம் ராமலிங்கத்தின் ஞானதேக வெளிப்பாட்டின் மூலமே அனைத்தும் நடைபெறுகிறது என்பதை சத்தியமாக உணர வேண்டுமாம். மேலும் மண்ணுலகத்தில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதை இறைவழிபாடாகக்கொண்டு வேறு எதனையும் நினைக்காமல் வாழும் பொழுது ஒருமை தானாக உணர்த்தப்படுகிறதாம். ஒருமையை உணராமல், வேறு எந்தவிதமான நடவடிக்கையின் மூலமும் ஆன்ம லாபத்தை அடைய முடியாதாம்.
ஆன்மலாபத்தை கட்டுரை எழுதுவதன் மூலம் பெற முடியாது. திருவருட்பாவை உலக அரங்கில் விளம்பரம் செய்வதன் மூலமும் கிடைக்காது. வள்ளல் பெருமானை உயர்த்தி மற்ற மார்க்கங்களை தாழ்த்தி பேசுவதன் மூலமும் கிடைக்காது. உயிர் இரக்கம் மூலமே ஆன்ம லாபத்தைப் பெற முடியுமாம்.
உயிர் இரக்கம்- கருணை இயற்கையில் எங்கே உள்ளதோ, அங்கே வள்ளல் பெருமானின் ஞானதேக வெளிப்பாட்டை உணர முடியுமாம். எனவே அகப்பற்றை நீக்கி, உயிர் இரக்கம் என்ற புறப்பற்றுக்கொண்டு எல்லாம் உயிர்களும் இன்புற்றிருக்கச் செய்வோமாக! இந்த பற்று மட்டுமே அருட்பெருஞ்ஜோதி இறைவனை- ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமியை உணர்வு ரீதியாக தொடர்புக்கொள்ள உதவும்.
பற்று என்பது சாதி, மத, சமய மற்றும் இனப்பற்றை மட்டும் குறிக்காது. அகப்பற்றும் நீங்க வேண்டும், அகப்பற்று நீங்கினாலொழிய அருள்ஜோதியை காணமுடியாது.

அற்புதங்கள்-சித்துகள்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
அற்புதங்கள்-சித்துகள்
சன்மார்க்கம் என்றாலே சிலர் வள்ளலார் போல் அற்புதங்கள் செய்ய முடியுமா என்றும் சன்மார்க்கம் மற்ற மார்க்கங்களை விட எவ்வாறு சிறந்தது என்றும் கேள்வி கணைகளை தொடுக்கின்றனர்.
வாழையடி வாழை என்ற திருக்கூட்டத்தால் மட்டுமே அற்புதங்களை செய்ய முடியும் என்றும் நாமெல்லாம் அற்ப மானிடர்கள் என்று கூறுவோரும் உண்டு. மானிட பிறவியால் மட்டுமே பிற உயிரினங்களுக்கு தொண்டு செய்து இறையை அடைய முடியும். அதற்கு இப்பிறவி தேவை. எனவே நாமெல்லாம் மனித பிறவி அந்த தனிப்பெருங்கருணையால் எடுத்துள்ளோம். இதற்கு காரணம் பிற உயிரினங்களுக்கு தொண்டு செய்வதே.
வாழையடி வாழை திருக்கூட்டத்தில் நாமும் பங்கு பெற விரும்பினால் அதற்கான தக்க முயற்சியில் இறங்க வேண்டும்.அதற்கு நெற்றிக் கண் திறக்கப் பட வேண்டும்.
நெற்றிக்கண் கருணை குணத்தால்-தயவால் –அன்பால் திறப்பதாம். ஜீவகாருண்ய ஒழுக்கம் மூலம் கருணை அதிகமாக, அதிகமாக இறைவன் வேறு நாம் வேறல்ல என்ற நிலை உண்டாகி அதில் இறையனுபவம் உண்டாகும். அதில் சாதி சமய மார்க்க வேறுபாடு இருக்காது. அதுவே உயர்ந்த நிலை- இறையை காணும் நிலை. இதனை வள்ளலார்:
ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே!
மேலும் எல்லா உயிர்களிடத்தும் இறைவனை பார்க்க வேண்டும் என்ற உண்மையை உணர்த்தவே கருணை-தயவு-அன்பு என்ற மகா மந்திரத்தை குரு மூலம் உணர்த்தப் பட வேண்டும் என்றார். ஆனால் பலர் அதுவே தங்களுக்கு சாதகமாக்கி வியாபாரமாக்கி நெற்றிக்கண்ணை தீட்சை மூலம் மட்டுமே திறக்க முடியும் என்று பறைசாற்றுகின்றனர்.
தீட்சை பெற்று தனியாக ஒரு அறையில் உட்காருந்து தியானம் செய்து யாருக்கும் தன்னை பயனளிக்காமல் இறையை உணர செய்வதை விட சகஜ மார்க்கம் எளிய வழி என்று வள்ளலார் கூறுகிறார். அதனால் தான் வள்ளலார்;
கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவ தரிதென உணர்ந்தோர்
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே!
இறைவனின் பெருமையை உணர்ந்து உயிர்க்குலத்துக்குப் பணி செய்து வருவதன்( ஜீவ காருண்யம் ) மூலமாகத்தான் இறைவனின் அருளைப் பெற முடியும்.
மற்ற எல்லா வழியை விட இதுவே உயர்ந்த மார்க்கம் –சகஜ மார்க்கம் என்று வள்ளலார் கூறுவதால் எவ்வுயிரையும் தன்னுயிராக பார்க்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எவ்வுயிரையும் தன்னுயிராக பார்க்கும் பக்குவமே சிறந்த பக்குவம் அவர்களே பக்குவிகள் அவர்களே நெற்றிக் கண் திறக்கப்பெற்றவர்கள் என்பதை சத்தியமாக உணர்ந்து பிற உயிர்களை துன்புறுத்தாமல் காத்தல் வேண்டும்.
பிற உயிர்களின் துன்பங்களை உணராதவன் இறையை உணர முடியாது.
எனவே திருவருட்பாவை படித்தால் போதும், வள்ளலாரை வணங்கினால் போதும் என்று நினைக்காமல் வள்ளலார் கூறிய கருத்துகளை பின்பற்ற அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அவர் கூறிய கருத்துகளை கடைப்பிடித்தால் பரம்பொருளை இப்பிறவியில் நிச்சயம் உணர முடியும்.
வள்ளலார் வழியை பின்பற்றினால் ஏதாவது அற்புதம் நிகழுமா? என்று பலர் கேள்வி கேட்கிறார்கள்.
அற்புதங்களை சித்துகள் செய்து மட்டுமே காண்பிக்க வேண்டாம், கீழ் வருவன கூட ஒரு சித்துகளே- அற்புதங்களே!
1. சாதி மத வேறுபாடு இல்லாமை
2. ஏழை எளியவருக்கு தன்னால் முடிந்த உதவி செய்தல்
3. எல்லா உயிர்களையும் துன்புறும் காலத்தில் எந்த ஒரு உபாயத்திலாவது காத்தல்,
4. ஜோதி ரூபமாக இறைவனை வணங்குதல்
5. பசிப் பிணி நீக்குதல்
6. சிறு தெய்வ வழிபாட்டில் உயிர் பலி நீக்குதல்
7. புலால் உண்ணாமை
8. எதிலும் பொது நோக்கம்
9. இறந்தவர்களை அடக்கம் செய்வித்தல்
இதெல்லாம் வள்ளலார் கூறிய கொள்கைகள்போல் அல்லவா இருக்கிறது என்று எண்ணத்தூண்டுகிறது தானே! ஆம் இதெல்லாம் கொள்கைகள் மட்டும் இல்லை அற்புதங்களேயாகும்*.
*உங்களால் செய்ய முடிந்தால்!

பசித்திரு, தனித்திரு விழித்திரு
பசித்திரு, தனித்திரு விழித்திரு
பசித்திரு, தனித்திரு விழித்திரு என்னும் தாரக மந்திரத்தை வடலூர் வள்ளற்பிரானாகிய இராமலிங்க அடிகள் முதன் முதலில் மக்களுக்குபோதித்தார். அதன் பின்னர்தான் அருளார்கள் பலரும் இதனை எடுத்தியம்பமுற்பட்டனர்.
ஆன்மீக நாட்டம் கொண்டோர் அதாவது இறைவனது திருவடிகளைப் பற்றி கொள்ள வேண்டும். தனித்திருக்க வேண்டும். விழித்திருக்கவேண்டும் எனப் பொருள் கூறப்பெறுகிறது. இவ்வாறு பசித்து, தனித்து , விழித்து இருந்தால் ஆன்ம தரிசனம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.அதனால் தான் பசித்திரு, விழித்திரு, தனித்திரு எனும் சொற்களுக்குரிய உண்மைப் பொருளை போதித்தார்.
பசித்திரு என்பது பட்டினி கிடப்பது அன்று. வயிற்றைக் காயப்போடுதல் மிகச்சிறந்த மருந்தாகும் என்பார்கள் சித்த வைத்திய, ஆயுர்வேதமருத்துவர்கள்.
இல்லாமையினால் பட்டினி கிடப்பதற்கும் - எல்லாமிருந்து உண்ணாமல் நோன்பு நோற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இது உடலைப் பொருத்த விஷயமன்று. உணர்வைப் பொருத்தது. மனதின் ஆளுமையில் அடங்குவது. எண்ணங்களின் தொகுதிதான் மனம். ஏதும் இல்லாமையினால் பட்டினி கிடப்பது இறப்பிற்கு சமமாகும். எல்லாம் இருந்தும் புலன் அடக்க, உணர்ச்சி அடங்கி, உணர்வு விழித்து உயிர் தழைக்க இருக்கும் நோன்பிற்கு [விரதம்] என்பதே உண்ணா நோன்பு. இதுவே பசித்து இருத்தல்.இவ்வாறு இருத்தல் உடலுக்கு நல்லது. ஊனுடம்பு ஆலயம், உடல் நலமானால் உள்ளம் வளமாகும். உள்ளம் வளமானால் உயிர் தளிர்க்கும். பசித்திருத்தல் உடல் தொடர்புடையது.
இந்நிலையில் உடலுக்கு நன்மை பயக்கும். மிதமான உணவே நீண்ட ஆயுளுக்கும், நோயற்ற வாழ்வுக்கும் வழியாகும்.
நாள் தோறும் ஒருவர் பசித்திருந்து - பசித்திருப்பது அறமாகிய உண்ணா நோன்பினை ஒருவர் மேற்கொண்டால் உடல் நிலை என்னவாகும்?விரைவில் இந்த உடல் அழிந்து இறந்து விடுவார். இவ்வாறு உடல் அழிந்துவிடும் ஒன்றையா ஆன்றோர்களும், சித்தர்பெரியோர்களும்சொல்லியிருப்பார்கள்.
குரு இட்டும், தொட்டும், சுட்டிக்காட்டாத வித்தை கைவசம் ஆகாது என்பார்கள்.குரு வழி செவிச் செல்வத்தைப் பெறாதவர்கள் ஆன்மீகத்தில்அதன் எல்லையை அடையமுடியாது. குரு தயவின்றி நடுக்கண் புருவப்பூட்டுத் திறக்காது. எனவே குருவே சிவம். மெய்வழிச் செல்லும் மெய்க்குரு முன்னிலையில் சீடன் பதித்திருக்கவேண்டும். ஏனெனில் குரு ஞானச் செல்வத்தை வாரி வழங்கும்போது அதனைச் செவி வாயாக,
நெஞ்சில் கொள்ளுவதற்கு உடல் பசித்திருக்க வேண்டும்.
பசித்திருந்து ஞானத்தைக் கேட்க வேண்டும்.உடல் தளர்ச்சியுறாமல் இருக்க அரை வயிறு உண்டால் போதும். அபோதுதான் புலன்கள் விழிப்போடு ஒருமைப்பட்ட மனத்தோடும்,ஞானச் செல்வத்தைச் செவிமடுக்கும். எனவே பசித்திருத்தல் என்பது இல்லாமையினால்
பட்டினி கிடப்பது அன்று. சில குறிக்கோள்களை முன்வைத்து உண்ணா நோன்பு இருத்தலும்அன்று.
ஞானச் செல்வத்தைச் செவிவழி அருந்திட ஞானப்பசி மூதுர உடல் பசி மறந்து வாய்மூடி இரு செவி திறந்து கேட்டிருக்கும் நிலையேபசித்திருத்தல். குருவின் உபதேசத்தால் மெய்யாகிய அறிவைக் காட்டித் தருகிற போது இதுவரை மன அறிவால் படித்தவை,
கேட்டவை, உணர்ந்தவை அனைத்தும் மெய்யைக் காண, அறிய, உணரத்தடையாகஅமையும். எனவே யதார்த்த உள்ளத்தோடு செவி மூலமாக ஞானத்தைப் பருக, கேட்க வேண்டும்.
பசித்திருக்கும் ஞானப் பசியும் இதுவேயாகும்.

தத்துவநிலை-96
தத்துவநிலை-96
தத்துவா தீதத் தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு வம்பலத்து அருட்பெருஞ்ஜோதி
தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும்
அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித் தனித் திரையால்
அத்திற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி -அகவல்
தத்துவங்கள் அனைத்தையும் கடந்து, தத்துவங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறச் சிவநிலையில் ’தான்’ என்ற நிலையும் கரைந்து அம்பலத்தே விளங்கும் அருட்பெருஞ்ஜோதி என்றும் தத்துவ சேட்டைகளைக் கடந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காண இயலும் என்பதையும், அந்த தத்துவச் சேட்டைகள் ஒவ்வொரு திரையாக இருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணரவிடாமல் தடுக்கிறது என்றும் இவையனைத்தையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னுடைய அருள் வல்லபத்தால் செய்கிறார் என்றும் பொருள் விளங்கும் அகவல் வரிகள் இவை.
திருமந்திரமும் இதனை:
“ஆகின்ற தொண்ணூறோ டாறும் பொதுவென்பர்
ஆகின்ற வாறா றருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே.”
முப்பது முப்பது முப்பதறுவருஞ் செப்ப
மதிளுடை கோவிலுள் வாழ்பவர் செப்பு
மதிளுடைக் கோவிற் சிதைந்தபின்
ஒப்ப வனைவரு மோட்டெடுத்தாரே --திரு மந்திரம்
எனவே இந்த தொண்ணூற்றாறு தத்துவங்கள் என்ன? என்பதை இப்பொழுது காண்போம்.
தத்துவங்கள் 36ல் ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவதத்துவம் 5.
இவற்றின் மற்ற உட்பிரிவு 60 ஆக மொத்தம்:96
இவற்றை விரிவாக காண்போம்.
சிவ தத்துவம்( சுத்த மாயை): நாதம், விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை , ஆக 5
வித்யா தத்துவம் ( அசுத்த மாயை): மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் ஆக 7
ஆன்மதத்துவம் - பஞ்ச பூதம் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, பிராணாதி வாயுக்கள் 5, அந்த கரணங்கள் 4. ஆக மொத்தம்: 24
1. பஞ்ச பூதம் 5
1. மண் 2. நீர் 3. தீ 4. காற்று 5. ஆகாயம்
2. தன்மாத்திரை -5
1. ச்ப்தம் 2. ஸ்பரிசம் 3. ரூபம் 4. ரசம் 5. கந்தம்
3. கன்மேந்திரியம்- 5
1. வாக்கு 2. பாதம் 3. கை 4. எருவாய் 5. கருவாய்
4. ஞானேந்திரியம் -5
1. செவி 2. கண் 3. மூக்கு 4. நாக்கு 5. மெய்
5. அந்தக்கரணம் -4
1. மனம் 2. அகங்காரம் 3. புத்தி 4. சித்தம்
6. வித்தியா தத்துவம் -7
1. புருடன் 2. அராகம் 3. வித்தை 4. கலை 5. நியதி 6. காலம் 7. மாயை
இவற்றில்: காலம்: சென்றது, நடப்பது, வருவது
நியதி : அவரவர் வினையை அவரவர்களை அநுபவிப்பது
கலை: ஆன்மாவின் ஆணவத்தை சிறிது அகற்றும், கிரியை எழுப்பும்
அராகம்: ஆசையை எழுப்பும்
புருடன்: விஷயங்களில் மயங்கும்
7. சிவதத்துவம் -5
1. சுத்தவித்தை 2. ஈச்சுரம் 3. சாதாக்கியம் 4. விந்து 5. நாதம்
புறக்கருவிகள் 60- ல்
1. பிருதிவியின் காரியம் 1. மயிர் 2. தோல் 3. எலும்பு 4. நரம்பு 5. தசை
2. அப்புவின் காரியம் 1. நீர் 2. உதிரம் 3. மூளை 4. மச்சை 5. சுக்கிலம்
3. தேயுவின் காரியம் 1. ஆகாரம் 2. நித்திரை 3. பயம் 4. மைதுனம் 5. சோம்பல்
4. வாயுவின் காரியம் 1. ஓடல் 2. இருத்தல் 3. நடத்தல் 4. கிடத்தல் 5. தத்தல்
5. ஆகாயத்தின் காரியம் 1. குரோதம் 2. லோபம் 3. மோகம் 4. மதம் 5. மாற்சரியம்
6. வசனாதி -5
1. வசனம் 2. கமனம் 3. தானம் 4. விசர்க்கம் 5. ஆனந்தம்
7. வாயு -10
1. பிராணன் 2. அபானன் 3. வியானன் 4. உதானன் 5. சமானன் 6. நாகன் 7. கூர்மன் 8. கிருதரன் 9. தேவதத்தன் 10. தனஞ்சயன்
(உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்பன. இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்பர். வாயு எனபது நம்முடலில் ஓடும் சீவக்காற்று. இதுவே, வாசி, காலெனப் பலப் பெயர்களில் கூறப்பட்டுள்ளன. வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்). புறத்தே சில உடலுறுப்புக்கள் வலுவிழப்பதற்குமதுவே காரணம். உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று. இவை 5ம் பிரதான வாயுக்கள். மற்றவை உபவாயுக்கள். 1.பிராணவாயு: இது இரு உதய தானத்திலிருந்து நாசிவழி மேலெழுந்து செல்லுவது. பசி, தாகங்களையுண்டுபண்ணி, உணவைச் சீரணிக்கும் சக்தியுடையது. இதை இரேசகமென்பர். 2.மலக்காற்று:இது இன்பச் சுரப்பிகளையும், குத, குய்யம் ஆகியவைகளிலும் பூரக சஞ்சாரம் செய்து, அவ்வுறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்ய உதவுவது. 3.தொழில்காற்று: இது உடலின் எல்லா பாகங்களிலும் விரவிநின்று உணர்வுகளை உட்கிரகிக்கும். உண்ட உணவைச் சக்கை, சாறாய்ப் பிரித்துத்தரும். 4.ஒலிக்காற்று: இது உதராக்கினியை எழுப்பிக் கண்டமாகிய கழுத்துள்ளிருந்து, உணவை உண்ணவும், அதன் சாரங்களை நாடிகளுக்கு அனுப்பவும் செய்கிறது. 5.நிரவுக்காற்று: இது நாபியிலிருந்து கொண்டு உண்ட உணவின் சாரத்தை பங்கிட்டு எல்லா உறுப்புகளுக்கு அளித்து உடலை வளர்க்கும். இவ்வாறே மற்றவையும். ஆயினும், இவ்வாயு எங்கிருந்து வருகிறது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கருப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுது, வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் இல்லை. அது மாமிச பிண்டம். ஆனால், கருப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது. ஆனால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையைவிட்டு வெளியே வந்தவுடனே, சடாரென ஒரு எல்லையிலிருந்து(மருமம்) பிச்சு அடிக்கும் ஆவி தான் சுவாசம். இதுவே மூல வாயு. கூர்மன்தான் இமைக்காற்று. இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும். மயிர்க்கூச்சல், சிரிப்பு, புளகம், முகச் சேட்டைகள் ஆகியவைகளைச் செய்யும். இதை அடக்க இமையா நாட்டம் கிடைக்கும்).
8. நாடி -10
1. இடை 2. பிங்கலை 3. சுழுமுனை 4. காந்தாரி 5. அத்தி 6. சிங்குவை 7. அலம்புடை 8. புருடன் 9. சங்கினி 10. குகு
( நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழுமுனை தெரியும். காந்தாரி – இடக்கண் நரம்பு (இதில் ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இருநரம்புகள் கூடுகின்றன என்பர்) அத்தி – வலது காது நரம்பு சிகுவை – உள்நாக்கு நரம்பு. அலம்புடை – இடது காது நாடி (அலம்புஷா, பூஷா என்னும் நாடிகளின் சேர்க்கையென்பர்) புருடன் – வலக்கண் நரம்பு. சங்கினி – மருமத்தான நாடி குகு – மலவாய் நாடி (குகு நாடியும் சிநீவாலி நாடியும் இரக்தவியானன் நாடியும் சேர்ந்திருக்கும் என்பர்)
9. வாக்கு -4
1. சூக்குமை -சொல் தோன்றாது ஒலி மட்டுமாய் உள்ளது 2. பைசந்தி -சொல் விளங்கியும் விளங்காமலுமாய் நிற்பது 3. மத்திமை -உதானன் என்ற வாயுவால் பொருள் விளங்க உருவாகும் மொழி நிலை 4. வைகரி -சொல் புறத்தே தன் செவிக்கு மட்டும் கேட்கும் நிலை
இடைக்காடர் இதனை:
வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே
நுவலுமற்ற ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே (தாந்) ..
10. ஏடணை ( விருப்பம்) -3
1. தாரவேடணை 2. புத்திர வேடணை 3. அர்த்தவேடணை
11. குணம் -3
1. சாத்துவீகம் 2. இராசதம் 3. தாமதம்
*************
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
கட்டுரை ஆக்கம்:
D. சத்தியமூர்த்தி , மடிப்பாக்கம், சென்னை. cell: +91 9710615260

Wednesday, September 14, 2011
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - உடல் அரிப்பு
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனக்கு வயது 33. நான்கு ஆண்டுகளாக உடல் முழுவதும் அரிப்புடன் கூடிய சிவந்த தடிப்புகள் ஏற்படுகின்றன. மதியம் 3 மணிக்கு மேல் அரிப்பு அதிகமாகி, இரவு முழுவதும் தாங்க முடியாத அளவு இருக்கும். காலையில் குளித்தவுடன் படிப்படியாகக் குறைந்துவிடும். அரிப்பு வரும்போது முகம், உதடுகள் வீங்கி, மிகவும் அருவருப்பாக விகாரமாக மாறிவிடுகின்றன. உடல் கொதிக்கிறது. அதிகமாக வெள்ளைப்படுதலும் ஏற்படுகிறது. உடல் அபரிமிதமாகப் பெருத்துவிட்டது. இந்த உபாதை மாற வழி என்ன?
வாசகி, திண்டுக்கல்.
முருங்கை மரத்திலுள்ள கம்பளிப் பூச்சி உடலில் பட்டுவிட்டாலோ, அவரைச் செடியிலுள்ள பூச்சி, வீட்டிலுள்ள கரப்பான், பல்லி போன்றவை கழியும் மலம், சிறுநீர், எச்சில் சுவரில் இருக்கும் நிலையில் வெற்றுடம்புடன் அதில் சாய்ந்து அமர்ந்தாலோ, துவைத்துக் காயப் போட்ட ஆடைகளின் மேல் இப்பூச்சிகள் ஊர்ந்து, சுணையையோ, மலம் சிறுநீர் ஆகிவற்றைக் கழிந்த நிலையில் அந்த ஆடைகளை அணிந்து கொண்டாலோ உடலில் விஷம் தொற்றிக் கொண்டு, நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தோன்றக் கூடும். இவை வெளிப்புறக் காரணங்களுக்கான பல வகைகளில் ஒரு சில காரணங்களாகக் கொள்ளலாம்.
வயிற்றில் பழைய மலத் தேக்கம், புளித்த கெட்டியான தயிரை வடையுடன் சாப்பிடுதல், சூடு ஆறிப்போன புளியோதரைச் சாதம், கெட்டுப் போன மாங்காய் ஊறுகாய், மீன், கருவாடு, சிக்கன், மட்டன் வகையறா அதிகம் சாப்பிடுதல், முன் உண்ட உணவு செரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த உணவை வயிற்றினுள்ளே தள்ளுவது போன்ற சில தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் கப, பித்த தோஷங்கள் சீற்றமுற்று, இரத்தத்தில் கலந்து அதனையும் கெடுத்து, தோலில் தடிப்பையும் அரிப்பையும் ஏற்படுத்தலாம். அவற்றின் சீற்றத்திலிருந்து வெளிக் கிளம்பும் சில கழிவுப் பொருட்கள் சரிவர உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் உள்ளேயே தங்கும்போது, அரிப்பும் தடிப்பும் தாங்க முடியாத அளவில் ஏற்படும்.
தோலின் அடியில் தங்கும் இந்தக் கழிவுப் பொருட்கள், மதியம் 3 மணி அளவில் பித்தத்திற்கு அனுகூலமான காலத்தின் தன்மையால் எழுச்சியுற்று தம்முடைய வேலையைச் செய்கின்றன. ஆக, உங்களுடைய விஷயத்தில் அந்தக் கழிவுப் பொருட்களை வெளியேற்ற வேண்டும். அவை விட்டுச் சென்ற சருமத்தின் பலவீனத்தை மாற்றி சருமத்துக்கு வலுவூட்ட வேண்டும்.
"மாணிபத்ரம்' எனும் ஒரு லேகியமிருக்கிறது. உங்களுக்குப் பசி நன்றாக இருந்தால், இந்த லேகிய மருந்தை காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 10 - 15 கிராம் அளவில் நக்கிச் சாப்பிடவும். குடல், ரத்தம், சருமம் ஆகிய பகுதிகளில் அடைந்து கிடக்கும் கழிவுப் பொருட்கள் வெளியேறத் தொடங்கும். இந்த மருந்தைச் சாப்பிடும்போது நல்ல பத்தியம் இருக்க வேண்டும். காலையில் புழுங்கலரிசி வேக வைத்த கஞ்சித் தண்ணீருடன் மோர் கலந்து சாப்பிட வேண்டும். மதியம் மிளகு ரஸம் சாதம், பருப்புக் கூட்டு, மோர் சாதம், இரவில் 2 -3 சப்பாத்தி, சப்ஜி ஆகியவை மட்டுமே உணவு. சுமார் 15 - 21 நாட்கள் வரை இந்த லேகிய மருந்தைத் தொடர்ந்து சாப்பிடலாம்.
அதன் பிறகுதான் அரிப்பையும், தடிப்பையும் நீக்கக் கூடிய ஆரக்வதாதி கஷாயம், திக்தகம் அல்லது மஹாதிக்தகம் கஷாயம், படோலகடு ரோஹிண்யாதி கஷாயம், படோல மூலாதி கஷாயம் போன்றவற்றில் ஒன்றை, ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட வேண்டும். வெளிப்புறப் பூச்சாக பிண்டத் தைலத்தையோ, தூர்வாதி தைலத்தையோ நமச்சலும் தடிப்பும் உள்ள இடங்களில் சதும்பத் தடவி சுமார் 1/2 - 1 மணி நேரம் காலையில் ஊறிய பிறகு குளிக்கவும். ஒரு டம்ளர் பச்சைப் பயறு, அரை டம்ளர் எலுமிச்சம் பழத்தோல் (காய்ந்தது), கால் டம்ளர் வெந்தயம் ஆகியவற்றை நன்றாகப் பொடித்து வைத்துக் கொண்டு, அதில் கொஞ்சம் எடுத்து, அரிசி வடித்த கஞ்சியுடன் அல்லது தயிர்த் தெளிவுடன் குழைத்து மூலிகைத் தைலத்தின் பிசுக்கை அகற்றப் பயன்படுத்தவும்.
சரக்கொன்னப்பட்டை, வேப்பம்பட்டை, வெட்பாலைப்பட்டை ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டிக் கொள்ளவும். சிறிது சிறிதாக ஒரு நாளில் பலதடவை பருகவும். அரிப்பையும் தடிப்பையும் நீக்கும் சிறந்த மூலிகைத் தண்ணீராகும்.
இப்படி உள்ளும் புறமும் சிகிச்சைகளைச் செய்து கொண்டே பத்திய உணவுடனும் நீங்கள் இருந்து வந்தால் உங்கள் உபாதை விரைவில் மாற வாய்ப்புண்டு.

Sunday, September 11, 2011
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மாதவிடாய்க் கால மன உளைச்சலுக்குத் தீர்வு...?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனக்கு வயது 42. 25 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு 4 அல்லது 5
நாட்களுக்கு இருக்கிறது. பணியில் உள்ளதால் 20 நாட்களுக்கு மேல் மன
உளைச்சல் உண்டாகி அதிகமாக வந்துவிடுமோ, ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்று
மிகவும் பயமாக இருக்கிறது. கருப்பையில் ச்ண்க்ஷழ்ர்ண்க் இருக்கிறது.
கருப்பையை எடுத்தே ஆக வேண்டுமா?
ந.சே.ராஜீவி, கரட்டடிபாளையம்.
ஒரு சில உணவுமுறைகள் உங்களுக்கு உதவிடக்கூடும். வெந்தயத்தை வறுத்துப்
பொடி செய்து 4 பங்கு சர்க்கரை சேர்த்து லட்டு தயாரித்து காலை மாலை வெறும்
வயிற்றில் 1 -2 லட்டுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவும். வேறு ஒரு
வழியும் இருக்கிறது. 15 கிராம் வறுத்த வெந்தயத்தில் 1 லிட்டர் தண்ணீர்
சேர்த்துக் கொதிக்கவிட்டு, 250 மி.லி ஆனதும், வடிகட்டி, காலையில் 125
மி.லி மாலையில் 125 மி.லி வெறும் வயிற்றில் குடித்துவர, உங்களுக்கு
மாதவிடாய் உரிய காலத்தில் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும்
வயிற்று வலி, இடுப்பு வலியும் குறையும். மன உளைச்சலையும் குறைத்துவிடும்.
கோதுமை, அரிசி முதலியவற்றுடன் வெந்தயத்தையும் சேர்த்துக் கஞ்சி
தயாரித்துப் பாலுடன் சாப்பிட, மாதவிடாயைச் சீராக ஏற்படுத்தித் தரும்
ஹார்மோன் சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். இதன்மூலமாக, உங்களுடைய
ச்ண்க்ஷழ்ர்ண்க் பிரச்னையும் குறைய வாய்ப்பிருக்கிறது.
பப்பாளிக் காயைத் தோல் சீவி சமைத்து உண்பதாலும் மாதவிடாய்த் தாமதத்தைப்
போக்கலாம். கறுப்பு எள்ளை லேசாக வறுத்துப் பொடி செய்து, 1-2 ஸ்பூன்
அளவில் எடுத்து, சூடான சாதத்துடன் கலந்து, நல்லெண்ணெய்விட்டுப் பிசைந்து
காலையில் உணவாக ஏற்க, உங்களுக்கு இரு நன்மைகள் கிடைக்கும். ஒன்று கருப்பை
வலுப்பெற்று மாதவிடாய் சீராகுதல், இரண்டாவது கருப்பையில் ஏற்பட்டுள்ள
ச்ண்க்ஷழ்ர்ண்க் சுருங்குதலுமாகும். கருப்பைக் கட்டியைச் சுருக்குவதில்
கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறையும் கடுகு மற்றும்
சீரகம் போன்றவற்றைத் தாளிக்க நீங்கள் கடுகெண்ணெயைப் பயன்படுத்தவும்.
வயிற்றின் மீது வெளிப்பூச்சாகவும் கடுகெண்ணெயை வெதுவெதுப்பாகப் பூசி,
காலையில் வெந்நீரில் குளித்துவர, உங்கள் உபாதை விரைவில் தீருவதற்கு
வாய்ப்பிருக்கிறது.
சுரைக்காய் கூட்டு,வாழைப் பூ வடைகறி, நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி
போன்றவை சாப்பிட உகந்தவை. ஒரு சில ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு நல்ல
பலனைத் தருபவையாக இருக்கும். அசோகாரிஷ்டம் மற்றும் புனர்நவாஸவம் எனும்
மருந்துகளை வகைக்கு 15 மிலி வீதம் கலந்து காலை இரவு உணவுக்குப் பிறகு
சுமார் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
செய்யக் கூடாத செயல்களில் இரு சக்கர வாகனத்தில் குண்டும் குழியுமான
பாதைகளில் பயணம் செய்தல், பேருந்தின் கடைசி இருக்கையில் உட்கார்ந்தோ,
அதன் அருகே நின்று கொண்டோ பயணம் செய்தல், மாதவிடாய் நாட்களில் தலைக்குத்
தண்ணீர் விட்டுக் குளித்தல், சமையல் செய்தல், கடுஞ்சொற்களைப்
பயன்படுத்துதல், அதிகக் கோபப்படுதல், துக்கப்படுதல், மாதவிடாய்த் திரவம்
அதிகம் தங்கும்படியான துணிகளை நீண்ட நேரம் களையாது அணிந்திருத்தல்
போன்றவை முக்கியமானவை.
உடல் சூட்டை அதிகரிக்கும் பட்டை, சோம்பு, கரம் மசாலா, புளித்த ஊறுகாய்,
உப்பு, தயிர், மீன், சிக்கன் வகையறா போன்றவற்றைத் தவிர்க்கவும். மனதில்
பயம் தரும் விஷயங்களை அலுவலகத்திலும் வீட்டிலும் தவிர்த்து, மனம்
அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்படியான சூழ்நிலையை வளர்த்துக்
கொள்வது நல்லது.
அடிக்கடி நஸ்ரீஹய் செய்து கருப்பைக் கட்டியின் நிலை என்ன என்று
பார்ப்பது தவறாகும். மாதவிடாய் நின்றுவிட்டால் கருப்பைக் கட்டிகள் பல
பெண்களுக்கும் தானாகவே சுருங்கிவிடும். அதனால் முன் குறிப்பிட்ட
செயல்முறைகளைக் கடைப்பிடித்தால் உங்கள் பிரச்னைக்கான தீர்வு விரைவில்
கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவதை முடிந்த
வரை தவிர்க்கவும். இரவில் படுத்துறங்கும்போது மல்லாந்தநிலையிலோ, இடது
பக்கம் சரிந்தோ படுக்கவும். மாதவிடாய் நாட்களில் குளிர்ந்த தரையிலோ,
செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட அறையிலோ படுத்துறங்குவதைத் தவிர்க்கவும்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

Subscribe to:
Posts (Atom)