Saturday, June 4, 2011

குடும்பம் அமைதி பெற

குடும்பம் அமைதி பெற
பொது:
1. குடும்ப உறுப்பினர்களிடம் உடல்நலம் மனவளம் உறுதியான நட்பு இவை நிலவினால் அமைதி நீடிக்கும்.

2. ஒவ்வொருவரும் தத்ம் கடமையை உணர்ந்து ஆற்றியும், வரவுக்குள் செலவை நிலைநிறுத்தியும் செல்வ வளத்தை காக்கலாம்.

3. தேவை அளவு, தன்மை, காலம் ஆகியவற்றில் கருத்து முரண் ஏற்பட்டால் வெளிப்படையாகவேப் பேசி அன்போடு தீர்த்துக் கொள்ளலாம்.

4. பிறர் குற்றத்தைப் பெரிது படுத்தாமையும் பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.

5. பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாததுபோல் பாவித்து ஒதுக்கிவிட்டால் அமைதி பிழைக்கும்.


தம்பதிகளுக்கு:

6. எவ்வகையிலும் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் தெரியாமல் வாழ்தல் நல்லதல்ல.

7. ஒருவரை ஒருவர் துல்லியமாக புரிந்துகொண்டால் எக்காரணத்தாலும் அன்புப் பிடிப்பு தளராது.

8. ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் சம்பாதிப்பது செலவழிப்பது சேமிப்பது பிணக்கையே கொண்டு வரும்.

9. குடும்பத் தலைவருக்கு தன்முனைப்பு சிறிதும் வேண்டாம்.

10. நிர்வாகத்திற்கு ஏற்றது அறிவுதான் (உணர்ச்சியல்ல).

11. கூட்டாளியின் சக்திக் குறைவை சகித்துக்கொண்டால் சிக்கல் எழாது.

12. வாழ்க்கைத்துணை ஒத்துக்கொள்ளும் நாள்வரை எவ்வளவு அவசியமானாலும் எதையும் தள்ளி வைத்தலே நல்லது.

13. ஒருவர் மற்றவரின் மனப்போக்கு, உடல் தேவைகளை மதித்தால் பாலுறவு வேட்பில் நிறைவு பெறலாம்.

உணர்வாளர்களுக்கு:

14. தனக்குத் கிடைத்த வாழ்க்கைத் துணை பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை (காரணம் நம் உயிராற்றலே தான் தேர்ந்தெடுத்தது).


15. சிறிய சிறிய சச்சரவுகளுக்கெல்லாம் இடம் கொடுத்தால் பிறவிக்கடல் நீந்தும் நமது நோக்கத்திற்குத் தேவையான சக்தி விரயமாகிவிடும்.

by Vethathiriyam for World Peace

No comments: