Tuesday, June 21, 2011

ஜீவகாந்தம்

ஜீவகாந்தம்
நமது உடலில் வலி, நோய், மரணம், எப்படி உண்டாகின்றன? ஏன் உண்டாகின்றன? இவற்றை நம்மால் தடுக்க முடியுமா? என்பது குறித்த அறிவு மிகவும் நுட்பமானது, அந்த அறிவை தெரிந்து கொள்வதற்கு உதவும் ஒரு தத்துவம்தான் ஜீவகாந்தம். இறையாற்றலின் சூழ்ந்தழுத்தத்தினால் பல நுண்துகள்கள் ஒன்றுகூடி பரமாணுக்களாகி, அவைகள் இறைவெளியில் சுழன்று கொண்டே இருக்கும்போது ஏற்படும் உரசலினால், பரமாணுக்களிலிருந்து இறைத் துகள்கள் அலைகளாக வெளியாகின்றன. அந்த அலைகள்தான் காந்தம், உடலுக்குள்ளாக உற்பத்தியாகிற காந்தத்தைச் ஜீவகாந்தம் என்றும், பிரபஞ்சத்தில் உற்பத்தியாகிற காந்தத்தை வான்காந்தம் என்றும் சொல்கிறோம்.
ஜீவகாந்த சக்தி நம் உடலுக்குள்ளாக இயங்குவதை நாமே உணர்ந்து கொள்ளலாம். கொஞ்சம் தளர்வாக உட்கார்ந்து கொள்ள வேண்டும், இரண்டு கைகளையும் நான்கு அங்குல இடைவெளியில் உள்ளங்கைகள் ஒன்றையொன்று நோக்குமாறு, வைத்துக்கொள்ள வேண்டும், உள்ளங்கைகளின் மேல் நினைவை வைக்க வேண்டும். முதலில் விரல்களில் விறு விறுவென்று உணர்வை உணரலாம். கொஞ்ச நேரத்தில் இரண்டு உள்ளங்கைகளுக்கும் இடையே விறுவிறுப்பான அலை ஓட்டத்தை உணரலாம். இதுதான் ஜீவகாந்த சக்தி, அப்படியே கொஞ்ச நேரத்திற்கு உள்ளங்கைகளை ஒன்றை ஒன்று தொடாமல் கொண்டு ஒன்றாகி விடுவதை காணலாம். இத்தகைய செயல்தான், காந்த இயக்கந்தான், ஒவ்வொரு செல்லிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு செல்லிலும் இல்லாமல், மொத்த உடலில் ஜீவகாந்த இயக்கம் வராது. ஜீவகாந்தம் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறபோது ஒரு செல்லானது இன்னொரு செல்லோடு இணைந்து இயக்கிக் கொண்டிருக்கிற தொடர் நிகழ்ச்சியே உடலாக இயக்கத்தில் இருக்கிறது.
ஒரு காந்தக் கல்லை எடுத்துக் கொண்டு, அதன் அருகில் ஒரு ஊசியை கொண்டு வந்தால், காந்தக் கல்லானது ஊசியை பிடித்துக் கொள்ளும், காந்தக் கல்லை ஆட்டினாலும் அவைகள் அனைத்தும் காந்தக் கல்லால் பிடித்துக்கொள்ளப்படும், போதிய அளவு காந்த ஆற்றல் இருக்குமேயானால், நான்கு ஊசிகளும் தொங்குகின்றன, ஆட்டினால்கூட அவைகள் விழுவதில்லை, அவைகள் ஏன் விழுவதில்லை அவைகள் ஒன்றோடொன்று ஒட்டப்பட்டும் இருக்கவில்லை, கட்டியும் வைக்கப்படவில்லை, அப்படியானால் எப்படி அவைகள் விழாமல் நிற்கின்றன காந்த சக்தி அவைகளுக்கிடையே சுழன்று கொண்டேயிருப்பதால், அவைகள் ஒன்றையொன்று கவர்ந்து பிடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படியே தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கின்றன. காந்தக் கல்லை ஒட்டியுள்ள ஊசியை கையில் பிடித்துக் கொண்டு, காந்தக் கல்லை எடுத்து விட்டோமானால், எல்லா ஊசிகளும் பொலபொலவென்று உதிர்ந்து விடுவதை காணலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஜீவகாந்த ஆற்றல்தான் கவர்ந்து பிடித்துக் கொண்டிருக்கிறது. ஜீவகாந்த ஆற்றல்தான் உடல் நிலைத்திருப்பதற்கும் அது ஒரே தொகுப்பாக இயங்குவதற்கும் காரணமாக உள்ளது. உடலின் எடைக்கும், செல்களின் எண்ணிக்கைக்கும் தக்கவாறு உடலைப் பராமரிப்பதற்கு போதிய அளவு ஜீவகாந்த சக்தி வேண்டும்.
by Seethamani Krishnan

1 comment:

Ram said...

அய்யா வணக்கம்,
நான் வேதாத்ரி மகரிஷி அருளிய காயகல்பம் மற்றும் அய்யா வணக்கம்,
நான் வேதாத்ரி மகரிஷி அருளிய காயகல்பம் மற்றும் உடல் பயிற்சியை பயின்று வருகின்றேன்......பயிற்சின் யின் போது உடல் உஷ்ணம் அட்கிகம் ஆகிறது மற்றும் அக்குள் பகுதிகளில் கட்டிகள் உண்டாகின்றன.....பயிற்சியை நிறுத்தினால் கட்டிகள் மறைகின்றன.இதனால் தொடர்ந்து தினமும் பயிற்சி செய்ய இயலவில்லை. இதற்கு தீர்வு என்ன....?