மஞ்சள் காமாலை என்பது நோயா?
காமாலை என்றழைக்கப்படும், மஞ்சள் காமாலையை, பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், கண்கள் மஞ்சள் நிறமாவதை வைத்து, முன்னோர்கள் கண்டறிந்தனர். வீட்டு வைத்தியம் செய்து வந்தனர். எண்ணெய், உப்பு அற்ற உணவு அல்லது புரோட்டீன் சத்து நிறைந்த உணவுடன், ஆட்டுப்பால், கீழா நெல்லி இலை விழுது கொடுத்து வைத்தியம் செய்தனர். “டாக்டரிடம் போகாதீர்கள். ஆங்கில மருத்துவத்தில், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையே கிடையாது’ என்றும் கூறினர். ஆனால், அலோபதியில் சிகிச்சை உண்டு. “ஜானே’ என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து “ஜாண்டிஸ்’ என்ற ஆங்கில வார்த்தை உருவானது. 19ம் நூற்றாண்டில் தான், “ஜானே’ என்ற வார்த்தையே உருவானது. எல்லா காமாலையும், மஞ்சள் காமாலை அல்ல என்பதை அப்போதே மருத்துவர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கேற்ப, பாதிப்புக்கு ஏற்ப, இந்த அறிகுறியின் தன்மை மாறுபடும். சிலர் முற்றிலும் குணமடைந்தனர்; சிலருக்கு சில காலம் பிடித்தது; சிலர் மரணமடைந்தனர்.
எல்லாம் விதிப்பயன் என்று சொல்வதை விட, ஏன் இப்படி ஏற்பட்டது என்று ஆராயும்போது தான், எல்லா அறிகுறிகளும் ஒரே வகையான நோயை சார்ந்தது அல்ல என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். காமாலை என்பது நோயே அல்ல; உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறியே. ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்டு உட்பட ஸ்கேன்கள் ஆகியவற்றின் மூலம் காமாலை அறிகுறியை துல்லியமாக கண்டறியலாம். மேலும், மஞ்சளாக இருப்பவர்கள் அனைவருமே, காமாலை அறிகுறியுடன் இருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. “புளோரசன்ட்’ விளக்கின் கீழ் நிற்கும் அனைவரின் தோலும் மஞ்சளாகத் தான் தெரியும். கேரட், பப்பாளி ஆகியவை சாப்பிடும்போதும், தோலின் மேல் கெரோட்டின் படிந்து, சற்று மஞ்சளாகக் காட்சி அளிக்கும். கண் விழியின் மேல் படலத்தின் கீழ் கொழுப்பு படிந்தாலும், தூசியாலும், கண்கள் சில நேரங்களில் மஞ்சளாகத் தெரியும். இதுவும் காமாலை அல்ல. “பிலுருபின்’ என்ற நிறமி, கண் வெளிப்படலம் மற்றும் தோலில் படிந்து கறை ஏற்படும்போது தான், அதை காமாலை என்று கூற முடியும். சிறுநீர், வியர்வையிலும் சில நேரங்களில் மஞ்சள் நிறம் வெளிப்படும். ரத்தத்தில் உள்ள பழைய சிவப்பு அணுக்கள் மண்ணீரல் மற்றும் கல்லீரலில் சிதைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. அப்போது, “பிலுருபின்’ என்ற நிறமியும் வெளிப்படும். ரத்தத்தில் இந்த நிறமியின் அளவு மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தால், கண்ணில் மஞ்சள் நிறம் தென்படும். சிவப்பு அணுக்கள், அளவுக்கு அதிகமாக சிதைந்து போகும்போது, அதை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்தி, வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும் கல்லீரல், அதிக வேலைப்பளுவால் திணறும். அப்போது மஞ்சள் காமாலை ஏற்படும். பாரம்பரியமான சில நோய்கள், மலேரியா, சில மருந்து வகைகளை உட்கொள்வது ஆகியவற்றால் இது போன்று மஞ்சள் நிற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சை வேர்க்கடலையை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் கூட, சிலருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். அதில் உள்ள “அப்ளோடாக்சின்’ என்ற உட்கூறு, கல்லீரல் செல்களுக்கு விஷமாக அமைந்து விடும். சில நேரங்களில், கல்லீரலே பாதிப்படைந்து, அளவுக்கு அதிகமான பிலுருபினை வெளியேற்ற முடியாமல் போகும். பாரம்பரிய காரணங்களால் இது போன்று ஏற்படலாம். எனினும், மிக குறைந்த அளவில் தான் பாதிப்பு ஏற்படும்; உயிருக்கு ஆபத்து இல்லை.
பிறந்த குழந்தைகளுக்கு, கல்லீரல் செல்கள் போதுமான அளவு வளர்ச்சி அடையாமல் போனாலோ, தாய்க்கும் -குழந்தைக்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் இருத்தல் ஆகியவற்றால், குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம். எனினும், இது முற்றிலும் குணப்படுத்தக் கூடியதே.
ஹெப்பாடைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ, ஹெர்பஸ், லெப்டோஸ்பைரோசிஸ், சைட்டோமெகாலோ வைரஸ் ஆகியவை கல்லீரல் செல்களை பாதித்து, மஞ்சள் காமாலையை உருவாக்குகின்றன. மது குடித்தால் கல்லீரல் விஷமாகி விடும். தொடர்ந்து பல ஆண்டுகள் மது அருந்தினால், கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்படும். கல்லீரல் நாளங்களில் கல், புற்றுநோய், அடைப்பு உருவாகி தடை ஏற்படும்போது, பிலுருபின் வெளியேறுவதில் சிக்கல் உருவாகும். இதனால், போதுமான அளவிலான வெளியேற்றம் கூட தடைபட்டு விடும். இதனால் பிரச்னை உருவாகும். அனைத்து விதமான காமாலைக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்ற முடியாது. ரத்தம் மற்றும் சிறுநீரை, அறிவியல் ரீதியான பரிசோதனை செய்து, எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பிறகே, சிகிச்சை துவங்க வேண்டும். இளைஞர்களுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையில் 80 சதவீதம் ஹெப்பாடைட்டிஸ் ஏ வைரசால் உருவாகிறது. இதற்கு சிகிச்சை தேவைப்படாது. சில வாரங்களில் தானாகவே குணமாகி விடும். ஆனால், இதை வைத்து அற்புதம், அதிசய சிகிச்சை என விளம்பரப்படுத்துகின்றனர். ஹெப்பாடைட்டிஸ் ஏ மற்றும் பி ஆகிய நோய்கள் முற்றிலும் குணமாக்கக் கூடியவை. குழந்தை பிறந்த ஓராண்டு நிறைவதற்குள், ஹெப்பாடைட்டிஸ் பி தடுப்பூசி, மூன்று முறை போடப்படுகிறது. இரண்டு ஆண்டு நிறைவடைந்ததும், ஹெப்பாடைட்டிஸ் ஏ வகை நோய்க்கான தடுப்பூசி இரண்டு முறை போடப்படுகிறது. குழந்தை பருவத்தில் ஊசி போட தவறினால், வளர்ந்த பிறகு போட்டுக் கொள்ளலாம். வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் ஹெப்பாடைட்டிஸ் பி மற்றும் சி நோய்களை குணப்படுத்தி விடலாம். ஹெர்பஸ் தொற்று, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் சைட்டோமெகாலோ வைரஸ் நோய்களுக்கு குறிப்பிட்ட மருந்துகள் உள்ளன. நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தால், சில வகையான மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம். மது அருந்தாமலிருந்து, நோயை குணப்படுத்தும் மருந்துகளை சரியாக சாப்பிடவில்லை எனில், மஞ்சள் காமாலை பாதிப்பு தீவிரமாகி விடும். அறுவை சிகிச்சை மூலம் சரியாகக் கூடிய நோய்களை, ஸ்கேன், லேப்பராஸ்கோபி செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பரிசோதனையின் அடிப்படையில் சரியான சிகிச்சை அளிப்பது இந்நோய்க்கு அவசியம். அறியாமை, பயம் காரணமாக சிகிச்சையில் தாமதமானால் மரணம் கூட ஏற்படலாம். துரதிருஷ்டவசமாக பெரும்பாலானோர், சுய பரிசோதனை செய்து, போலி டாக்டர்களிடம் சென்று “இயற்கை மருத்துவம்’ செய்து கொள்கின்றனர். “ஹிட் ஆர் மிஸ்’ என்பது விளையாட்டுத்துறைக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; மனித வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான மருத்துவ முறைக்கு பொருந்தாது!
THANKS : VAYAL
Saturday, January 21, 2012
Wednesday, January 11, 2012
உடல் நலம் தொடர்பான தகவல்கள்
இதயநலம் காக்கும் உடற்பயிற்சிகள்
உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயானிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.
பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதயம் நன்கு செயல்பட வேண்டும் என்றால், தமனிகளின் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ரத்தம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுவாக இருந்து இதயத்தை நன்றாக இயங்க வைக்க முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க ஒருவரின் வயது உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப உடற்பயிற்சிறைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்பதைப் பார்க்கும் முன்பு உடலுக்கு எந்த வகையில் அவை உதவுகின்றன என்பதைப் பார்த்தவிடலாம்.
உடற்பயிற்சியின் பயன்கள்.
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது, ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் (Collateral Circulation) என்று சொல்வார்கள்.
அதெல்லாம் சரிதான். உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது.
இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும். அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும்.
ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத் தமனிகள் முழுமையாக அடைபட்டு இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது.
இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது. இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதயத் தமனி நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும்.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழார்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன.
இதயத்துக்கு ஏற்ற உடற்பயிற்சிகள்
உடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (Aerobic Exercise) என்று சொல்வதுண்டு.
இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க முடியும். இதனால் இதயமானது தனக்குத் தேவையான ரத்தத்தையும், சத்துகளையும் பெற முடியும்.
பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (Jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உல் அமைப்பு, ஓய்வு நேரம், உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சியில் Trekking, Leiú§re Walking, Race Walking, Power Malking என பலவகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு எந்த வகைப் பயிற்சி ஒத்துவருகிறதோ அதைத் தொடர்ச்சியாகச் செய்து வர வேண்டும்.
மற்ற வகையான உடற்கயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும். இப்பயிற்சியை மேற்கொள்ள ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும்.
எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் பல. அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
நடைப்பயிற்சியில் ஏற்படும் முழுப்பயனைப் பெற வேண்டும் என்றால், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் தூரத்தைப் படிப்படியாக உடலின் ஆற்றலுக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது நடக்கும் இதயத் துடிப்பின் அளவானது நிமிடத்துக்கு 100&க்கு மேல் இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் (Sˆepv) நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாம் அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே.
நடைப்பயிற்சியின் அவசியத்தை இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லியும் சிலர், நடப்பதற்கு எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என புலம்புவார்கள். அவர்களுக்கு சில அறிவுரைகள்…
நீங்கள் டி.வி.பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்றால் டி.வி. சேனல்களை மாற்ற ரிமோட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எழுந்து சென்று நேரிடையாக மாற்றலாம்.
காய்கறி மார்க்கெட்டுக்கும், பலசரக்குக் கடைக்கும் செல்ல இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்.
உங்கள் அலுவலகம், மூன்றாவது அல்லது நான்காவது மாடியில் இருந்தால் லிஃப்ட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாடிப்படிகளில் ஏறிச் செல்லலாம்.
நீங்கள் அலுவலகத்துக்கு பஸ்ஸில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் இருந்து பஸ்ஸில் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரண்டு ஸ்டாப்புக்கு முன்னால் இறங்கி நடந்து வாருங்கள்.
நீங்கள் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் பழக்கம் உடையவர் என்றால் கோயிலில் பிரகாரங்களை நன்கு சுற்றி வாருங்கள்.
மெல்லோட்டம்
மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். உடலுக்கு ஏற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப்பயிற்சியும் மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள் தங்களை மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்ள தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கிறார்கள்.
மெல்லோட்டத்தின் பயன்கள்
இதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.
இதய ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது.
ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.
ரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவானது அதிகமாவதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.
மெல்லோட்டத்துக்கான விதிமுறைகள்
விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.
நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.
மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.
மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.
சைக்கிள் பயிற்சி
இதயத்துக்கு உகந்த, உயிர்வளியைப் பெருக்கும் உடற்பயிற்சிகளில் சிறந்தது சைக்கிள் பயிற்சி. இது, குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த எளிமையான உடற்பயிற்சியாகும்.
அமெரிக்காவில், பால் டட்லி ஒயிட் என்ற மருத்துவர் சைக்கிள் பயிற்சியில் ஒரு மிகப்பெரிய புரட்சியைச் செய்திருக்கிறார். உடல் நலத்துக்கான சைக்கிள் பயிற்சி (Cycling for Health) என்ற நல இயக்கத்தைத் தொடங்கியதோடு அல்லாமல், இந்த இயக்கத்தின் விளைவாக, அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் கார்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் இவர் காரணமாக இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் அங்கு வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக சைக்கிள்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் தங்களுடைய உடல் நலத்தைப் பேணுவதற்காகப் பல மணிநேரம் இயற்கையான சூழலில், திறந்த வெளியில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வழக்கமாகும்.
பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் சைக்கிள் பயிற்சியைப் பல வகையான நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். உடல் பருமன், ரத்தமிகு அழுத்த நோய், குடல் இறக்கம், மூட்டுச்சிதைவு நோய், வாதக் காய்ச்சல் நோய், முதுகுத் தண்டுவடம் நழுவுதல், கால் பெரு நரம்பு அழற்சி போன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில், சைக்கிள் பயிற்சியையும் ஒரு முக்கியமான அம்சமாக வைத்திருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சைக்கிள் பயிற்சியை ஒருவகையான மருத்துவமுறையாகக் கையாள்கிறார்கள். சிலவகையான நோயாளிகளுக்கு அவர்கள் தங்கள் உடல் நலத்தை மீண்டும் பெற சைக்கிள் பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்கள். மேலும் நீண்டநாள்களாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் வலுவிழந்த தசைகள் மீண்டும் உயிர்பெற, சைக்கிள் பயிற்சியை அளிக்கின்றனர்.
ஹாலந்து நாட்டில் உள்ள பள்ளிகளில் சைக்கிள் பயிற்சியை விளையாட்டுக் கல்வியில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். தினமும் பள்ளி நேரத்தில் மாணவ& மாணவிகள் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இத்தகைய முயற்சியின் காரணமாக நடல் நலக்குறைவால் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ& மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகச் சொல்கின்றனர்.
அன்றாடம் சிலமணி நேரம் மேற்கொள்ளும் சைக்கிள் பயிற்சியானது, இதயத் தசைகளை நன்கு வலுவாக்குவதோடு அல்லாமல், இதயத் தசைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைப் பன்மடங்கு அதிகமாக்குகிறது என்கிறார் பால் டட்லி ஒயிட்.
நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சயாலும் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.
நீச்சல், முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும்.
உடல் ஊனமுற்றவர்களுக்குக்கூட இது மிகச்சிறந்த உடற்பயிற்சி.
உடலை வலுவாக்கவும், கிடைத்த வலுவைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகிறது.
நீச்சல் பயிற்சி, உடலில் உள்ள பலவகையான உள் உறுப்புகளுக்கும் நரம்பு அமைப்புகளுக்கும் வலுவை அளிக்கிறது.
குறைந்த காலத்தில் உடலில் உள்ள பலவகையான தசைகளுக்கு நல்ல வலுவை அளிக்கிறது.
உடலின் தேவையற்ற, அதிகமான எடையைக் குறைக்க துணை புரிகிறது.
நீச்சல் பயிற்சியின்போது நீர் உடலுக்கு இயற்கையின் தடுப்பாற்றலை அளிக்கிறது.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும்.
நீச்சலானது உள்ளத்துக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாத மனப்பக்குவத்தையும், எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்யும் மனப்பக்குவத்தையும் அளிக்கிறது.
நீச்சல் பயிற்சியின் சிறப்புகள்
நீச்சல், கவலையை மறக்க மிகச்சிறந்த மருந்தாகும். ஏனென்றால், நீந்தும்போது கவனம் முழுவதும் நீச்சலில் ஒரு முகப்படுவதால், மனிதன் தன்னுடைய கவலையை மறக்க நீச்சல் துணைபுரிகிறது.
நீச்சல், முதுகெலும்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்பெறச் செய்வதோடு, முதுகெலும்பு அமைப்புகளை வலுப்படுத்த துணைபுரிகிறது.
கடல் நீரிலும், ஆற்று நீரிலும் இயற்கையாகப் பொதிந்திருக்கும் அயனிகள, உடலுக்கு நன்மை அளிப்பதாக மருத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர்.
நீச்சல், உடலில் உள்ள மேற்புறத் தசைகளுக்கு மட்டுமின்றி உடலின் கிழ்ப்புறப் பகுதியில் உள்ள தசைகளுக்கும் ஒரே சமயத்தில் நல்ல பயிற்சியைத் தரக்கூடியது.
இதயத் தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் உதவி செய்கிறது.
thanks : http://knowingyourself1.blogspot.com/2011

Monday, December 19, 2011

Tuesday, November 29, 2011
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்-முழங்கால் மூட்டில் ஒலி
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்
பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி
முழங்கால் மூட்டில் வ... என்ன செய்ய வேண்டும்?
எனக்கு 42 வயதாகிறது. ஐந்து மாதங்களாக முழங்கால் மூட்டு வலியுள்ளது. உட்கார்ந்து எழுந்தால் "பட் பட் பட்' என்று முழங்கால் மூட்டில் இருந்து ஒலி வருகிறது. வலது கால் முழங்கால் மூட்டில்தான் அதிக வலி. அதுபோல வலது தோள் பட்டையிலும், வலது குதிகாலிலும் வலி உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் மூலம் தீர்வு கிடைக்குமா?
ஒரு வாசகி, கமலாபுரம்.
"சிலேஷக சிலேஷ்மா' என்று ஒரு பசை வஸ்து இருக்கிறது. மனித உடலிலுள்ள சிறிய, பெரிய சகல மூட்டுகளுக்கிடையே கட்டுத் தளராமல் வழவழப்பையுண்டு பண்ணிக் கொண்டு இருக்கிற இந்தப் பசை வஸ்து உங்களுக்கு வறண்டு போய்விட்டதோ? என்று தோன்றுகிறது. இந்த சிலேஷக சிலேஷ்மாவுக்கு ஏற்படும் கோளாறினால் கீல் பிடிப்பு, முடக்கு வலி முதலிய உபாதைகள் ஏற்படும். இரண்டு எலும்புகளுக்கிடையே அமைந்துள்ள இந்தப் பசையினால், உராய்வு ஏதும் ஏற்படாமல் எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன. குணங்களின் வாயிலாக செயல்களை நிகழ்த்தும் இந்த சிலேஷ்மா, வறண்டுவிடாமலிருக்க, அதன் நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், மழமழப்பு, கொழ கொழப்பு, நிலையான தன்மை போன்ற குணங்களை நீங்கள் உணவின் மூலமாகவும், செயல்களின் வாயிலாகவும், மருந்துகளின் மூலமாகவும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
முதலில் உணவைப் பற்றி ஆராய்ந்து தெளிவுறுதல் நலமாகும். நிலம், நீர் ஆகியவற்றை ஆதிக்ய பூதங்களாக்கிய சிலேஷ்மா எனும் கபதோஷத்தைப் பெற இனிப்புச் சுவை கொண்ட உணவு வகைகள் உதவிடக்கூடும். ஏனென்றால் இனிப்புச் சுவையானது, நிலம் மற்றும் நீரினால் உருவாகிறது. ஆனால் இந்த இரு மகா பூதங்களை, குடலிலிருந்து முட்டியின் ஜவ்வு வரை எடுத்துச் செல்வது எளிதல்ல. அதற்குக் காரணம், அவை இரண்டும் கனமான வஸ்துக்களாக இருப்பதுதான். அவற்றைக் கொண்டு செல்ல புளிப்பு மற்றும் உப்புச் சுவைகளை நீங்கள் மிதமாக உணவில் சேர்க்க வேண்டும். நெருப்பில் எளிதாக வேகக் கூடிய நிலம் மற்றும் நீரினால், எலும்புக்களுக்கிடையே அமைந்துள்ள சிலேஷக சிலேஷ்மா வளர்ந்து, முழங்கால் மூட்டில் ஏற்படும் "பட் பட்' என்ற சப்தம் குறைய வாய்ப்பிருக்கிறது. அரிசியை நன்றாகக் கழுவி, கஞ்சியை வடித்து, நன்கு பக்குவப்படுத்தி, அதிலுள்ள ஆவிப் புகை அடங்கிய பின், சூடான சாதத்துடன் பால், புலால் ஆகியவை கலந்து காலை உணவாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது. மதிய உணவுக்கு முன் வாழைப்பழம் சாப்பிட உகந்தது. மாலையில் அத்திப் பழமும், இரவில் உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும்.
அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தல், தரையில் அமர்தல், குளிர்ந்த நீரில் குளித்தல் போன்ற செயல்களைத் தவிர்க்கவும். சமையல் செய்வதானால் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு செய்து, முழங்கால் மூட்டுகளுக்குப் போதுமான ஓய்வு அளிப்பது நல்லது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் படுக்கையில் படுத்திருந்து, கால் மூட்டுகளுக்கு அதிக வேலைப் பளு தராமலிருப்பதால், உட்புற ஜவ்வு வலுப் பெற வழி ஏற்படும்.
"ஜடாமயாதி' என்று ஒரு சூரண மருந்து விற்பனையாகிறது. அரிசியை வேக வைத்து, வடித்தெடுத்த கஞ்சியுடன் இந்தச் சூரணத்தைக் குழைத்து, வெதுவெதுப்பாக முழங்கால் மூட்டுகளில் காலை, மாலை உணவுக்கு முன் சுமார் ஒரு மணி நேரம் பற்று இட்டு வைத்தல் மூலம், சிலேஷக சிலேஷ்மா வளர்வதற்கும், வலியைப் போக்குவதற்கும் உதவும். சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை பற்றிடலாம். நன்றாகப் பசியெடுத்துச் சாப்பிடக் கூடியவராக நீங்களிருந்தால், க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்தை, காலை, மாலை 6 மணிக்கு, வெறும் வயிற்றில், சிறிது வெது
வெதுப்பான பாலுடன் சுமார் 3 - 6 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, மூட்டு வலி குறைவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.
உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச்சுவை, எண்ணெய்ப் பசையற்ற உணவு போன்றவற்றைத் தவிர்க்கவும்; அல்லது குறைக்கவும். சைக்கிள் சவாரி, பேருந்தில் நின்று கொண்டு பயணித்தல், கால் மேல் கால் போட்டு அமருதல், அடிக்கடி கால்களை ஆட்டிக் கொண்டிருத்தல் போன்றவற்றையும் தவிர்ப்பது நலம்.
கால் மூட்டுகளிலும் தோள் பட்டையிலும் கணுக்கால்களிலும் மூலிகைத் தைலங்களைப் பூசுதல், மூலிகை இலைகளால் வேக வைக்கப்பட்ட நீரிலிருந்து வெளியாகும் நீராவியை, வலி உள்ள பகுதிகளில் காண்பித்து வியர்வையை வரவழைத்தல், வலி உள்ள பகுதிகளில் எண்ணெய் கட்டுதல் போன்ற சிறந்த சிகிச்சை முறைகளை ஆயுர்வேத மருத்துவமனைகளில் நீங்கள் செய்து கொள்வது நலமே
--
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
KRISHNAGIRI - 635 001
CELL : 99943-94610
srinivasanb2401@blogspot.com

Monday, November 14, 2011
முழங்கால் மூட்டில் வலி - ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்

Friday, November 11, 2011
மந்தமாகச் செயல்படுவதை வேகப்படுத்துவது எப்படி?
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மந்தமாகச் செயல்படுவதை வேகப்படுத்துவது எப்படி?
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனக்கு வயது 55. நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்தச் செயலையும் "சடக்'கென்று செய்ய இயலாது. சிறிது நேரம் உடலை இங்குமங்கும் நகர்த்தி பிரயத்தனம் செய்தால் மட்டுமே எச்செயலையும் செய்ய முடியும். தசைப் பகுதிகள் இறுக்கமாக இருப்பதால், படி ஏறும்போது
முதல் நான்கு படிகள் சிரமப்பட்டு ஏற வேண்டும். அதன் பிறகுதான் எளிதாக ஏற முடிகிறது. இதேபோல், உடலில் உள்ள எல்லாத் தசைப் பிரிவுகளுமே சிறிதுநேர
முயற்சிக்குப் பின்பே செயல்பட முடிகிறது. இதற்கு
ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டா? க.அழகுராஜன், விருதுநகர்.
மூளைப் பகுதியிலிருந்து இடப்படும் கட்டளைகளான "எழுந்திரு, நட, உட்கார், படு' போன்ற செய்தித் தொகுப்பினைத் தசைப் பகுதிகளில் அமைந்துள்ள நரம்புகள் ஏற்று, அதன்படி செயல்படுவதும், தோலில் ஏற்படும் தொடு உணர்ச்சியினை, அதனடியில் அமைந்திருக்கும் நரம்புகளின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்வதுமான ஓர் உணர்ச்சிகளின் போராட்டம் உயிருள்ள ஒரு மனித உடலில் எந்நேரமும் நடந்து கொண்டிருப்பது ஓர் இயல்பான நிகழ்ச்சியாகும்.
கண நேரத்தில் நடைபெறும் இச்செயல்களின் வேகமானது, உங்களுடைய விஷயத்தில் மந்தமான கதியில் நடைபெறுகிறது.
நினைவு தெரிந்த நாளிலிருந்தே இப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் கூறுவதால், இது தாய், தந்தையரின் "பீஜ தோஷத்தினால்' ஏற்பட்டுள்ளதோ என்று ஒரு சந்தேகம் எழுகிறது. "பீஜம்' என்றால் விதை என்று பொருள். நல்ல சத்தான ஒரு விதையை, பண்பட்ட ஒரு நிலத்தில் விதைத்தால், செழிப்பான ஒரு செடி வளருவதை நாம் காணலாம். அதுபோல, ஓர் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்குத் தாயின் சினைமுட்டையும், தந்தையின் விந்துவும், த்ரிதோஷங்களாகிய வாத - பித்த - கப தோஷங்களின் சமநிலையைப் பெற்றிருக்க வேண்டும். வாதம் என்னும் தோஷத்தின் ஆதிக்க குணங்களாகிய வறட்சி, குளிர்ச்சி, முறமுறப்பு, நுட்பம், அசையும் தன்மை போன்றவை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ காணப்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு அதன் தாக்கமானது மூளையிலும் தசை நரம்புகளிலும் காணும். இருந்தாலும் பெற்றோரை மட்டுமே குறை கூறுவதும் தவறாகும். நீங்கள் வளர்ந்த சூழ்நிலை, இடம், உணவுமுறைகள், செய்யும் தொழில் போன்றவையும் காரணமாகலாம்.
மூளை மற்றும் தசைப் பகுதிகளைச் சார்ந்த நரம்புகளில் அமைந்துள்ள வாயுவின் செயல்திறனைச் சீராக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. மூளை நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய க்ஷீரபலா தைலம், கார்ப்பாஸôஸ்த்யாதி தைலம், பலா குடூச்யாதி தைலம், மதுயஷ்ட்யாதி தைலம், தசை நரம்புகளை வலுப்படுத்தக் கூடிய மஹாமாஷ தைலம், பலா அஸ்வகந்தாதி குழம்பு, வாதமர்த்தனம் குழம்பு, தான் வந்திரம் தைலம் போன்றவற்றை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகித்து நீங்கள் நல்ல பலனைப் பெறலாம்.
இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை, வாத தோஷத்தை சீராக்கும் திறன் உடையவை என்பதால் இந்தச் சுவைகளை மிதமாக உணவில் சேர்க்கவும். காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை, வாதத்தின் சீற்றத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையவை என்பதால், இச்சுவை நிறைந்த உணவு வகைகளைக் குறைக்கவும். ஒவ்வொரு உணவுக்குப் பிறகும், புளிப்புச் சுவையுள்ள மோர், எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெதுவெதுப்பான தண்ணீர், புளிப்பான கருந்திராட்சை பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்துவது, வாயுவின் சீரான செயல்பாட்டுக்கு அனுகூலமானதாக இருக்கும்.
தலையில் மூலிகைத் தைலங்களை வெதுவெதுப்பாக நிரப்பி வைக்கும் "சிரோவஸ்தி' எனும் முறையும், ஆசனவாய் வழியாக செலுத்தப்படும் தைலம் மற்றும் மூலிகைக் கஷாயமுறைகளும் உங்களைப் போன்ற உபாதை உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த ஆயுர்வேத சிகிச்சை முறைகளாகும். ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியிருந்து இந்தச் சிகிச்சைகளைச் செய்து கொள்வது மிகவும் நல்லது.
உள் மருந்துகளாக விதார்யாதி கஷாயம், தசமூலம் கஷாயம், க்ஷீரபலா 101, முஸ்தாதி மர்ம கஷாயம், பிரசாரிண்யாதி கஷாயம், தான் வந்திரம் கஷாயம் போன்றவற்றை பசியின் தன்மைக்கு ஏற்ப, பாலுடனோ, வெந்நீருடனோ சாப்பிடுவது நல்லது. இதற்கும் ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும்.

Tuesday, November 1, 2011
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தீராப் பசிக்கு என்ன காரணம்?
பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி
என் வயது 21. சைவ, அசைவ உணவுகளை வயிறு முட்டச் சாப்பிட்டாலும் 15 நிமிடங்களில் மீண்டும் பசி எடுத்துவிடுகிறது. இதனால் அடிக்கடி சாப்பிடுகிறேன். இவ்வளவு சாப்பிட்டும் உடல் மெலிந்து காணப்படுகிறேன். என்னுடைய தீராப் பசிக்கு என்ன காரணம்?
அபுபக்கர், திருச்சி-8
குடிசை வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காற்று வீசாமலிருந்தால் அந்தக் குடிசை மட்டுமே எரியும். கரியிலுள்ள நெருப்பை ஒரு குழலால் ஊதி, தங்க நகையை உருக்கி ஒட்டுவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இந்த இரு உதாரணங்களின் மூலம் நாம் அறிந்து கொள்வது, நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதற்கு காற்றின் தேவை மிக அவசியமானது என்பதுதான். இதேபோலவே உங்களுடைய வயிற்றிலும் நடந்து கொண்டிருக்கிறது. பசித்தீயின் அருகில் ஸமான வாயு எனும் ஒரு வாயு செயல்படுகிறது. பசித் தீயைத் தூண்டுகிறது.
சீரணப்பை, இரைப்பை, தோஷங்கள், மலங்கள், விந்து, மாதவிடாய் இவற்றைச் செயல்படுத்தும் நரம்புக் குழாய்களில் உலாவுகிறது. இதன் உதவியால் உணவை ஏற்றுக் கொள்ளுதல், சீரணிக்கச் செய்தல், உணவைப் பிரித்தல், மலத்தைக் கீழ் நோக்கிச் செலுத்துதல் ஆகிய செயல்கள் நடைபெறுகின்றன.
ஸமான வாயுவின் தூண்டுதலின் மூலம் கொழுந்துவிட்டு எரியும் உங்களுடைய பசித் தீயில் வந்துவிழும் உணவுப் பொருட்கள் அனைத்தும் விரைவாகச் செரிக்கின்றன. ஆனாலும் உடல் ஊட்டமடையவில்லை. உணவின் சத்து உடல் உட்புறப் பகுதிகளில் சேராமல், பெருமலமாகவும், சிறுநீர் வழியாகவும், வியர்வையின் வழியாகவும் வெளியேறத் தொடங்கினால், உடல் ஊட்டம் பெறாமல், மெலிந்தேயிருக்கும். கிணற்றைத் தூர் வாரிவிட்டால், கிணற்றிலுள்ள உறைகளின் இடுக்கிலிருந்து புதிய நீர் ஊறி, புதிய தண்ணீர் நிரம்புவதைப் போல, கெட்டுப் போயுள்ள குடலின் பித்த நீரையும், காற்றையும் நீங்கள் வெளியேற்ற வேண்டும். அதற்கு ஆயுர்வேத லேகிய மருந்தாகிய கல்யாணகுலம் உதவக் கூடும்.
காலையில் குடித்த புழுங்கலரிசிக் கஞ்சித் தண்ணீர் நன்றாகச் செரித்த பிறகு, மதிய வேளையில் இந்த லேகிய மருந்தை சுமார் 15 - 20 கிராம் நக்கிச் சாப்பிட, தேவையற்ற கெட்டுப் போன பித்த - வாயு நன்றாக நீர்ப்பேதியாகி வெளியேறிவிடும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, இதுபோல சுமார் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குச் செய்து கொள்வது மிகவும் நல்லது. புதிய பித்தநீரின் வரவால் உங்களுடைய பசியானது கட்டுக்குள் வந்துவிடும். அதை மதிக்காமல் மீண்டும் நீங்கள் உணவை அதிகமாக ஏற்பது தவறாகும். "தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயளவு இன்றிப் படும்' என்ற வள்ளுவர் பெருமான் கூறியதை நினைவில் நிறுத்திக் கொள்ளவும். தன் ஜீரண சக்தியை மதிக்காமல் அளவுக்கு மீறி அதிகமாக உண்பவனுக்கு நோயும் அளவுக்கு மீறி எல்லையின்றி ஏற்படும் என்ற அவருடைய குறிப்பை மதித்துச் செயல்படவும். காலையிலும் இரவிலும் மித உணவை எளிதில் செரிக்கக்கூடிய வகையில் சாப்பிடவும். மதிய வேளையில் நன்றாகச் சாப்பிடலாம்.
விதார்யாதி கிருதம் எனும் ஆயுர்வேத நெய் மருந்தை லேசாக உருக்கி, காலை, மாலை சுமார் 15 மி.லி. 41 -48 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, ஸமான வாயுவின் சீரான செயல்பாட்டையும், பசித்தீயின் உக்ரத்தைக் குறைத்தும், உடல் தேவைக்கான அளவில் போஷணத்தையும் நிறைவாக நீங்கள் பெறலாம். அப்ரக பஸ்மம் தற்சமயம் கேப்ஸ்யூல் வடிவில் வரத் துவங்கியுள்ளது. உணவிற்கு சுமார் 1/2 - 1 மணி நேரத்துக்கு முன்பாகச் சிறிது வெதுவெதுப்பான பாலுடன் பருக, பித்த வாயுக்களின் சீற்றத்தை அடக்கி, உடலுக்கு நல்ல ஊட்டத்தையும் பெறலாம்.
உணவில் இனிப்புச் சுவையை சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளவும். மாவுச் சத்துள்ள பண்டங்கள், அதன் பிரிவுகளான சர்க்கரைகள், நெய் முதலிய சில கொழுப்புப் பண்டங்கள் இனிப்பு வகையில் அடங்கும். பித்த வாயுவை அடக்குவதில் மற்ற சுவைகளைவிட, இனிப்புச் சுவை சிறந்தது. கண்களின் தெளிவு, கேசங்களின் அடர்த்தி, தசை வலிவு, மேனி நிறம், திசுக்களின் வளர்ச்சியும் அடர்த்தியும், ரஸ - ரக்த தாதுக்கள் தோஷமற்றுத் தெளிந்திருப்பது போன்றவை இனிப்புச் சுவையின் தனிச் சிறப்புச் செயல்களாகும்.
thanks : thina mani kadhir

Subscribe to:
Posts (Atom)